பதிப்புகளில்

சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த விலையில் தரமான விடுதியை வழங்கும் சென்னை ஸ்டார்ட்-அப்!

8th Dec 2017
Add to
Shares
969
Comments
Share This
Add to
Shares
969
Comments
Share

சமிப காலமாக பயணத்தின் மீது மக்களுக்கு அதிகம் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் உழைக்கும் மக்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை வெளியூரில் சென்று கழிக்கின்றனர். இதனால் இந்திய சுற்றுலா மற்றும் பயணத்துறை நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த இளைஞர் விஸ்வநாதன் Ulo Hotels என்னும் விடுதிகளை இணைக்கும் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

நிறுவனரின் ஆரம்ப பயணம்:

சென்னையை சேர்ந்த விஸ்வநாத், பிரெசிடென்சி கல்லூரியில் தன் படிப்பை முடித்தார். பொறியாளர் ஆக வேண்டும் என கனவுக்கண்ட அவர் அறிவியல் படிப்பை தான் படிக்க முடிந்தது. 2011-ல் படிப்பை முடித்த இவர் முதலில் மார்க்கெட்டிங் துறையில் தன் பயணத்தை தொடங்கி அதன் பின் சுற்றுலாத் துறையில் தன்னை அற்பணித்துக் கொண்டார்.

“என் பணிக்காலத்தில் என்னுடைய வேலை பயணிகளை எங்களிடம் உள்ள விடுதியில் தங்க வைப்பது தான். அப்பொழுதே சிறு விடுதிகளில் ஏற்படும் சிக்கல்களை நான் கவனித்தேன்,” என தன் ஆரம்ப கால அனுபவத்தை விளக்கினார்.
நிறுவனர் விஸ்வநாதன் <br>

நிறுவனர் விஸ்வநாதன்


ஆனால் அப்பொழுது விடுதியில் சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்தாலும், விருந்தோம்பலில் ஒரு விரிசல் இருந்தது, என்கிறார். இதுவே நிறுவனம் அமைக்க ஒரு தொடக்கமாக இருந்தது. நிறுவனம் அமைக்க வேண்டும் என்ற கனவு இருந்தாலும் கூட, தொழிலை இன்னும் கற்றுக்கொள்ள ஆறு வருடம் சுற்றுல்லாத் துறையில் பணிபுரிந்துள்ளார்.

Ulo Hotels தொடக்கம்:

இந்நிறுவனத்தை துவங்குவதற்கு முன்பு வெளிநாட்டவர்களுக்கு புனித பயணத்தை அமைத்துத் தரும் சுற்றுலா ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்கினார். வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் இருக்கும் புனித ஸ்தலங்களுக்கு அவர்கள் சென்று தங்குவதில் இருந்து அனைத்தையும் ஏற்பாடு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம்.

இதை வளர்க்கும் நோக்கில் இணை நிறுவனமாக துவங்கப்பட்டதே Ulo Hotels. தன் நண்பர்களுடன் இணைந்து இதைத் துவங்கினார். ஆரம்பத்தில் Ulo Hotel-ன் இலக்கு, முன்பதிவுகளை நிர்வகிக்க மற்றும் விலை கட்டமைப்பை பராமரிக்க சிரமப்படும் பட்ஜெட் விடுதிகளை இணைத்து புக்கிங்கை பெருக்குவதாகவே இருந்தது.

“ஆனால், விடுதி உரிமையாளர்கள் Ulo-வை வருவாய் ஈட்டும் மற்றொரு இணைப்பாகவே பார்த்தார்களே தவிர, தரம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை,” என்கிறார் விஸ்வநாத்

இதனால் விலை மற்றும் முன்பதிவை மட்டும் பார்க்காமல் அடுத்தக்கட்ட சிக்கல்களை தீர்க்க முன் வந்தது Ulo hotels.

Ulo-வின் வளர்ச்சி:

தற்போது உள்ள பல பட்ஜெட் ஹோட்டல்கள் மூடுவதற்கு முக்கியக் காரணம் வருவாய் இல்லாமை. அதற்குக் காரணம் அவர்கள் தங்கும் விருந்தினர்களுக்கு தரத்தை தருவதில்லை. இந்த சிக்கல்களை தீர்க்க Ulo நிறுவனம் முடிவு செய்தது.

இளம் பட்டாளத்தை கொண்ட Ulo குழு பல சந்திப்புகளுக்கு பிறகு இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக விருந்தினர்களுக்கு குறைந்த விலையில் தரமான விடுதி மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு லாபம் வரும் வகையில் ஒரு தீர்வை கொண்டு வந்தனர்.

குறைந்த விலை மற்றும் தரம், சிறந்த விருந்தினர் சேவைகள் மற்றும் பராமரிப்பு, வசதியான மற்றும் சுத்தமான படுக்கை, ஆரோக்கியமான பிராந்திய காலை உணவு மற்றும் சுத்தமான கழிப்பறை. இவை எல்லாம் தங்களிடம் இணையும் விடுதியில் இருக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

image


“மேல் கூறிய அனைத்தயும் பெற, மக்களிடம் அதிகம் சென்றடையாத விடுதிகள் மற்றும் குறைந்த தரம் உடைய விடுதி உறுப்பினர்களுடன் இணைந்து ஒன்றுசேர விடுதிகளை மேம்படுத்தினோம்.”

இந்த கூட்டு வணிகத்தின் மூலம், விடுதி உரிமையாளர்களுக்கு சீரான புக்கிங், நிலையான வருவாய், பயிற்சி பெற்ற ஊழியர்கள், தரமான பராமரிப்பு, நிலையான மறுஆய்வு மேலாண்மை மற்றும் விருந்தினர்களுக்கு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதிகளை வழங்குவோம் என Ulo உறுதி அளித்தது.

“இதன் மூலம் 40% க்கும் குறைவான ஆக்கிரமிப்புகளை கொண்டிருந்த விடுதிகள் தற்பொழுது உயர்ந்து தரமான நிலையில் உள்ளது,” என்கிறார் விஸ்வநாத்.

இந்த கூட்டு அமைப்பே தங்களை சந்தை போட்டியாளர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது என்கிறார் இவர். ஆகஸ்ட் 2016-ல் தொடங்கிய இந்நிறுவனம், ஓராண்டுக்குள் வளர்ச்சி பெற்று இன்று ஊட்டி, கொடைக்கானல், கூர்க், கொல்லிமலை மற்றும் ஏலகிரி ஆகிய ஐந்து சுற்றுல்லா தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

அடுத்தக்கட்ட திட்டங்கள்:

“எங்களது முக்கிய நோக்கம் குறைந்த விலையில் சிறந்த அனுபவத்தை தருவது மட்டுமே. டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் மக்களுக்கு ஏற்ற குறைந்த விலையில் விடுதி வழங்குவது தான்.”

தற்பொழுது ஏழு நகரங்களில் 170-க்கும் மேலான விடுதி அறைகளை இந்நிறுவனம் இயக்குகிறது. இன்னும் ஐந்து ஆண்டுக்குள் 80 நகரங்களில் குறைந்தது 6000 விடுதி அறைகளை இணைப்பதே இவர்களின் நோக்கம் ஆகும். மேலும் இந்தியா முழுவதும் Ulo நிறுவனத்தை அமைக்கவே இக்குழு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

வலைதள முகவரி: Ulo Hotels

Add to
Shares
969
Comments
Share This
Add to
Shares
969
Comments
Share
Report an issue
Authors

Related Tags