கொரோனா பெருந்தொற்று சூழலில் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடவது எப்படி?

By YS TEAM TAMIL|14th Nov 2020
பட்டாசு வெடித்து சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கான வழிமுறைகளை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

முன்னெப்போதும் கேட்டிறாத வகையில் இந்த ஆண்டு அனைத்து பண்டிகைகளுமே கொரோனா வைரஸ் பெருந்தொற்று உடனேயே கொண்டாடி வருகிறோம். தீபாவளி என்றாலே பட்டாசுதான். ஒவ்வொரு ஆண்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவோம். இதனால் சாலைகள் புகை மூட்டத்தால் சூழ்ந்திருக்கும். அபாயகரமான காற்று மாசுபாடுகளுடன் பண்டிகையைக் கொண்டாடுவதே நமது வழக்கமாக இருந்து வருகிறது.


கடந்த ஆண்டு தீபாவளியின்போது தலைநகர் டெல்லியில் காலை 9 மணிக்கு 313 என இருந்த காற்று தர குறியீடு (Air Quality Index) மதியம் 2.30 மணியளவில் மிகவும் மோசமடைந்து 341.29 ஆக பதிவானது.


வழக்கமாகவே தலைநகர் டெல்லியில் காற்று மாசு எப்போதும் அதிகமாகவே இருக்கும். தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு மேலும் அதிகரித்து மோசமடைகிறது. டெல்லி தவிர சென்னை, பெங்களூரு, லக்னோ போன்ற பல்வேறு நகரங்களில் காற்று மாசு பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

2
பட்டாசு வெடிக்கும்போது கார்பன் மோனோக்சைட், ஓசோன், சல்ஃபர் டயாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட் போன்ற நச்சுத்தன்மை நிறைந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியாகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி மனிதர்களின் ஆரோக்கியத்தையும் குலைக்கிறது. குறிப்பாக இந்த வாயுக்களால் மனிதர்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் கட்டுக்குள் வராத நிலையில் பட்டாசுகள் வெடித்து தீபாவளியைக் கொண்டாடுவது நோய் தொற்று பரவலை அதிகரிக்கக்கூடும். இதைக் கருத்தில் கொண்டே ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம், ஹரியானா, டெல்லி, கர்னாடகா போன்ற மாநிலங்களில் பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க அம்மாநில அரசுகள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


அதேசமயம் பட்டாசு வெடிக்காத காரணத்தால் பண்டிகையை உற்சாகமின்றி, களையிழந்து கொண்டாடவேண்டும் என்பது பொருளல்ல.

3

எனவே ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் பண்டிகையைக் கொண்டாடுவற்கான வழிமுறைகள் குறித்து நிபுணர்கள் சிலரிடம் சோஷியல்ஸ்டோரி ஆலோசனை பெற்றது. அவை இதோ உங்களுக்காக:

பட்டாசு வேண்டாமே!

பட்டாசு வெடிக்காமல் போனால் கொண்டாட்டம் இல்லை என்கிற மனநிலையை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். தீபாவளியைக் கொண்டாட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பட்டாசு வெடிக்காமல் கொண்டாடுவது கடினம் அல்ல.

பட்டாசு வெடிப்பதால் நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனங்கள் வெளியேறுகின்றன. இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
4

பாட்டியா மருத்துவமனை மற்றும் மும்பையில் உள்ள மற்ற ஹெல்த்கேர் மையங்களில் பணியாற்றும் நெஞ்சு மற்றும் நுரையீரல் நிபுணர், மருத்துவர் ஜீனம் ஷா விவரிக்கும்போது,

“பட்டாசுகள் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது. மாசுபாடு காரணமாக மனிதனின் உடல் உறுப்புகளில் அதிகம் பாதிப்படைவது நுரையீரல். கோவிட்-19 தொற்று நுரையீரலை தாக்குகிறது என்பதால் வறட்டு இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் நிலையை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது,” என்றார்.

மேலும் ஏற்கெனவே தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்.

சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்காத மாற்றாக பசுமை பட்டாசுகள் சந்தைகளில் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி தற்போது புதுமையான விதை பட்டாசுகள் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இதுபோன்ற பாதுகாப்பான மாற்று தயாரிப்புகளைப் பயன்படுத்தி மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

5

ஆரோக்கியமாக சாப்பிட்டு ஆரோக்கியமானவற்றையே பரிசளிக்கலாமே!

தீபாவளி என்றாலே நாம் வீட்டில் பலகாரங்கள் செய்து மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வோம் இல்லையா? கொரோனா பரவல் காரணமாக நாம் அதிகம் வெளியில் செல்லாத சூழலில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் நண்பர்களையும் நெருக்கமானவர்களையும் ஆச்சரியப்படுத்தலாம்.

6
ஆரோக்கியான உணவு உட்கொள்ளவேண்டும்; நோய் எதிர்பாற்றலை அதிகரித்துக்கொள்ளவேண்டும்; இவையே மருத்துவர்களின் தொடர் அறிவுறுத்தலாக இருந்து வருகிறது.

பிரபல ஊட்டச்சத்து நிபுணரான கவிதா தேவ்கன் ஆரோக்கியமானவற்றை பரிசளிப்பது குறித்து பரிந்துரைக்கிறார்.

7
“மற்றவர்களின் தேவையறிந்து பரிசளிப்பது ஒரு கலை. ஆரோக்கியம் முக்கியமானதாக கருதப்படும் இன்றைய பெருந்தொற்று சூழலில் தேன், நட்ஸ், மூலிகைகள், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் போன்றவற்றை பரிசளிக்கலாம். இவைதவிர வீட்டிற்குள் வைக்கப்படும் செடிகள், கார்டன் கிட், இயற்கையான ஏர் பியூரிஃபையர், தேன் மெழுகு கொண்டு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் போன்றவற்றை பரிசளிக்கலாம்,” என்கிறார்.

காற்றின் தரம் குறித்த தரவுகளை அறிந்துகொள்ளலாமே!

உலகில் அதிகம் மாசுபட்ட 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. அதேபோல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் காற்றை மாசுபடுத்துகிறது.


காற்றின் தரம் குறித்த தகவல்களை அறிந்துகொள்வது முக்கியம் எனும் நிலையில் அவற்றை எப்படித் தெரிந்துகொள்வது?

8

இந்த முக்கியத் தகவல்கள் மக்களைச் சென்றடைய உதவும் வகையில் பெங்களூருவைச் சேர்ந்த Ambee ஸ்டார்ட் அப் இதற்கான தரவுகளையும் டூல்களையும் வழங்குகிறது.


2017-ம் ஆண்டு மதுசூதனன் ஆனந்த், அக்‌ஷய் ஜோஷி, ஜெய்தீப் சிங் பச்சர் ஆகியோர் நிறுவிய இந்த ஸ்டார்ட் அப் சென்சார்கள், ஓபன் சோர்ஸ் அரசாங்க வலைதளங்கள், செயற்கைக்கோள் படங்கள் போன்றவற்றிலிருந்து காற்றின் தரம் குறித்த தரவுகளைப் பெற ஹைப்ரிட் மாடலைப் பயன்படுத்துகிறது.

9
“நம் சுற்றுவட்டாரப் பகுதியின் காற்றின் தரம் குறித்த தரவுகளை பரிசோதிப்பது அவசியம். குறிப்பாக பெருந்தொற்று பரவல் சூழலிலும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களிலும் காற்று மாசு அதிகரிக்க வாய்ப்புண்டு. காற்றின் தரம் குறித்து தெரிந்துகொள்வதால் மருத்துவ ரீதியாக ஏற்படும் ஆபத்துகளைப் புரிந்துகொள்ளலாம். இதனால் மருத்துவ செலவு குறைவதுடன் சரியான நேரத்தில் சரியான தீர்மானங்கள் எடுக்கவும் உதவும்,” என்கிறார் Ambee இணை நிறுவனர் அக்‌ஷய் ஜோஷி.

ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா