குழந்தைகள் உரிமை தினத்தை கொண்டாடும் ‘குழந்தை தலைவர்கள் விருதுகள் 2019’

உடனே விண்ணப்பியுங்கள்: குழந்தை நேய பணிகளைச் செய்யும் குழந்தைகளையும் மேலும் அவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர், காவலர், பள்ளி, குடும்பம் மற்றும் கிராமங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்க உள்ளனர்.

8th Oct 2019
 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

இளைஞர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் 30ஆம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் உரிமை தினத்தை கொண்டாடும் விதத்தில் ’குழந்தை தலைவர் விருதுகள் – 2019’ என்னும் நிகழ்வின் மூலம் குழந்தை நேய பணிகளைச் செய்யும் குழந்தைகளையும் மேலும் அவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர், காவலர், பள்ளி, குடும்பம் மற்றும் கிராமங்களை அங்கீகரித்து கவுரவிக்க உள்ளனர்.


10-17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேற்கொண்டு கீழ் குறிப்பிட்டுள்ள குழந்தை தலைவர் மற்றும் குழந்தை நேய விருதுகளுக்கு புதுச்சேரி, சென்னை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அவர்களது விருது வகைக்கேற்ப விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

child award

விருதின் வகைகள்

குழந்தை தலைவர் விருதுகள்

 • அன்னை தெரசா விருது
 • ஜீரோ பில்லிமோரியா விருது
 • எரிக் எரிக்சன் விருது
 • மலாலா யூசப்சாய் விருது
 • அப்துல் கலாம் சுற்றுசூழல் நட்பு விருது
 • நெல்சன் மண்டேலா தகவல் தொடர்பாளர் விருது


குழந்தை நேய விருதுகள்

 • குழந்தை நேய ஆசிரியர் விருது
 • குழந்தை நேய காவலர் விருது
 • குழந்தை நேய பள்ளி விருது
 • குழந்தை நேய குடும்ப விருது
 • குழந்தை நேய கிராம விருது


விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 30-11-2019. விண்ணப்பங்களை கீழ்கண்ட அலுவலக முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது WWW.TYCL.ORG.IN என்னும் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி எண். 17, பூக்கார தெரு, முத்தியால்பேட்டை, புதுச்சேரி-3. விருது வழங்கும் விழா 14-12-2019 அன்று புதுவை கம்பன் கலை அரங்கத்தில் நடக்க உள்ளது. ’குழந்தை தலைவர் விருதுகள் – 2019’ விழாவின் ஆன்லைன் பார்ட்னராக யுவர்ஸ்டோரி தமிழ் உள்ளது.


மேலும் தகவல்களுக்கு தகவல் தொடர்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம். +917339222100, 0413-2224243. • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Latest

Updates from around the world

Our Partner Events

Hustle across India