மொரட்டு சிங்கில்களே... உங்களுக்கே இந்த கரு கரு 'சிங்கில்ஸ் தோசை'

2020யிலும் கமிட் ஆகாமல் சிங்கிளாக இருப்பவர்களுக்கு காதலர் தினக் கொண்டாட்டம் கடுப்பா இருக்கா? உங்களுக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?

13th Feb 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

உலகெங்கிலும் இருக்கும் காதலர்கள் ஒரே நாளில் தங்களது காதலைக் கொண்டாடும் பிப்ரவரி 14ம் தேதிக்காக ஜோடிகள் புதுப்புதுத் திட்டங்களால் அந்த நாளை சிறப்பானதாக்கிக் கொள்வார்கள்.


மால், தியேட்டர், கோவில், பார்க் என எங்கு பார்த்தாலும் ஜோடியாக திரிபவர்களை பார்த்து கடுப்பாகும் முரட்டு சிங்கிளா நீங்க? 2020ல் நாம மட்டும் சிங்கிளாவே இருக்கோமே பிப்ரவரி 14 வருதே எப்ப(டி) கொண்டாடுவது என்று ஏங்குகிறீர்கள். உங்களுக்கும் ஒரு ஸ்பாட் இருக்கு.

Black dosa

பட உதவி: Irfans view youtube

சென்னை (A2B) அடையாறு ஆனந்த பவன் நம்ம சிங்கில்ஸ்களுக்காகவே ஸ்பெஷல் சிங்கேனச்சர் தோசையாக கருப்பு நிறத்தில் ’சிங்கில்ஸ் தோசை’ என அறிமுகம் செஞ்சுருக்காங்க.


வழக்கமா தோசைன்னா வெள்ளை, மஞ்சள் அல்லது காய்கறிகள் கலவைகளால் பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட கலரில் தான் பார்த்திருப்பீங்க. கருப்பு நிறத்துல தோசையா, அது எப்படி இருக்கும்னு யோசிக்கிறீர்களா?


சென்னை அடையாரில் உள்ள ஆனந்த பவன் ஹோட்டல் பிப்ரவரி 10 முதல் 16 வரை இந்த சிறப்பு கருப்பு தோசையை சிங்கிள்ஸ் தோசை எனும் பெயரில் வழங்கி வருகிறது. சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமடைந்த இந்த தோசை, வழக்கமான மாவில் செய்யப்பட்டாலும் அதில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் இந்த கருப்பு நிறத்திற்கு காரணம்.


சிங்கில்ஸ் தோசை பற்றி A2B இயக்குனர் விஷ்ணு சங்கர் யுவர் ஸ்டோரி தமிழிடம் கூறுகையில், “சிங்கிள்களை இலக்காக வைத்து சிங்கில்ஸ் தோசை என்ற உணவை அறிமுகம் செய்தோம். பிப்ரவரி 10ம் தேதி முதல் எங்களின் வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஓஎம்ஆர், அடையாறு – எம்ஜி ரோடு, கேம்ப் ரோடு–கிழக்கு தாம்பரம், குரோம்பேட்டை, போரூர், கூடுவாஞ்சேரி கிளைகளில் சிங்கில்ஸ் தோசை விற்பனை நடக்கிறது.

”தோசை கருப்பாக இருப்பதற்குக் காரணம் அதில் சேர்க்கப்படும் கரித்தூள். கரித்தூள் என்றால் விறகுக்கரியல்ல தேங்காயைச் சுட்டு அந்த கரித்தூள் மாவில் சேர்க்கப்பட்டு தோசையாக வார்க்கப்படுகிறது,” என்றார்.
சிங்கிள்ஸ் தோசை

இந்த கருப்பு தோசை சிங்கிள்ஸ்களின் உடைந்த இதயத்தை ஓட்ட வைக்குமா என்பது தெரியவில்லை, ஆனால், அவர்களின் இதயத்திற்கும் உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் தரும். இந்த தோசையில் கரித்தூள் சேர்க்கப்பட்டுள்ளதால் சிங்கிள்ஸை இளமையாக இருக்க வைக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். Detoxificationக்கு இந்தத் தோசை மிகவும் நல்லது, எளிதில் செரிமானமும் ஆகிவிடும்.


சிங்கிள்ஸ் தோசை என்ற பெயருக்கு ஏற்றாற் போல சிங்கிள் தோசை மட்டும் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில், edible activated charcoal சேர்க்கப்படுவதால் அதிகமாக இந்த தோசையை சாப்பிடுவதால் உடலில் உள்ள நல்ல சத்துக்களும் சேர்ந்து வெளியேறக்கூடும்.

இந்த தோசையின் விலை ஒரு பிளேட் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிங்கில்ஸ் தோசை சாப்பிடுபவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார் விஷ்ணு சங்கர்.

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India