Oyo நிறுவனம் மீது மோசடி வழக்கு: ஹோட்டல் அதிபர் மீது பதில் நடவடிக்கை எடுக்க ஒயோ திட்டம்!

பெங்களூருவைச்சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவர், ஒயோ நிறுவனம் அறைகளுக்கான வாடகையை அளிக்கவில்லை என புகார் அளித்துள்ளார்.

7th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், ’ஒயோ ஹோட்டல்ஸ் & ஹோம்ஸ்’ நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் மற்றும் ஆறு பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் குறிப்பிட்ட மாதங்களாக அறைகளுக்கான வாடகை அளிக்கவில்லை என காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.


ஒயோ


பெங்களூருவில், டோம்லூரில் ’ரோக்செல் இன்’ நடத்தி வரும், பெட்ஸ் பெர்னாண்டஸ், ஒயோ நிறுவனம் அறைகளை முன்பதிவு செய்திருந்ததாகவும், மாதம் ரூ.7 லட்சம் அளிப்பதாக ஒப்புக்கொண்டதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

இருப்பினும், மே மாதம் முதல் ஒயோ நிறுவனம் வாடகை அளிக்கவில்லை என்றும், இதன் மூலம் ரூ.35 லட்சம் ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரித்தேஷ் அகர்வால் தவிர, ஒயோ தெற்கு தலைவர் ரோகித் ஸ்ரீவத்ஸ்வா, வர்த்தகப் பிரிவு தலைவர் மதுவேந்திர குமார், நிதி அதிகாரிகள் பிரதீக் அகர்வால், மஞ்சீத் சிங் மற்றும் மிரிமோனி சக்ரவர்தி ஆகியோர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.


சிவில் பிரச்சனை ஒன்றை பரபரப்பாக்கி, கவனத்தை ஈர்க்க தவறான வழிமுறையை நாடியதாக பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர் மீது பதில் புகார் அளிக்க இருப்பதாக ஒயோ ஹோட்டல்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

“எங்கள் வழக்கறிஞர்கள் இந்தப் பிரச்னையை கவனித்து வருகின்றனர். முறையற்றதாக மற்றும அவதூறாக இருக்கும் இந்த புகார் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம், என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர் மீது உரிய சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

"எப்போதும் சட்டத்தை பின்பற்றி நடக்கிறோம். ஹோட்டல் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் நலனை மனதில் கொண்டு செயல்படுகிறோம்” என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“செப்டம்பர் மாதம் எப்.ஐ.ஆர் தவறாக பதிவு செய்யப்பட்ட இதே போன்ற வழக்கில், கர்நாடக நீதிமன்றம், தடை விதித்தது. எனவே, நீதித்துறை, மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது,” என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது, இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில், 18,000 ஹோட்டல்களில், 2,70,000 அறைகளுக்கு மேல் பெற்றிருப்பதாக ஒயோ கூறுகிறது. சராசரியாக, ஒயோவுடன் தொடர்பு கொண்டுள்ள ஹோட்டல்களில், 75 சதவீத ஹோட்டல்கள், மும்மடங்கு பயன்பாடு அதிகரிப்பை பெறுவதாகவும், லாபமும் கணிசமாக அதிகரிப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


2019 ஏப்ரல் மாதம், ஒயோ நிறுவனம், இந்தியாவில் ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் இலக்குகளை அடைய, தனது 18,000க்கும் அதிகமான ஹோட்டல்களுக்கு ஒயோ பாண்டர் என்கேஜ்மெண்ட் நெட்வொர்க்கை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.


செய்தி பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Our Partner Events

Hustle across India