Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

சென்னை ஸ்டார்ட்-அப் Bversity சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் இடமிருந்து ரூ.1.5 கோடி நிதி பெற்றது!

துறை சார்ந்த பயிற்சி மூலம் உயிரி நுட்பத்துறையில் மாணவர்கள் திறன் பெற்று விளங்கிட உதவும் பாடத்திட்டங்களை வழங்க Bversity திட்டமிட்டுள்ளது.

சென்னை ஸ்டார்ட்-அப் Bversity சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் இடமிருந்து ரூ.1.5 கோடி நிதி பெற்றது!

Wednesday February 01, 2023 , 2 min Read

சென்னையைச் சேர்ந்த கல்வி நுட்ப நிறுவனமும், இந்தியாவின் முன்னணி உயிரி நுட்ப இணைய கல்லூரியுமான 'பிவெர்சிட்டி' (Bversity) தங்களுக்கு விதை நிதி கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

நேட்டிவ் ஏஞ்சல் நெட்வொர்க் மற்றும் கிஸ்ஃப்ளோ நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் தலைமை வகித்த இந்த நிதிச்சுற்றில் இந்நிறுவனம் ரூ.1.50 கோடி நிதி திரட்டியுள்ளது.

நாகராஜ் பிரகாசம், தலைவர், NAN, ஆண்டி கிரி, சி.இ.ஓ, Soft Square, பிரபாத் விவேகானந்தன், இயக்குனர், Richmond Hospitals, அசோக் பக்தவச்சலாம், தலைவர், KG Group, ரஞ்சித் சக்கத், சி.இ.ஓ, Ninja Media, சதீஷ் குமார், தலைவர், Milky Mist மற்றும் இந்தியா, அமெரிக்க ஏஞ்சல் முதலீட்டாளர்கள் இந்த சுற்றில் பங்கேற்றனர்.

Bversity

2022ல், சுதர்சன்.வி. (நிறுவனர், சி.இ.ஓ), ராகுல் ஜகநாதன் (இணைய நிறுவனர், முதன்மை கற்றல் அதிகாரி), காட்வி இமானுவேல், (இணை நிறுவனர், சி.எம்.ஓ), சாய்கணேஷ்.வி. (இணை நிறுவனர், சி.எப்.ஓ) ஆகிய நான்கு நண்பர்கள் இணைந்து, சென்னையில் உயிரி நுட்பத்தில் தொடர்புள்ள திறன்களை கற்றுத்தருவதற்காக வடிவமைப்பு கற்றல் மற்றும் மாஸ்டர் கிளாஸ் பாடத்திட்டங்களை அளிக்கும் Bversity எனும் இந்நிறுவனத்தை துவக்கினர்.

இந்த பாடத்திட்டங்கள் குறுகிய காலத்தில் உயிரி நுட்பத் துறையில் பொருத்தமான பணிகளுக்கான திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெவர்சிட்டி; வாழ்க்கை அறிவியல் துறையில், கல்வி நிறுவனங்களுக்கும், துறைக்கும் உள்ள இடைவெளியை கற்றல் திட்டங்கள் மூலம் குறைக்க உதவுகிறது.

இந்த நிதியை கொண்டு, Bversity அணியை உருவாக்க, பயனாளிகள் நட்பான, நம்பிக்கையான கல்விநுட்பம் சார்ந்த மாஸ்டர் கிளாஸ் பாணியிலான பாடத்திட்டங்களை அளிக்க உள்ளது.

“உயிரி நுட்பத்திற்கான மெய்நிகர் ஸ்டான்போர்டு பல்கலையாக Bversity உருவாகும் வாய்ப்புள்ளது. மேலும், நான்கு நிறுவனர்களின் படைப்பூக்கம், சிக்கனம் மற்றும், நட்புறவு வெற்றிகரமான அணியாக அமைகிறது,” என கிஸ்புளோ சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம், துறை சார்ந்த வல்லுனர்களுடன் இணைந்து 3 முதல் 12 மாதங்கள் வரையான பாடத்திட்டங்களை வழங்குகிறது. அதைத்தொடர்ந்து டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளையும் வருங்காலத்தில் துவக்க திட்டமிட்டுள்ளது.

”உயிரி நுட்பத் துறை 2025ல் 250 பில்லியன் டாலர் அளவுக்கு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் எட்டு மடங்கு வளர்ச்சியை பார்க்கிறோம். முன்னணி வல்லுனர்களைக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த உயிரி நுட்பக் கல்வி நிறுவனத்தை உருவாக்க விரும்புகிறோம்,” என இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ வி.சுதர்சன் கூறியுள்ளார்.

Bversity, ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரி நுட்பத் திறன் கொண்டவர்களை மூன்று ஆண்டுகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. சென்னையில், 5ம் தேதி, பயோகான்கிளேவ் வடிவில் தனது பிரத்யேக மாஸ்டர் கோர்ஸ்களை துவக்க திட்டமிட்டுள்ளது.


Edited by Induja Raghunathan