சென்னை நிதி நுட்ப நிறுவனம் AssetPlus ரூ.28 கோடி நிதி திரட்டியது!

சென்னை நிதி நுட்ப நிறுவனமான AssePlus, இன்கிரெட் மற்றும் நிதின் காமத் பங்கேற்ற சுற்றில் 3.6 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
0 CLAPS
0

மியூச்சுவல் பண்ட் விநியோக நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப மேடையாக திகழும் சென்னையைச் சேர்ந்த நிதி நுட்ப நிறுவனமான 'அசெட்பிளஸ்' (AssetPlus) 3.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.28 கோடி) நிதி திரட்டியுள்ளது.

இந்த நிதி சுற்றில் InCred நிறுவனத்தின் பூபேந்தர் சிங் மற்றும் ஜீரோதா நிறுவனத்தின் நிதின் காமத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தனது தொழில்நுட்ப மேடையில் மேலும் சேவைகளை அறிமுகம் செய்யவும், வர்த்தக விரிவாக்கத்திற்கும் இந்த நிதியை பயன்படுத்திக்கொள்ள இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசெட்பிளஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு ஐஐடி சென்னை பட்டதாரி அவானிஷ் ராஜ் மற்றும் விஷ்ராந்த் சுரேஷ் ஆகியோரால் துவக்கப்பட்டது. மியூச்சுவல் பண்ட் விநியோக நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வர்த்தகச் சேவையை நிறுவனம் அளித்து வருகிறது. பயனாளிகள் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யவும் வழி செய்கிறது.

1500க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்ட் விநியோக நிறுவனங்கள் தங்கள் சேவையை பயன்படுத்தி வருவதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இந்நிலையில், கிடைத்துள்ள நிதி இதன் வளர்ச்சிக்கு மேலும் உதவும் எனக் கருதப்படுகிறது.

”இந்திய மியூச்சுவல் பண்ட் துறை நல்ல வளர்ச்சி கண்டு வந்தாலும், 3.3 கோடி மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த முதலீட்டாளர் பரப்பு வளர வேண்டும் எனில், மியூச்சுவல் பண்ட் விநியோகிஸ்தர் பரப்பு வளர வேண்டும். ஆனால், இன்று மியூச்சுவல் பண்ட் விநியோகிஸ்தர்களுக்கு அவர்கள் வர்த்தகத்தை வளர்ப்பதற்கான போதுமான ஆதரவு இல்லை. இந்த தேவையை நிறைவேற்றும் வகையில் AssetPlus செயல்பட்டு வருகிறது,” என இது தொடர்பான செய்திக்குறிப்பில் ஜீரோதா சி.இ.ஓ நிதின் காமத் கூறியுள்ளார்.

இந்த பயணத்தில் அசெட்பிளஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் மகழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest

Updates from around the world