சென்னை நிறுவனம் ‘Blaer Motors’ சென்னை ஏஞ்சல்ஸ் இடமிருந்து ரூ.2.61 கோடி நிதி திரட்டியது!

பிலேயர் மோட்டார்ஸ், தனது உள்கட்டமைப்பை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வலுவாக்கி கொள்ள, இந்த நிதியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
0 CLAPS
0

ஏஞ்சல் முதலீட்டு குழுமமான, தி சென்னை ஏஞ்சல்ஸ் (TCA), என்.ஐ.டி- திருச்சியில் உருவாக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான Blaer Motors-இல் ரூ.2.61 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

“இது எங்களுக்குக் கிடைக்கும் முதல் சுற்று முதலீடாகும். Blaer மீது நம்பிக்கை வைத்ததற்காக எங்கள் முதலீட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆட்டோமோட்டிவ் துறையில் அவர்கள் நிபுணத்துவத்தை மதிக்கிறோம். இது எங்கள் பொருள் மற்றும் வர்த்தக உத்தியை மேம்படுத்தி, சந்தையில் எங்கள் நிலையை வலுவாக்கிக் கொள்ள உதவும்,” என்று பிலேயர் மோட்டார்ஸ் இணை நிறுவனர் அபினேஷ் ஏகாம்பரம் கூறியுள்ளார்.

பிலேயர் மோட்டார்ஸ், எங்கள் உள்கட்டமைப்பை வலுவாக்கிக் கொள்ள, ஆய்வு மற்றும் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வலுவாக்கிக் கொள்ள இந்த நிதியை பயன்படுத்திக்கொள்ளும்.

மோட்டார் சைக்கிள்களுக்கான ஹைபிரிட் தொழில்நுட்பத்தை மேலும் சிறப்பாக்குவதில் கவனம் செலுத்தி, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் லேசான ரக வாகன பிரிவில் விரிவாக்கம் செய்வதே எங்கள் நோக்கம்.

”ஐரோப்பிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டோமேட்டிவ் துறையில் உள்ளூர் தொழில்நுட்பத்தை வழங்கும் இந்திய நிறுவனமாக பிலேயர் மோட்டார்ஸ் திகழ் வேண்டும் என்பது எங்கள் விருப்பம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

நிதி

2014ல் நான்கு பொறியியல் பட்டதாரிகளால் துவக்கப்பட்ட பிலேயர் மோட்டார்ஸ், போக்குவரத்துத் துறையில் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கி வழங்குகிறது. நுகர்வோர் தேவையை நிறைவேற்றும் வகையிலான செலவு குறைந்த தூய்மையான, செயல்திறன் மிக்க தீர்வுகளை அளிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் டிரைவ் தொழில்நுட்பத்தில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மூலத்தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

”இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான ஹைபிரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் புதுமையாக்கம் நிறைந்த நிறுவனமாக பிலேயர் மோட்டாரஸ் உருவாகியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம், வாகனங்களில் செயல்திறன் மற்றும் எரி பொருள் திறனை மேம்படுத்தும். இந்தியா மிகப்பெரிய இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன சந்தையாக திகழ்வதால், இந்தத் தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,” என தி சென்னை ஏஞ்சல்ஸ் முதலீட்டு இயக்குனர் மற்றும் இந்த நிதிச்சுற்றில் தலைமை வகித்த, ABAN Infrastructure Ltd, வர்த்தக வளர்ச்சி தலைவர் வசந்த குமார் தெரிவித்தார்.

“நீடித்த நிலையான போக்குவரத்து மற்றும் மொபிலிட்டி கருத்தாக்கத்தை கொண்டிருப்பதால், பிலேயர் மோட்டார்சை ஆதரிக்கிறோம். மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயல் திறன் காரணமாக ஆடோமேட்டிவ் துறையில் நிறுவனத்திற்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நம்புகிறோம், என தி சென்னை ஏஞ்சல்ஸ் சி.இ.ஓ சந்திரன் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

கட்டுரை: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world