அனில் ஃபுட்ஸ் மற்றும் ஏஞ்சல் முதலீடு மூலம் நிதி திரட்டியுள்ள InterviewDesk
false
true
மனிதவள மேம்பாட்டு நுட்பம் சார்ந்த மற்றும் On Demand தொழில்நுட்ப நேர்காணல் மேடை 'இன்டர்வியூடெஸ்க்' (InterviewDesk), அனில் ஃபுட்ஸ் செயல் இயக்குனர் சுகுமார் நடராஜன் மற்றும் அமேசான் முன்னால் லீடர் லட்சுமி நாராயணன் வெங்கடாச்சலம், அமேசான் முன்னாள் வேலைவாய்ப்பு பிரிவு லீடர் கார்த்திக் சந்திரன் தலைமையிலான சுற்றில் தொகை குறிப்பிடாத அளவு விதை நிதி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
அமேசான் முன்னாள் அதிகாரியான ’பிச்சுமணி துரைராஜ்’, வர்த்தகத் துறையில் வேலைக்கு ஆள் எடுப்பதில் உள்ள குறைகளை களையும் நோக்கத்துடன்
எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் துவக்கினார்.“தரமான நபர்களை பணியில் நியமிப்பதற்காக நிறுவனங்கள் அதிக நேரம் மற்றும் முயற்சியை நிறுவனம் செலவிடுகின்றன. புதியவர்கள் நியமனத்தை மேம்படுத்தும் வகையில் ’இன்டர்வியூடெஸ்க்’, தங்கள் பேனலில் இருந்து சரிபார்க்கப்பட்ட நேர்முகத் தேர்வாளர்களை நிறுவனங்களுடன் இணைத்து வைக்கிறது. பேனலில் உள்ள அனுபவம் வாய்ந்த நேர்காணல் வல்லுனர்கள் வேலை தேடுபவர்களுக்கு சிறந்த அனுபவத்தையும், நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த செயல்திறனையும் வழங்குகின்றனர்,” என்கிறார் நிறுவனர் பிச்சுமனி துரைராஜ்.
இந்நிறுவனம் திரட்டியுள்ள நிதி, இந்த மேடையின் பின்புலமான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பொறியாளர் மற்றும் வர்த்தகக் குழுவை வலுவாக்க பயன்படுத்திக் கொள்ளப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இன்றைய உலகில், தங்கள் முடிவில்லாத வளங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நியமன முறையை மேம்படுத்திக்கொள்வதற்கான வழிகளை நாடுகின்றனர். தொழில்நுட்பம் மற்றும் மனிதர்கள் சமமான தலையீட்டுடன் இந்த செயல்முறையை நிறுவனங்களுக்கு உதவுவது தான் இன்டெர்வியூடெஸ்கின் நோக்கம்,” என்கிறார் பிச்சுமனி துரைராஜ்.
InterviewDesk அளிக்கும் மேடையின் மூலம் நிறுவனங்கள் நியமன செயல்முறையில் 20,000-க்கும் மேலான மணிநேரத்தை மிச்சமாக்கியுள்ளன. முன்னணி நிறுவனங்களைச்சேர்ந்த 600க்கும் மேலான தொழில்நுட்ப நேர்காணல் வல்லுனர்கள், நேர்காணலை ஒரு சேவையாக வழங்க உதவி வருகின்றனர்.
2022 நிதியாண்டில் நிறுவனம் 400 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது என நிறுவனம் இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அல்லே, பைஜூஸ், ருபீக்ல், ஜூபிடர் மணி, குளோஸியர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்துகின்றன.
“தங்கள் தனித்தன்மையான தீர்வு மூலம் இன்டர்வியூடெஸ்க் நிறுவன பணி நியமன முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வேலைத் தேடுபவர்கள் தங்கள் கனவு வேலையை அடையவும், நிறுவனங்கள் பொருத்தமானவர்களை நியமனம் செய்யவும் சிறந்த சேவையாளராக நிறுவனம் உருவாகும்,” என அனில் ஃபுட்ஸ் செயல் இயக்குனர் சுகுமார் நடராஜன் கூறியுள்ளார்,
“வேலை தேடுபவர்களின் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு மற்றும் நிறுவனங்களின் தேவை, பணி நியமன முறையில் பெரும் மாற்றத்தை கோருகின்றன. இன்டர்வியூடெஸ்க் குழு மற்றும் அதன் புதுமையாக்க வேட்கை இருதரப்பினரையும் இணைக்கும் மேடை மூலம் இதற்கான மாற்றத்தை கொண்டு வரும் திறன் பெற்றுள்ளது என லட்சுமிநாராயணன் வெங்கடாசலம் கூறியுள்ளார்.
InterviewDesk Founder and CEO Pichumani Durairaj
பல்வேறு வகையான நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்ட அனுபவத்துடன் இந்த பிரிவில் முதலில் நுழைந்த நிறுவனம் என்ற சாதகம் நிறுவனத்தை பணி நியமனத்தில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான சேவைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வைக்கும் என்று கார்த்திக் சந்திரன் கூறியுள்ளார்.
ஸ்டார்ட்-அப் ஆர்வலரான அருண் பால், நிறுவன உறுப்பினர்- செயல்பாடுகள் தலைவர் வெங்கடநாராயணன், தொழில்நுட்பத் தலைவர் ஆர்.எஸ்.விக்னேஷ் உள்ளிட்டோர் இன்டர்வியூடெஸ்க் குழுவில் உள்ளனர். அண்மையில், அமேசான் முன்னாள் அதிகாரி வீர மனோகர சுப்பையா இக்குழுவில் முதன்மை ஆர்கிடெக்டாக இணைந்துள்ளார்.