ஐபிஓ வெளியிடும் பீஸ்ட், விக்ரம், RRR படங்களுக்கு VFX தயாரித்த சென்னை நிறுவனம்!

By cyber simman
September 15, 2022, Updated on : Fri Sep 16 2022 03:36:59 GMT+0000
ஐபிஓ வெளியிடும் பீஸ்ட், விக்ரம், RRR படங்களுக்கு VFX தயாரித்த சென்னை நிறுவனம்!
காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான 'பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட்' (PhantomFX) நிறுவனம், பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டுவதற்காக சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான SME IPO-விற்குள் முதல் முறையாக அடியெடுத்து வைப்பதற்காக இந்திய தேசிய பங்குச் சந்தையின் NSE-EMERGE தளத்தில் இணைந்துள்ளது.


இப்போது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயரிய தரத்திலான டிஜிட்டல் அரங்குகளை (Digital Studios) 40 கோடி ரூபாய் முதலீட்டில் அமைப்பதற்கான மகத்தான விரிவாக்கத்திற்கு PhantomFX நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

phantom fx

ஐபிஓ வெளியிடும் PhantomFX

VFX, அனிமேஷன் பிரிவுகள் மிகவும் விரைவாக வளர்ந்துவரும் துறைகள், எதிர்காலத்தில் மிக பிரம்மாண்டமன அளவில் வளர்ந்து வரக்கூடிய ஆற்றல் படைத்த தொழில்களாக இவை இருக்கும் என்றும் கூறும் PhantomFX நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பிஜோய் அற்புதராஜ்,

"நம்பகமான நெட்வொர்க் கூட்டாளி (Trusted Partner Network - TPN) என்று சான்று அளிக்கப்பட்டிருக்கும் PhantomFX நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் துறையில் உலகத்தில் தலையாய இடத்தைப் பிடிப்பதற்காக, உயரிய தரத்துடன் டிஜிட்டல் ஸ்டுடியோக்களை உருவாக்கி விரிவாக்கம் செய்து வருகிறது," என்றார்.

இத்தகைய சூழ்நிலையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு உலகிலேயே முதன்மையான VFX நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு PhantomFX நிறுவனம் ஆயத்தப்படுத்தி கொண்டு வருகிறது.


கொச்சி, ஹைதராபாத், ஆகிய இடங்களில் உயர் தரமான டிஜிட்டல் ஸ்டுடியோக்களை அமைக்கவும், ஏற்கனவே இருந்துவரும் சென்னை, மும்பை ஸ்டுடியோக்கள், இரண்டாம் அடுக்கு நகரங்களான கோவை, மதுரை ஸ்டுடியோக்களையும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கவும் PhantomFX நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக பிஜோய் கூறினார்.

"உலகத்தரத்துடன் கூடிய டிஜிட்டல் ஸ்டுடியோக்களை கனடாவில் உள்ள வான்கோவரிலும், மான்ட்டிரியாவிலும், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சிலும், இங்கிலாந்து துபாய் ஆகிய நாடுகளிலும் அமைப்பதற்கான திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இவை தவிர சாத்தியமுள்ள மற்ற வெளிநாட்டுச் சந்தைகளை நாடுவதற்கும் பேராவல் கொண்டுள்ள நாங்கள், 10 லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறோம்," என்றும் கூறினார்.

சென்னையிலும் மும்பையிலும் தற்போது 25ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்திருக்கும் ஸ்டுடியோக்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும் என்றார் அவர்.


PhantomFX தன்னுடைய எல்லைகளை விரிவாக்கம் செய்யும் போது திறமையான இந்திய இளைஞர்களுக்கு VFX தொழிலில் வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகும். மூன்று ஆண்டுகளுக்குள் 2000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்கிறார் பிஜோய்.

திரைப்படங்கள், இணையத் தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றின் தயாரிப்பு, தயாரிப்புக்கு முந்தைய, தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் ஆகியவற்றை தற்போது இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.


உள்நாட்டு, பன்னாட்டுத் தயாரிப்புப் பணிகளில் PhantomFX நிறுவனம் பங்கேற்று அவற்றைப் பெருமளவில் வெற்றி பெறச் செய்திருக்கிறது என்றும், விஜய் நடித்த பீஸ்ட், கமல்ஹாசனின் விக்ரம், ராஜமௌலியின் RRR, சூர்யாவின் ஜெய்பீம் போன்ற இந்தியாவின் வெற்றிப்படங்கள் பலவற்றிற்கு VFX காட்சிக்கலையை இந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

பிரம்மாஸ்த்ரா, ஆதிபுருஷ்தே ஆகியனவற்றோடு ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் பிரமிக்க வைக்கும் VFX காட்சிக்கலை அமைப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது என்று அவர் கூறினார்.

தனிச்சிறப்புமிக்க தன்னுடைய பணிகளுக்காக PhantomFx நிறுவனம் உலகம் முழுவதிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகளை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. பாங்காக்கில் நடைபெற்ற 13ஆவது சர்வதேச சாதனையாளர்கள் மாநாட்டில் விரைவாக வளர்ந்துவரும் இந்திய நிறுவனத்திற்கான IAC Summit 2019 விருது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

phantomfx

PhantomFx நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரஜினிகாந்த் பேசுகையில்,

“இந்த நிறுவனம் பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டுவதற்காக சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான SME IPO-விற்குள் முதல் முறையாக அடியெடுத்து வைப்பதற்காக இந்திய தேசிய பங்குச் சந்தையின் NSE-EMERGE தளத்தில் இணைந்துள்ளது. பங்குச்சந்தையின் மூலமாக கணிசமான முதலீட்டைத் திரட்டுவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். பங்குச் சந்தையில் நுழையும் முதலாவது தென்னிந்திய VFX நிறுவனம் PhantomFx தான்,” என்று தெரிவித்தார்.

Edited by Induja Raghunathan

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற