குழந்தைகளை கவர ரயில் பெட்டி போல கிளாஸ் ரூம்!

12th Jun 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

மதுரையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று குழந்தைகளை உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் வகுப்பறைகளை ரயில் பெட்டி போன்று அமைத்துள்ளது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தெற்கு ரயில்வே காலணியில் செயல்பட்டு வருகிறது மதுரா காலேஜ் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளிக்கூடம் தமிழ் சங்கம் அருகே ரயில்வே ட்ராக்கை ஒட்டி அமைந்துள்ளது.

Train

மதுரா காலேஜ் மேல்நிலைப்பள்ளியில் சுமார் மூன்றாயிரத்திக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் அப்பள்ளியின் மழலையர் வகுப்புகள் ரயில் பெட்டியை போன்று அமைக்கப்பட்டு அதே நிறங்களில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

ரயில் போன்று தோற்றம் அளிக்கும் வகுப்புகள்

க்ளாஸ் ரூம் கதவுகள், ஜன்னல்களின் நிறம் அனைத்தும் உண்மை ரயிலைப் போலவே உள்ளது. வகுப்பறையின் வாசல்படிகள் ரயில் பெட்டியில் உள்ளதைபோல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே ரயிலில் செல்ல விருப்பப்படும் குழந்தைகளுக்கு ரயில் க்ளாஸ்ரூம் நிச்சயம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ட்ராக்கில் செல்லும் ஒரிஜினல் ரயில் பயணிகளைப் போல நாங்களும் ரயிலில் அமர்ந்து செல்கிறோம் என்று ஜன்னல் வழியே டாட்டா காட்டி மகிழ்கின்றனர் குழந்தைகள்.
School

மதுரையில் உள்ள பள்ளிக்கூடம் என்பதால் இந்த ரயில் வகுப்பறைகள் மதுரை டூ சென்னை செல்லும் ரயிலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே ட்ராக் அருகே ஒரிஜினல் ரயிலுக்கு போட்டியாக வகுப்பறைகளை ரயில் பெட்டிகள் போல் பள்ளி நிர்வாகம் அமைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்து.

தினமும் காலை பள்ளிக்குச் செல்ல குழந்தைகளை எழுப்பி ரெடி செய்து அனுப்புவது கஷ்டமான இக்காலத்தில் பள்ளிகளின் இதுபோன்ற புதிய ஐடியாக்கள் குட்டீஸ்களை வெகுமாக கவர்ந்து வரச்செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

தகவல், படங்கள் உதவி: ஏஎன்ஐ

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Latest

Updates from around the world

Our Partner Events

Hustle across India