Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

பகிர்ந்து கொள்ளும் பணியிடங்களை புக் செய்ய உதவும் ஆப்!

கோ வொர்கிங் இடங்களைக் கண்டறியும் இந்த ஆப் பெங்களூரு, சென்னை, கோவை, ஹைதராபாத் ஆகிய நான்கு நகரங்களில் செயல்படுகிறது.

பகிர்ந்து கொள்ளும் பணியிடங்களை புக் செய்ய உதவும் ஆப்!

Monday July 13, 2020 , 4 min Read

பகிர்ந்துகொள்ளும் வகையிலான அலுவலக இடங்கள், கஃபேக்கள், சந்திப்பு அறைகள் போன்றவை உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்தியாவில் மட்டும் பகிர்ந்துகொள்ளும் வகையில் 1,000-க்கும் அதிகமான பணியிடங்கள் செயல்படுவதாக 'இந்தியன் பிரைவேட் ஈக்விட்டி அண்ட் வென்சர் கேப்பிடல் அசோசியேஷன்’ தெரிவிக்கிறது.


2020-ம் ஆண்டு இறுதிக்குள் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பகிர்ந்துகொள்ளும் வகையிலான பணியிடங்களைப் பயன்படுத்துவார்கள் என்று ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ஜேஎல்எல் மதிப்பிடுகிறது. இந்தப் பிரிவு பரவலாக மக்களிடையே பிரபலமாகி வருவதையே இத்தகைய கணிப்புகள் உணர்த்துகின்றன.


இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களில் பகிர்ந்துகொள்ளும் வகையிலான பணியிடங்கள் அதிகளவில் காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் இந்த வசதியை அதிகம் நாடுகின்றனர். குறைந்த விலையில் இத்தகைய வசதியை, நமது தேவைக்கேற்ப கண்டறிவது கடினமாகிறது. இதற்குத் தீர்வளிக்கிறது கோஃப்ளோட்டர்ஸ் செயலி (GoFloaters app).

1

இரண்டாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தச் செயலி பகிர்ந்துகொள்ளும் வகையிலான அலுவலகங்களைக் கண்டறியவும், சந்திப்பு அறைகள், நிகழ்வுகள் நடக்கும் இடங்கள், பகிர்ந்துகொள்ளும் கஃபேக்கள் ஆகியவற்றை உங்களது ஜியோலொகேஷன் அடிப்படையில் புக் செய்ய உதவுகிறது.


இது கிட்டத்தட்ட ஊபர் போன்றது எனலாம். ஆரம்பநிலை ஸ்டார்ட் அப் முதல் பகுதி நேர ஊழியர்கள் வரை அனைவரின் தேவைக்கேற்ப ஒரு மாதத்திற்கோ, ஒரு வாரத்திற்கோ, ஒரு நாளைக்கோ அல்லது ஒரு மணி நேரத்திற்கோ பணியிடங்களை புக் செய்து கொள்ளலாம்.


ஆனால் கோஃப்ளோட்டர்ஸ் தற்போது பெங்களூரு, சென்னை, கோயமுத்தூர், ஹைதராபாத் ஆகிய நான்கு நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மேலும் பல நகரங்களைச் சென்றடைய உள்ளது.


இந்தச் செயலியின் பதிவிறக்கங்கள் கூகுள் ப்ளேஸ்டோரில் 5,000 ஆக பதிவாகியுள்ளன. 4.6 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கோஃப்ளோட்டர் மூலம் பணியிடத்தை நீங்கள் புக் செய்யும்போது அதிவேக வைஃபை வசதி, பிரிண்டர், ப்ரொஜெக்டர், ஸ்கேனர், உங்கள் சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி உள்ளிட்டவை உங்களுக்கு வழங்கப்படும்.

ஒரு மணி நேரத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படும் வகையில் பகிர்ந்துகொள்ளும் வசதியுடனான கஃபேக்களை புக் செய்வதற்கான ஆரம்ப கட்டணம் 35 ரூபாய். தேவைப்பட்டால் உணவு ஆர்டர் செய்துகொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும் இடத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்துவீர்கள்.

2

நீங்கள் உணவு ஆர்டர் செய்தால் உங்களுக்கு ’ஃபுட் கிரெடிட்’ கிடைக்கும். இதன் மூலம் உடனடியாக 20 சதவீதத் தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம். இந்தச் செயலியில் பட்டியலிடப்பட்டுள்ள பணியிடங்கள் மற்றும் கஃபேக்கள் உங்களது தேவைக்கேற்ப சிறந்த பணிச்சூழலை உறுதிசெய்கிறது.

இதுபோன்ற இடங்களை நீங்கள் அடிக்கடி புக் செய்பவராக இருந்தால் சந்தா திட்டத்தின் மூலம் பலனடையலாம். இதில் முன்பணம் செலுத்திவிட்டு நீங்கள் பயன்படுத்தும் மணி நேரங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தலாம் உங்களுக்கு கூடுதல் போனஸ் மணி நேரங்கள் கிடைக்கும்.

தற்சமயம் கோஃப்ளோட்டர்ஸ் சில்வர் (20 மணி நேரங்கள்), கோல்ட் (60 மணி நேரங்கள்), பிளாட்டினம் (120 மணி நேரங்கள்) என மூன்று சந்தா திட்டங்களை வழங்குகிறது. பிளாட்டினம் பாஸ் தேர்வு செய்தால் 55 சதவீதம் கூடுதல் மணி நேரங்களும் சந்திப்புப் பகுதிகள் மற்றும் பகிர்ந்துகொள்ளும் பணியிடங்களுக்கான புக்கிங்கில் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

செயலியின் செயல்பாடுகள்

முதலில் உங்கள் நகரத்தைத் தேர்வு செய்யவும். உடனே முகப்புப்பக்கம் வரும். அதில் நீங்கள் தேர்வு செய்த குறிப்பிட்ட நகரத்திற்கு தொடர்புடைய பகிர்ந்துகொள்ளும் வசதி கொண்ட அலுவலக இடங்கள் மற்றும் அறைகள் பட்டியலிடப்படும். உங்கள் குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து மேலும் தேடலாம்.

3

தேடல் நேரத்தைக் குறைக்க கஃபே, பகிர்ந்துகொள்ளும் பணியிடம், சந்திப்பு அறைகள், மெட்ரோவிற்கு அருகில் உள்ள இடங்கள், அடிப்படை வசதிகளின் வகைகள் என குறிப்பிட்ட தேவையைத் தேர்வு செய்து தேடலை ஃபில்டர் செய்துகொள்ளலாம்.

உங்கள் செல்லப் பிராணிகளை உடன் அழைத்துச் செல்லக்கூடிய பகுதிகளின் பட்டியலும் இதில் உள்ளது.

4

ஒரு குறிப்பிட்ட இடத்தை க்ளிக் செய்து விவரங்கள் பெறலாம். கட்டணம், இருக்கைகளின் எண்ணிக்கை, வசதிகள் (புகைப்பிடிக்கும் பகுதி, வெளிப்புற இருக்கைகள், இலவச வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை), நேரம், இடம் போன்ற விவரங்கள் பட்டியலிடப்படும்.

பட்டியலின் இறுதியில் காணப்படும் 'புக் நவ்’ என்கிற பட்டனை கிளிக் செய்து புக்கிங் செய்யலாம். புக்கிங் தேதி, கால அவகாசம், நபர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைத் தேர்வு செய்யவேண்டும். புக்கிங்கை உறுதிசெய்ய நீங்கள் லாக் இன் செய்யவேண்டும்.

லாக் இன் செய்யும்போது பகுதி நேர பணியாளர், மாணவர், எழுத்தாளர், ஸ்டார்ட் அப் நிறுவனர், எஸ்எம்பி உரிமையாளர் போன்ற தொழில் வகையைத் தேர்வு செய்யவேண்டும்.

5

நீங்கள் புக்கிங்கை உறுதிசெய்ததும் செயலியில் கட்டண மதிப்பீடு காட்டப்படும். இடத்திற்கான கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி(18%) உள்ளிட்டவையும் இதில் அடங்கும். அத்துடன் ஃப்ளோட்டிங் புள்ளிகள் இருந்தால் அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

கோஃப்ளோட்டர்ஸ் ஒரு புக்கிங் ஐடி உருவாக்கி ஒரு டிக்கெட்டை காட்டும். உங்கள் கூகுள்/யாஹூ/அவுட்லுக் கேலண்டருடன் புக்கிங்களை இணைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
6
நீங்கள் கஃபேவை தேர்வு செய்யும் பட்சத்தில் புக்கிங் சமயத்திலேயே ’ஃபுட் கிரெடிட்’ பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அதற்கு முதலில் ’ஃப்ளோட்டர்ஸ் பாஸ்’ வாங்கவேண்டியது அவசியம்.

7

கோஃப்ளோட்டர்ஸ் கம்யூனிட்டி பார்ட்னர்ஸ் பகுதியை செக் செய்யலாம். இதில் இலவச சாஃப்ட்வேர் மற்றும் எஸ்எம்எஸ் கிரெடிட்ஸ், ஸ்டார்ட் அப்களிடமிருந்து பிரத்யேக ஆலோசனை மற்றும் வழிகாட்டல், தள்ளுபடி கூப்பன்கள், காப்பீடு போன்ற கூடுதல் சேவைகளைப் பெறலாம்.

AWS, கூகுள் க்ளௌட், ஊபர் பிசினஸ், ஃப்ரெஷ்வொர்க்ஸ், Udemy, ரேசர்பே, ஐபிஎம் க்ளௌட் போன்ற முன்னணி பார்ட்னர்களையும் இந்தச் செயலி இணைத்துக்கொண்டுள்ளது.
8

அதிக பயனுள்ள செயலி

இடங்களின் இருப்பு, குறைந்த கட்டணம், நெகிழ்திறன், வசதி உள்ளிட்ட அம்சங்களுக்கு கோஃப்ளோட்டர்ஸ் முக்கியத்துவம் அளிக்கிறது. அதிக மக்கள்தொகை இருக்கும் நகரங்களில் இடம் மற்றும் இதர வசதிகளுக்கு அதிக கட்டணம் செலுத்தவேண்டிய அவசியமிருக்கும். அத்தகைய பகுதிகளுக்கு இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இடத்தை எளிதாகக் கண்டறிந்து, புக் செய்து, பயன்படுத்தக்கூடிய இதன் அமைப்பு சிறப்பாக உள்ளது. இந்தச் செயலியை புதிதாகப் பயன்படுத்துவோருக்கும் ஊபர் செயலி மூலம் ஒரு கார் புக் செய்வது போன்று எளிமையாகவே அமைந்துள்ளது.

ஆண்ட்ராய்ட் 4.4 கொண்ட சாதனங்களுக்கு ஏற்றவாறு இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

9

கூகுள் ப்ளே ஸ்டோரில்,

“இது தனித்துவமான அம்சங்களைக் கொண்ட ஒரு சிறந்த ஆப். நான் வணிக ரீதியாகப் பலரை சந்திப்பதால் எனக்கு இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அனைவரும் சந்திப்பதற்கு ஒரு பொதுவான இடத்தைத் தேடும் பிரச்சனைக்கு தீர்வு வழங்குகிறது.

கஃபேக்களை தேர்வு செய்துகொள்ள முடிவதால் ஒரே இடத்தில் தொடர்ந்து சந்திக்கும் சோர்வளிக்கும் அனுபவத்தை இது மாற்றியமைக்கிறது, என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.


கோஃப்ளோட்டர்ஸ் செயலி தென்னிந்தியாவில் மட்டும் முக்கிய கவனம் செலுத்துவது பின்னடைவாகக் கருதப்படுகிறது.


விரிவாக்கத் திட்டங்கள் குறித்து இதன் நிறுவனர்கள் அறிவித்திருந்தபோதும் இதற்கான நடவடிக்கைகள் மெதுவாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. GoFloaters செயலியால் இந்தியா முழுவதும் உள்ள பகிர்ந்துகொள்ளும் வகையிலான பணியிடங்கள், கஃபேக்கள் போன்றவற்றை சிறப்பாக இணைக்கமுடிந்தால் இது பலருக்கும் பயனுள்ள ஒரு வலுவான செயலியாக மாறிவிடும்.


ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: ஸ்ரீவித்யா