கோவையில் சனி மாலை முதல் திங்கள் காலை வரை ‘முழு ஊரடங்கு’ அறிவிப்பு!

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌, சனிக்கிழமை (25.07.2020) மாலை 5 மணி முதல்‌ திங்கள்‌ கிழமை (27.07.2020) காலை 6 மணி வரை எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அறிவித்து உத்தரவிட்டுள்ளார்‌.

24th Jul 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌, சனிக்கிழமை (25.07.2020) மாலை 5 மணி முதல்‌ திங்கள்‌ கிழமை (27.07.2020) காலை 6 மணி வரை எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிது என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்‌. 


இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது, 

தமிழ்நாடு முதலமைச்சர்‌‌, கொரோனா நோய்‌ தொற்றினை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றார்கள்‌. அதேபோன்று பொதுமக்களின்‌ வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்‌ வகையில்‌ பல்வேறு, சீரிய நடவடிக்கைகளை எடுக்கப்படுகிறது.

kovai

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள்‌ இணைந்து அர்ப்பணிப்புடன்‌ பணியாற்றி வருகின்றனர்‌. 


தற்போது, கொரானா வைரஸ்‌ தொற்று காரணமாக தமிழகம்‌ முழுவதும்‌ 31.07.2020 வரை தேவையான தளர்வுகளுடன்‌ ஊரடங்கினை அறிவிக்கப்பட்டுள்ளது‌. அத்துடன்‌ 05.7.2020, 12.7-2020, 19.7.2020 மற்றும்‌ 26.7.2020 ஞாயிற்றுக்‌ கிழமைகளில்‌ எந்தவிதமான தளர்வுகளும்‌ இன்றி தமிழ்நாடு முழுவதும்‌ முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌, சனிக்கிழமை (25.07.2020) மாலை 5 மணி முதல்‌ திங்கள்‌ கிழமை (27.07.2020) காலை 6 மணி வரை எவ்வித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அழுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஊரடங்கு காலத்தில்‌ மருத்துவச் சேவைகள்‌, பால்‌ மற்றும்‌ மின்சாரம்‌ போன்ற அத்தியாவசியச் சேவைகள்‌ மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌. வேறு எந்த நடவடிக்கைகளும்‌ அனுமதிக்கப்படாது.
  • ஊரடங்கினை மீறும்‌ வகையில்‌ தேவையின்றி வெளியில்‌ நடமாடுவோர்‌ மீது காவல்துறை மூலம்‌ கடும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌. கொரோனா தொற்றினை கட்டுபடுத்தும்‌, வருவாய்‌ துறை, மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை, காவல்‌ துறை மற்றும்‌ உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ பணியில் இருப்பர்.
  • உழவர் சந்தைகள்‌, மார்க்கெட்‌, மளிகைக்கடைகள்‌, மீன்‌ மார்க்கெட்‌, பூ மார்க்கெட்‌, இறைச்சிக்‌ கடைகள்‌, டாஸ்மாக்‌ கடைகள்‌, வர்த்தகத் தொழில்‌ நிறுவனங்கள்‌ உள்ளிட்ட எவ்வித அமைப்புகளும்‌ இயங்காது.


கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும்‌, விரைவாகவும்‌ பரவும்‌ தன்மையுள்ள தோய்‌ என்பதால்‌, இதை முழுமையாக கட்டுப்படுத்த அரசு மற்றும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பில்‌ எடுக்கப்படும்‌ அனைத்து நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌, வணிகர்கள்‌, தொழில்நிறுவனங்கள்‌, வர்த்தக அமைப்புகள்‌ தன்னார்வத்‌ தொண்டு நிறுவனங்கள்‌ அனைவரும்‌ முழு ஆதரவையும்‌, ஒத்துழைப்பையும்‌ வழங்க வேண்டும்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கூ.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India