Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

கொரோனாவால் படுத்த தொழிலை மீட்க ஆன்லைனில் விற்பனை செய்து வருவாயை இரட்டிப்பாக்கிய நிறுவனம்!

1988-ம் ஆண்டு 10,000 ரூபாய் முதலீட்டுடன் ராஜேந்திரா சேத் தொடங்கிய Dennison Garments நிறுவனத்தில் இணைந்துகொண்ட அவரது மகன் அஷ்வின் சேத் மின்வணிக செயல்பாடுகள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வளர்ச்சியையும் துரிதப்படுத்தியுள்ளார்.

கொரோனாவால் படுத்த தொழிலை மீட்க ஆன்லைனில் விற்பனை செய்து வருவாயை இரட்டிப்பாக்கிய நிறுவனம்!

Thursday November 25, 2021 , 3 min Read

கொரோனா பெருந்தொற்று பரவலால் பல வணிகங்கள் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள ஆன்லைன் செயல்பாடுகளுக்கு மாறியுள்ளது. ஆனால் குவாலியர் பகுதியைச் சேர்ந்த Dennison Garments சில்லறை வர்த்தகங்கள் கோலோச்சிய காலத்திலிருந்தே ஆன்லைனில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.


இந்நிறுவனம் டிஜிட்டல் செயல்பாடுகளுக்காக முதலீடு செய்ததன் பலனை 2020-ம் ஆண்டில் அனுபவித்தது. Dennison Garments நிறுவனத்தின் ஆன்லைன் பிரிவு Dennison India. 2014-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு வரை படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது.

கொரோனா சமயத்தில் எத்தனையோ வணிகங்கள் வருவாய் ஈட்டத் திணறினாலும்கூட Dennison வருவாய் இரட்டிப்பானது. 2020ம் ஆண்டில் 2.06 கோடி ரூபாயாக இருந்த இந்நிறுவனத்தின் வருவாய் 2021-ம் ஆண்டில் 4.65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

2014-ம் ஆண்டு அஷ்வின் சேத் தன் குடும்பத்தினர் நடத்தி வந்த வணிகத்தில் இணைந்துகொண்டார். அதுதான் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் செயல்பாடுகளுக்கான ஆரம்பப்புள்ளி.

1

அஷ்வின் சேத், நிறுவனர், Dennison India

அஷ்வின் சேத் எம்பிஏ பட்டதார். அப்பாவுடன் வணிகத்தில் சேர்ந்தாலும் இவரது அணுகுமுறை மாறுபட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் கடைக்கு வரவேண்டும் என்று காத்திருக்கக்கூடாது என்பது இவரது கருத்து.


அஷ்வின் மின்வணிக செயல்பாடுகளை 2011-ம் ஆண்டு முதல் கூர்ந்து கவனித்து வந்தார். மின்வணிக அணுகுமுறையே வளர்ச்சிப் பாதையில் விரைவாக இட்டுச் செல்லும் என்பது இவரது திடமான நம்பிக்கை.


அஷ்வினின் அப்பா ராஜேந்திர சேத் 1988-ம் ஆண்டு Dennison Garments தொடங்கினார். இந்நிறுவனம் ஆண்களுக்கான ஷர்ட் மற்றும் பேண்ட் விற்பனை செய்கிறது.


முப்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் எத்தனையோ சவால்களைக் கடந்து வந்துள்ளன. இருப்பினும் டிஜிட்டல் ரீதியாக செயல்படும் முன்னெடுப்பைப் போல எந்த ஒரு நடவடிக்கையும் கொரோனா சமயத்தில் கைகொடுக்கவில்லை.

மற்ற வணிகங்கள் இந்தப் புதிய சூழலை உணர்ந்து தங்களை தக்கவைத்துக்கொள்ள டிஜிட்டலுக்கு மாறுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த சூழலில் Dennison எந்தவித சிரமமும் இன்றி வணிக செயல்பாடுகளைத் தொடர்ந்தது.

தொடக்கம்

1980-களில் ராஜேந்திரா ஜவுளி வணிகத்தில் ஈடுபட்டார். இந்திய ராணுவத்திற்கு சீருடைகள் வழங்கத் தொடங்கினார். மும்பை, குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து துணிகளை வாங்கி உள்ளூரில் உற்பத்திப் பணிகளை மேற்கொண்டார்.


சீருடை வணிகம் நடந்துகொண்டிருந்தபோதே ஆண்களுக்கான ஆடைகள் பிரிவில் மிகப்பெரிய இடைவெளி இருந்ததை ராஜேந்திரா புரிந்துகொண்டார். ஆண்கள் அணியும் ரெடிமேட் ஷர்ட்களை வெகு சில பிராண்டுகள் மட்டுமே விற்பனை செய்தன. அவ்வாறு சந்தையில் கிடைத்த ரெடிமேட் ஷர்ட்களும் விலையுயர்ந்தவையாக இருந்தன.


துணி வாங்கி ஷர்ட் தைப்பதற்கு அதிக நேரமும் பணமும் செலவானது. ராஜேந்திராவின் நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்த பலர் இந்தப் பிரச்சனை குறித்து அவரிடம் பகிர்ந்துகொண்டதாக அஷ்வின் நினைவுகூர்ந்தார்.

2

அதேபோல் இந்தக் காலகட்டத்தில் நுகர்வோரின் தேவைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தைக் காணமுடிந்தது.

”குறைந்த விலையில் ஷர்ட்களை வழங்கினால் ஏராளமான வாடிக்கையாளர்களைச் சென்றடையமுடியும் என்பதை என் அப்பா சரியான கணித்திருந்தார்,” என்கிறார் அஷ்வின்.

ராஜேந்திரா வணிகத்தைத் தொடங்க தனது இருசக்கர வாகனத்தை விற்றுவிட்டார். 10,000 ரூபாய் கிடைத்தது. அதைக் கொண்டு Dennison தொடங்கினார். குவாலியரில் ஒரு சிறிய இடத்தில் நான்கு தையல் இயந்திரங்களுடன் தொழில் தொடங்கப்பட்டது.


1988-ம் ஆண்டில் 98 ரூபாய் என்கிற விலையில் ஷர்ட்களை சந்தையில் விற்பனை செய்ய ஆரம்பித்தார். ஓராண்டிலேயே ரெடிமேட் ஷர்ட் பலரை ஈர்த்தது. ராஜேந்திரா மற்றொரு ஸ்டோர் திறந்தார்.

லட்சியத்தை நோக்கிய பயணம்

Dennison ஆரம்பத்திலேயே வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இருப்பினும் இந்நிறுவனம் பல வகையான தடைகளைக் கடந்தே வளர்ச்சிப் பாதையில் பயணித்துள்ளது.

1997-ம் ஆண்டு ராஜேந்திர வணிகப் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இவருக்கு ஐந்து சகோதரர்கள். வணிகப் பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைத்தார்.


ராஜேந்திரா எந்த முக்கிய நோக்கத்தை முன்னிறுத்தி இந்தத் தொழிலை நடத்தி வந்தாரோ அதற்கு அவரது சகோதரர்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதை கவனித்த ராஜேந்திரா 2008-ம் ஆண்டு மீண்டும் வணிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

இன்று ராஜேந்திரா, அஷ்வினின் சகோதரர் ஹர்ஷ் சேத் இருவரும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை கவனித்துக் கொள்கின்றனர். அஷ்வின் மின்வணிக செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.

அக்கவுண்டிங் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக 2017-ம் ஆண்டு முதல் மின்வணிகப் பிரிவு சில்லறை வர்த்தகத்திடமிருந்து பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்டபோது அஷ்வின் பல வகையான சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. மின்வணிக செயல்பாடுகளுக்குத் தேவையான கட்டமைப்பு குவாலியரில் இல்லாதது பெரிய சவாலாக இருந்தது.


Dennison முதலில் ஸ்நாப்டீல் தளத்தில் பட்டியலிடப்பட்டது. 2016-ம் ஆண்டு அமேசான் இந்தியா தளத்தில் பட்டியலிடப்பட்ட பிறகு வணிகம் பிரபலமடைந்ததாக குறிப்பிடுகிறார் அஷ்வின்.

அதைத் தொடர்ந்து மிந்த்ரா தளத்தில் பட்டியலிடப்பட்டது. 2018-ம் ஆண்டு சொந்த வலைதளம் தொடங்கப்பட்டது.

கடந்த இரண்டாண்டுகளில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் உள்ளடக்கம் உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க முடிகிறது என்றும் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அஷ்வின் தெரிவிக்கிறார்.

கொரோனா சமயத்தில் வணிக செயல்பாடுகள்

”ஆரம்பத்தில் இணையத்தையோ மின்வணிக வாய்ப்புகளையோ அனைவரும் பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழல் இருந்தது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஆன்லைனில் ஆர்டர் செய்து வந்தனர். ஆனால் இன்று நிலைமை வேறு. இந்தப் பிரிவு வளர்ச்சியடைந்து வருகிறது,” என்கிறார்.

Peter England, Allen Solly, Monte Carlo, Flying Machines, Raymond போன்ற எத்தனையோ பிராண்டுகள் ஆண்களுக்கான ஆடைகளை வழங்கி இந்த சந்தையில் செயல்பட்டாலும் தரமான தயாரிப்புகளை குறைந்த விலையில் வழங்கி Dennison தனக்கான இடத்தைப் பிடித்திருப்பதாக அஷ்வின் தெரிவிக்கிறார்.


Dennison ஷர்ட்களின் ஆரம்ப விலை 700 ரூபாய். வரும் நாட்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்நிறுவனம் கவனம் செலுத்த உள்ளது. ஹெம்ப் கொண்டு தயாரிக்கப்படும் ஷர்ட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

“குறைந்த கார்பன் அடிச்சுவடு கொண்ட ஆடை உற்பத்தியில் கவனம் செலுத்த இருக்கிறோம்,” என்கிறார் அஷ்வின்.

அடுத்த நிதியாண்டில் பெண்களுக்கான ஆடை வகைகளை இணைத்துக்கொள்ளவும் காலணி வணிகத்தில் ஈடுபடவும் இந்நிறுவனம் விரும்புகிறது.


ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா