Cognizantல் 7ஆயிரம்; 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போகிறதா Infosys?

ஐடி நிறுவனங்களில் தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கை மற்றும் வேலை இழப்புச் செய்திகள் ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

8th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனமான சிடிஎஸ், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த சில மாதங்களாக நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஐடி துறையில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

CTS_Infosys

அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட் (CTS), சீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும், 7,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் செய்தி வெளியானது.


மேலும் காக்னிசண்ட் நிறுவனம் உள்ளடக்க நிர்வாகப் பிரிவில் இருந்து வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் பணியிழப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. ஃபேஸ்புக் போன்ற வாடிக்கையாளர்களுக்காக, சிடிஎஸ்; சமூக ஊடக உள்ளட்டகத்தை கண்காணித்து நிர்வகிக்கும் சேவையை வழங்கி வருகிறது.

காக்னிசண்ட் நிறுவனத்தின் இந்த ஆட்குறைப்புத் திட்டம் ஐடி துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிய நிலையில், மற்றொரு முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியானது.

இன்ஃபோசிஸ் நிறுவனம், ஆறாம் அடுக்கு ஊழியர்களில், பத்து சதவீத ஊழியர்களை நீக்கத் திட்டமிட்டிருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.  இதே போல ஒவ்வொரு நிலையிலும், ஆட்குறைப்பு மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நடவடிக்கை

இந்த நடவடிக்கையின் காரணமாக, 4,000 முதல் 10,000 வரை ஊழியர்கள் வேலை இழக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், இன்ஃபோசிஸ் நிறுவனம் சார்பில் இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது.  

இன்ஃபோசிஸ் போன்ற பெரிய நிறுவனத்தில், செயல்திறன் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவன செயல்திறனை மேம்படுத்துவதற்காக, தகுதி இல்லாத மற்றும், எதிர்பார்த்த அளவு பணியாற்றாத ஊழியர்கள் நீக்கப்படும் வழக்கமான நடவடிக்கை இது என்றும் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மற்றொரு ஐடி நிறுவனமான கேப்ஜெமினி, 500 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இந்த ஊழியர்களுக்கு 90 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் அவர்கள் தங்களுக்கான திட்டங்களை தேடிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லை எனில் வேலையிழக்க நேரும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.


தொகுப்பு: சைபர்சிம்மன்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Our Partner Events

Hustle across India