கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள் என்னென்ன?

By Gajalakshmi Mahalingam|8th Apr 2021
கொரோனா பரவலின் 2ம் அலை தமிழகத்திலும் அதிகரித்து வரும் நிலையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடையும் சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

பெருந்தொற்று நோயான கொரோனாவின் 2ம் அலையானது இந்தியாவில் வேகமெடுத்து வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களைப் போல தமிழகத்திலும் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களினாலும் மற்றும் பொது இடடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறுவதாலும் சமீக காலமாக கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைக் காண முடிவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.


கடந்த மாதம் 28ம் தேதியில் 13,070 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏப்ரல் 7ம் தேதி இந்த எண்ணிக்கையானது 27,743 ஆக உயர்ந்துள்ளது.

tn lockdown

எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தவும் ஏற்கனவே அனுமதிக்கப்ப்டடுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பது அவசியமாகி இருப்பதாக அரசு கூறியுள்ளது.

  • இதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்ப்டட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.
  • தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். நோய் பரவலை கருத்தில்கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.
  • வரும் 10ஆம் தேதி முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கறி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அதேபோன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரக் கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
  • நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும்.
  • முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்கள் கட்டாயம் அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப் படும்.
  • தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைக்கு ஏற்ப தடுப்பூசிகள் போட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும்
  • மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
  • தற்போது நோய்த்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி புதுச்சேரி, ஆந்திரா, மற்றும் கர்நாடகா செல்லும் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
  • முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி காய்கறி கடைகள் பலசரக்கு கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள், ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்.
  • உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50% இருக்கையில் மற்றும் வாடிக்கையாளர்கள் இரவு 11 மணிவரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
  • கேளிக்கை விடுதிகளில் 50 சதவீத விழுக்காடு வாடிக்கையாளரின் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் செயல்பட அனுமதிக்கவும்.
  • நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள், உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்,
  • உள்ளரங்குகளில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு கலாசார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும்.
  • திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
  • விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதி இன்றி விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனுமதிக்கப்படும்.
  • நீச்சல் குளங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். பொருட்காட்சி அரங்கங்கள், வர்த்தகர்களுக்கு இடையான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்
  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். இருப்பினும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் அதன் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
  • சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்பு தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் சின்னத்திரை, திரைப்படக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு, படப்பிடிப்பில் கலந்து கொள்வதை மட்டும் திரைப்பட படப்பிடிப்பு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தடுத்து 3 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
  • ஆட்டோக்களில் ஓட்டுநர் தடுத்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டுபாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
  • வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.