கொரேனா பாதிப்பு: டிரைவர்கள், பயணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என உபெர் அறிவிப்பு!

உள்ளூர் பொது சுகாதார அதிகாரிகள் ஆலோசனை அடிப்படையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட டிரைவர்கள் மற்றும் பயணிகள் நிறுவன சேவையை பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம்.

14th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இணைய கால் டாக்சி நிறுவனமான உபெர், உள்ளூர் பொது சுகாதார அதிகாரிகள் அறிவுரைப்படி, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட டிரைவர்கள் மற்றும் பயணிகள் நிறுவன சேவையை பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் 60 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசின் மையம் சீனாவின் வூஹனாக இருந்தாலும், இப்போது ஈரான் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.  

உபெர்

"உள்ளூர் பொது சுகாதார அறிவுரைப்படி உபெர் நடந்து கொள்ளும். டிரைவர் அல்லது பயணிகள் உபெர் சேவையை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படலாம்,” என உபெர் இ-மெயில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  


தெற்காசியாவில் செயல்படும் நாடுகள் ஒவ்வொன்றிலும் அங்குள்ள தேவைக்கேற்ப, சர்வதேச பொது சுகாதார ஆலோசகர் வழிகாட்டுதலின் படி, நடவடிக்கை எடுக்க, உபெர் செயல்பாடுகள், பாதுகாப்பு வல்லுனர்களைக் கொண்ட குழுவை உபெர் அமைத்துள்ளதாக நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.  

"உள்ளூர் பொது சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம், அவர்கள் அறிவுரைப்படி நடப்போம். அவர்கள் தெரிவிக்கும் தகவல்களை எங்கள் டிரைவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

கோரானா வைரஸ் பாதித்த டிரைவர்கள் அல்லது பொது சுகாதார அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டிரைவர்களுக்கு நிறுவனம் ஆதரவு அளிக்கும் என்றும் உபெர் தெரிவித்துள்ளது.

"இது போன்ற சூழலில், டிரைவர் மற்றும் டெலிவரி நபர்கள் 14 நாள் வரை நஷ்ட ஈடு பெறுவார்கள். ஒரு சில நாடுகளில் இது ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் இதை செயல்படுத்த உள்ளோம். இதுவே சரியான செயல் என நம்புகிறோம்,” என்று உபெர், ரைட்ஸ்- பிளாட்பார்ம் துணைத்தலவர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறினார்.

பெரிய நிறுவனங்கள் பணியிட பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


ஃபேஸ்புக் நிறுவனம், பாதுகாப்புக் காரணங்களுக்காக தனது ஊழியர்கள் சீனாவுக்கு மேற்கொள்ளும் முக்கியம் இல்லாத பயணங்களை அனைத்தையும் ரத்து செய்துள்ளது. அண்மையில் சீனாவுக்கு சென்று வந்த ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொண்டுள்ளது.


ஆப்பிள், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களும் சீனாவுக்கான பயணங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளன.


செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India