Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு கோவிட்-ல் இருந்து பாதுகாப்பு அளிக்கும் நானோ தொழில்நுட்ப அறிவியல் திட்டங்கள் வரவேற்பு!

வைரஸ் எதிர்ப்புத் தன்மை கொண்ட நானோ பூச்சு மற்றும் நானோ அடிப்படையிலான பொருட்களை உருவாக்கும் குறுகிய கால திட்டங்களுக்கு, SERB மூலமாக அறிவியல் தொழில்நுட்பத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு கோவிட்-ல் இருந்து பாதுகாப்பு அளிக்கும் நானோ தொழில்நுட்ப அறிவியல் திட்டங்கள் வரவேற்பு!

Wednesday April 08, 2020 , 2 min Read

வைரஸ் எதிர்ப்புத் தன்மை கொண்ட நானோ பூச்சு மற்றும் நானோ அடிப்படையிலான பொருட்களை உருவாக்கும் குறுகிய கால திட்டங்களுக்கு, அறிவியல் மற்றும் பொறியியல் வாரியம் (SERB) மூலமாக அறிவியல் தொழில்நுட்பத் துறை அழைப்பு விடுத்துள்ளது.


தனிப்பட்ட பாதுகாப்பு உடை (PPE) போன்றவற்றில் பயன்படுத்துவதற்கு இந்தத் திட்டத்தை அளிக்கலாம். இதை பங்கேற்பு தொழிற்சாலை அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு அளித்து அதிக அளவில் உற்பத்தி செய்யலாம் என அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona lab

கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளில், உருவாகிவரும் சுகாதாரத் துறை தேவைகளை சமாளிக்க பெருமளவு பங்களிப்பு செய்வதாக இந்த நானோ பூச்சுகள் அமையும்.


கொவிட்-19க்கு எதிரான மூன்றடுக்கு மருத்துவ மாஸ்க்குகள் மற்றும் N-95 சுவாசக் கவசம் அல்லது சிறந்த செயல்திறன் உள்ள மாஸ்க்குகளை பெருமளவில் தயாரித்தல், முழு உடல் கவச உடைகளை பெருமளவு தயாரித்தல் மற்றும் கொவிட்-19 தாக்குதலுக்கு எதிராகப் பணியாற்றி வரும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இந்தத் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


முதலில் வரும் திட்டம் முதலில் பரிசீலிக்கப்படும் என்ற அடிப்படையில், செயலாக்கத் தன்மை, திட்டத்தின் வாய்ப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து, பிறகு நிபுணர்களால் ஆய்வு செய்யப்படும். இதில் உருவாக்கப்பட்டு தொழில் துறைக்கு அளிக்கப்படும் பொருட்கள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.


நானோ பூச்சு அடிப்படையிலானப் பொருட்கள் தயாரிப்பில் தரத்தை உறுதி செய்வதற்கு, பொருத்தமான இந்தியத் தரநிலைகளை உருவாக்குவதில் உதவிகரமாக இருப்பவையாகவும் இருக்க வேண்டும். இதற்கான திட்டங்களை 2020 ஏப்ரல் 30 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


(திட்டங்களுக்கான அழைப்புகள் குறித்த விவரங்களை அறிய : www.serbonline.in

ஒருங்கிணைப்பு விஞ்ஞானிகளின் தொடர்புக்கான தகவல்கள்-


1. டாக்டர் டி. தங்கராஜு, விஞ்ஞானி E, SERB, இமெயில்[email protected]

2. டாக்டர் நாகபூபதி மோகன், விஞ்ஞானி  C, DST இமெயில்[email protected]

3. திரு. ராஜீவ் கன்னா, விஞ்ஞானி C, DST இமெயில்[email protected]


மேலும் தொடர்புகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்-

டாக்டர் மிலிந்த் குல்கர்னி, விஞ்ஞானி- G & Head, Nano Mission, DST

இ-

மெயில்[email protected], Mob.: +91-9650152599, 9868899962}