ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை!

ஹைட்ரோகுளோரோகுயின் மற்றும் அதைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுபவற்றை ஏற்றுமதி செய்ய உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது.

26th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் மலேரியா சிகிச்சைக்குக் கொடுக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் தடைவிதித்துள்ளது


உள்ளூர் சந்தைகளில் இந்த மருந்து போதுமான அளவு இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்களைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஆய்வகங்களில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்கும் அறிகுறிகள் தென்படாத நபர்களுக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா பரிந்துரை செய்துள்ளார்.


இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் அமைக்கப்பட்ட கோவிட்-19 தேசிய பணிக்குழு பரிந்துரை செய்துள்ள சிகிச்சை முறையை அவசரகால சூழல்களில் மட்டும் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அனுமதியளித்துள்ளார்.

1

வர்த்தக அமைச்சகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விவகாரங்களைக் கையாளும் பிரிவான மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (DGFT) அறிக்கையில்,

“ஹைட்ரோகுளோரோகுயின் மற்றும் அதைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுபவற்றை ஏற்றுமதி செய்ய உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் பிரத்யேக பரிந்துரையின் பேரில் இந்த மருந்தினை ஏற்றுமதி செய்ய அனுமதியளிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.


சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) மற்றும் ஏற்றுமதி தொடர்பான யூனிட்கள் (EOU) ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்படவில்லை. ஆனால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட மார்ச் 25, 2020 தேதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி பெற்றிருக்கவேண்டும்.

“இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்கு முன்பே மாற்றவியலாத கடன் உறுதி மடல் (LC) வழங்கப்பட்ட ஏற்றுமதிகளுக்கோ அல்லது குறிப்பிட்ட ஏற்றுமதிக்கு இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர் முழுமையான முன் தொகை பெற்றிருந்தாலோ அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் ஏற்றுமதி செய்ய அனுமதியளிக்கப்படும்,” என்று DGFT குறிப்பிட்டுள்ளது

ஹைட்ராக்சிகுளோரோகுயின், குளோரோகுயின் ஆகியவை கோவிட்-19 சிகிச்சைக்கு பலனளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டது முதல் இவற்றிற்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக சில அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.


மக்கள் அச்சத்தின் காரணமாக இந்த மருந்துகளை வாங்குகின்றனர். கடந்த சில வாரங்களில் பல வகையான சானிடைசர்கள், வெண்டிலேட்டர்கள், சர்ஜிக்கல் முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவச் சாதனங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.


இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக அனைத்து வகையான சானிடைசர்களையும் வென்டிலேட்டர்களையும் ஏற்றுமதி செய்ய உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளது.


தகவல்: பிடிஐ

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India