வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் தேதி நீட்டிப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையிலான நிதித்துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை நிதியமச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

24th Mar 2020
 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக அதிகரிக்கும் கவலை மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான நிவாரன அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

fin minister

இது தொடர்பான செயதியாளர் சந்திப்பில், நிர்மலா சீதாராமன், வருமான வரி தாக்கல், ஜி.எஸ்.டி தாக்கல் தொடர்பான கெடு, வங்கி விஷயங்கள் தொடர்பான பொதுமக்களின் கவலைகளுக்கு பதில் அளிக்கும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டார்.


நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:


வருமான வரி :

 • 2018-19 நிதியாண்டிற்கு, வருமான வரி தாக்கல் கடைசி நாள் 2020 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • தாமதமாக செலுத்தப்படும் தொகைக்கான, வட்டி 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
 • டிடீஎஸ் டெபாசிட் நீட்டிப்பு இல்லை ஆனால், ஜூன் 30 வரை வட்டி 9 சதவீதம் மட்டுமே. தற்போது ஜூன் 30, 2020, வரை ரிட்டர்ன் சமர்பிப்பு, ரிட்டர்ன் அறிக்கை, முதலீடு தொடர்பான ஆவணங்கள், மற்ற சட்டங்கள் கீழ் வரும் கெடு அனைத்தும் நீட்டிக்கப்பட்டுள்ளன.  
 • ஆதார் பான் இணைப்பு, மார்ச் 31க்குள் செய்ய வேண்டும் என்பது ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது.  
 • நேரடி வரி தாவாவுக்கானம் விவாத் சி விஸ்வாஸ் திட்டமும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி தாக்கல் : 


2020 மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் கடைசி நாள் மற்றும் பதிலீடு ரிட்டர்ன் தாக்கல் செய்யும் நாள் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டிக்கு எந்த வேறுபட்ட நாட்களும் பொருந்தாது.  

 •  ரூ.5 கோடிக்கும் குறைந்த விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு, வட்டி, தாமத கட்டணம் அல்லது அபராதம் இல்லை.
 • ரூ.5 கோடிக்கும் அதிக விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு, தாமத கட்டணம், அபராதம் கிடையாது. ஆனால் 9 சதவீத வட்டி உண்டு.
 • பதிலீடு திட்டத்தை தேர்வு செய்வதற்கான காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • சுங்க இலாக்காவின் சப் க விகாஸ் திட்டம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் இருந்தாலும், இந்த காலத்தில் சுங்கத்துறை 24 மணி நேரமும் செயல்படும்.

 

வர்த்தக விவகாரங்கள் அமைச்சகம்


எம்சிஏ 21 பதிவேட்டைப்பொருத்தவரை, எப்ரல் 1 முதல் செப்டம்பர் வரை தற்காலிகக் கட்டுப்பாடு இருக்கிறது. தாமத பைலிங்கிற்கு கூடுதல் கட்டணம் இல்லை. அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு, இயக்குனர் குழுவை கூட்டுவதற்கான நிர்பந்தம், 60 நாட்களுக்கு தளர்த்தப்படுகிறது.


நிறுவன ஆடிட்டர்கள் ரிப்போர்ட் ஆரடர் 2020, நிதியாண்டு 2020-21 க்கு மாற்றப்படுகிறது.

2019-20 நிதியாண்டில் சுயேட்சை இயக்குனர்கள் ஒரு கூட்டத்தை கூட்ட முடியவில்லை எனில் அது மீறலாக கருதப்படாது.


நிறுவனங்கள்: 


புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்கள், வர்த்தகம் துவங்கிய 6 மாதங்களில், துவக்க அறிவிப்பை வெளியிட வேண்டும். இப்போது கூடுதலாக 6 மாதங்கள் அளிக்கப்படுகின்றன. நிறுவன இயக்குனர்கள் இந்தியாவில் குறைந்தபட்ச நாட்கள் இருக்க வேண்டும் எனும் நெறிமுறையை பூர்த்தி செய்யாவிட்டால் அது மீறலாக கருதப்படாது.


20 சதவீத ரிசர்வ் ஒப்படைக்கும் கெடு, ஏப்ரலில் இருந்து ஜூன் 30 க்கு மாற்றப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் முதர்வடைந்த கடன் பத்திரங்களில் 15 சதவீதத்தை முதலீடு செய்யும் தேவையை ஜூன் 30 வரை நிறைவேற்றலாம்.

திவால்: 

திவாலுக்கான வரம்பு துவக்கத்தில் ரூ. 1 லட்சமாக இருந்தது. சிறு தொழில் நிறுவனங்கள் மத்தியில் திவாலை தடுக்க இது ரூ.1 கோடியாக உயர்த்தப்படுகிறது. இருப்பினும், அரசு நிலைமையை கவனித்து, ஏப்ரலுக்கு மேல் மேலும் மோசமானால், நிறுவனங்கள் திவால் நோட்டீஸ் சமர்பிப்பதை 6 மாதங்களுக்கு தடுக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரலாம்.

மீன்வளத்துறை

இறக்குமதி உரிமம் தொடர்பான விதிமுறைகள் உள்ளிட்டவை தொடர்பான கெடு மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. சரக்கு வருகை தாமதம் ஒரு மாத காலத்திற்கு பொறுத்துக்கொள்ளப்படும்.


சென்னையில் மீன்வள வசதிகளில் தனிப்பகுதியை மறுபதிவு செய்ய கூடுதல் கட்டணம் இல்லை.  

நிதிச்சேவைகள்

 • அடுத்த மூன்று மாதங்களுக்கு, டெபிட் கார்டு மூலம் எந்த ஏடிஎம்மில் இருந்தும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்.
 • வங்கியில் குறைந்த பட்ச கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
 • டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணம் குறைக்கப்படும்.

வர்த்தகம்

அனைத்து வர்த்தகம் தொடர்பான விஷயங்களுக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்படும். ஆனால் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படாது. பொருளாதார சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படும்.


டெபோலினா பிஸ்வாஸ், சுத்ரிஷ்னா கோஷ் | தமிழில்: சைபர்சிம்மன்

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close