இந்தியா முழுதும் 52, தமிழகத்தில் 2 இடங்களில் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடங்கள்!

மாநிலங்கள் வாரியாக கோவிட்-19 ஆய்வுக் கூடங்களின் விவரங்கள் இதோ:

16th Mar 2020
 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

இந்தியா முழுதும் மொத்தம் 52 இடங்கள், அதில் தமிழகத்தில் இரண்டு இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கோவிட்-19 அறிகுறிகள் கண்டறியப்பட்டால் நாடு முழுதும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆய்வுக் கூடங்களில் ரத்தப்பரிசோதனை செய்து கொள்ளலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில், சென்னையில் இயங்கி வரும் ‘கிங் இன்ஸ்டிடியூட்’ எனப்படும் கிங் தடுப்பு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் கோவிட்-19 ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் ஆய்வுக்கூடம் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

coronavirus

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 52 இடங்களில் ஆய்வுக்கூட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


கர்நாடக மாநிலத்தில் 5 இடங்களிலும், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்களிலும் தெலங்கானாவில் ஒரு இடத்திலும் ஆய்வுக்கூட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


மாநிலங்கள் வாரியாக கோவிட்-19 ஆய்வுக் கூடங்களின் விவரங்கள்


தமிழ்நாடு: 2 இடங்கள்

 • கிங் தடுப்பு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
 • தேனி அரசு மருத்துவக் கல்லூரி


கர்நாடகா: 5 இடங்கள்

 • பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
 • பெங்களூரு தேசிய நச்சுநுண்மவியல் கள நிறுவனம்
 • மைசூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
 • ஹாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம்
 • ஷிமோகா மருத்துவ அறிவியல் நிறுவனம்


ஆந்திரா பிரதேஷ்: 3 இடங்கள்

 • ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவ அறிவியல் மையம், திருப்பதி
 • ஆந்திரா மருத்துவக் கல்லூரி, விஷாக்கப்பட்டினம்
 • ஜிஎம்சி, அனந்த்பூர்


தெலுங்கானா: 1 இடம்

 • காந்தி மருத்துவக் கல்லூரி, செகந்திராபாத்


டெல்லி: 2 இடங்கள்

 • AIIMS, டெல்லி
 • தேசிய நோய் தடுப்பு மையம் (NCDC)


மகாராஷ்டிரா: 2 இடங்கள்

 • இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, நாக்பூர்
 • கஸ்தூரிபாய் தொற்றுநோய் மருத்துவமனை, மும்பை


கேரளா: 3 இடங்கள்

 • வைரலாஜி தேசிய மையம்
 • திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை
 • கோழிகோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை


புதுச்சேரி: 1 இடம்

 • ஜிப்மர் மருத்துவமனையிலும் ஆய்வுக்கூடம்


ராஜஸ்தான்: 4 இடங்கள்

 • சவாய் மான்சிங், ஜெய்பூர்
 • Dr. S.N மருத்துவக் கல்லூரி, ஜோத்பூர்
 • ஜலவர் மெடிக்கல் கல்லூரி, ஜலவர்
 • SP மருத்துவக் கல்லூரி, பிக்கானர்

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India