உங்கள் தடுப்பூசி சான்றிதழில் பிழையா? மாற்றிக் கொள்ளும் வழிமுறைகள் இதோ!

கோவின் புதிய வழிமுறைகள் வெளியீடு!
2 CLAPS
0

கோவின் தடுப்பூசி சான்றிதழில் அச்சிடப்பட்ட ஒரு விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த ஆண்டு மற்றும் பாலினம் ஆகியவற்றில் ஏதேனும் கவனக்குறைவான பிழைகள் இருந்தால் அதனை சரிசெய்ய உதவும் புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Cowin வலைத்தளத்தின் மூலம் பயனர்கள் இந்த திருத்தம் செய்யலாம். இது ஆரோக்ய சேது ஆப் வெளியிட்ட டுவீட்டில்,

"கவனக்குறைவான பிழைகள் வந்தால், கோவின் தடுப்பூசி சான்றிதழ்களில் உங்கள் பெயர், பிறந்த ஆண்டு மற்றும் பாலினம் ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்யலாம்," என்று குறிப்பிட்டு இருக்கிறது.

Cowin தடுப்பூசி சான்றிதழ்கள் வெளிநாடு போன்ற பயணங்களுக்கு, வேலை வாய்ப்புகளுக்கு செல்லும்போது உதவுகின்றன.

முன்னதாக, தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் சுய மதிப்பீட்டு செயல்முறை மூலம் ஆரோக்யா சேது பயன்பாட்டில் தங்கள் நிலையை தானாக முன்வந்து புதுப்பிக்க அரசாங்கம் அனுமதித்திருந்தது.

அதேபோல், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அவர்களின் ஆரோக்யா சேது ஆப்'பின் முகப்பு பக்கத்தில் காண்பிக்கப்படும் தடுப்பூசி நிலை அல்லது ஸ்டேட்டஸில் நீல நிற கோடுடன் ஆரோக்யா சேது லோகோவுடன் ஒற்றை டிக் மூலம் கிடைக்கும்.

மேலும், இரண்டாவது டோஸ் செலுத்திய 14 நாட்களுக்குப் பிறகு, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இரட்டை டிக் கொண்ட 'ப்ளூ ஷீல்ட்' ஆப்பில் தோன்றும்.

கோவின் போர்ட்டலில் இருந்து தடுப்பூசி நிலையை சரிபார்த்த பிறகு இந்த இரட்டை டிக் தோன்றும். கோவின் பதிவுக்கு பயன்படுத்தப்படும் மொபைல் எண் மூலம் தடுப்பூசி நிலையை புதுப்பிக்க முடியும். இதற்கிடையே, பிழைகளை சரி செய்யும் வழிமுறைகளை பார்ப்போம்!

* http://cowin.gov.in தளத்துக்குச் சென்று, பதிவு / உள்நுழை (Register/Sign In) என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

* பின்னர் மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். அந்த நம்பருக்கு வரும் ஓ.டி.பி.யை கொடுக்க வேண்டும்.

* பின்னர், தனிநபர் தகவல் பகுதிக்கு சென்று, Raise an Issue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* அதில், ’சான்றிதழில் திருத்தம்' (Correction in Certificate)-ஐ க்ளிக் செய்து தேவைப்படும் திருத்தங்களை செய்ய வேண்டும்.

Latest

Updates from around the world