Co-working முறைக்கான முன்பதிவு 300% அதிகரிப்பு; ஹைப்ரிட் பணிமுறையை விரும்பும் ஊழியர்கள்- ஆய்வில் தகவல்!
இணைந்து பணியாற்ற வழி செய்யும் கோவொர்கிங் முன்பதிவுகள் இந்த ஆண்டு 300 மடங்கு அதிகரித்திருப்பதும், அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து பணியாற்றுவது, அதாவது, ஹைப்ரிட் முறையில் இரண்டும் கலந்த வாய்ப்பை பெற பணி மாற்றத்திற்கும் தயாராக இருப்பதாக GoFloaters ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவின் முன்னணி இணை பணியிட சேவை அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றான, 'கோ ஃப்ளோட்டர்ஸ்' (
), ’ஸ்டேட் ஆப் ஹைபிரிட் வொர்க்’ (State of Hybrid work)2 எனும் பெயரில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் இணை பணியிட முன்பதிவு சேவையான வொர்க்பிளக்ஸி மேடையில் கடந்த 15 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகள் தொடர்பான விரிவான தரவுகளில் இருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Source: Shutterstock
ஆய்வறிக்கை முடிவுகள்
46 ஆயிரத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களின் தரவுகளில் இருந்து இந்த ஆய்வுக்கான அலசல் மேற்கொள்ளப்பட்டது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கோ வொர்கிங் முன்பதிவுகள்: 300 மடங்கு அதிகரித்திருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், முழுநேர அலுவலகப் பணி சூழலுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டால், பணியாளர்கள் வேலை மாறுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
இந்தப் போக்கு, பெருந்தொற்றுக்குப் பிறகு இந்திய தொழில் முறை பணியாளர்கள் மத்தியில் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து பணியாற்றுவது ஆகிய இரண்டும் கலந்த வாய்ப்பு பிரபலமடைந்திருப்பதை உணர்த்துகிறது.
இது தவிர, 80 சதவீத பணியாளர்கள் மற்றும் 60 சதவீத நிறுவனங்கள் ஏதேனும் ஒரு வகையில் ஹைப்ரிட் வாய்ப்பை விரும்புவதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இணைப் பணியிடத்திற்கான முன்பதிவில், பெரும்பாலானவை பெரிய நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளது, பெரிய நிறுவனங்கள் இடவசதியை சிறப்பாக பயன்படுத்திக்கொள்வதை உணர்த்துகிறது. மேலும், கூட்டங்களை நடத்தும் அறைகளுக்கான முன்பதிவும் அதிகரித்துள்ளது.
”பெருந்தொற்றுக்கு பிறகு மாறியுள்ள உலகில், நிறுவனங்கள் இரண்டும் கலந்த ஹைப்ரிட் வாய்ப்பு மற்றும் தொலை பணி வாய்ப்பை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவசியம் ஆகிறது. பணியாளர்களுக்கான வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் உள்ளடக்கிய தன்மை காக்க மட்டும் அல்லாமல், பலதரப்பட்ட பணியாளர்களின் மாறுபட்ட தேவைகளையும் பூர்த்தி செய்ய இது அவசியம் ஆகிறது,” என GoFloaters இணை நிறுவனர் சி.இ.ஓ., ஷியாம்சுந்தர் நாக்ராஜன் தெரிவித்துள்ளார்.

‘அடுத்த 5 ஆண்டுகளில் 83 மில்லியன் வேலை இழப்பு; 69 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்’ - ஆய்வில் தகவல்!
Edited by Induja Raghunathan