கிரிக்கெட் வீரர் தோனியின் ராஞ்சி பண்ணைக்கு வருகிறது 2,000 கருங்கோழிகள்!

By YS TEAM TAMIL|16th Nov 2020
மத்திய பிரதேசத்தின் ஜபாவ் மாவட்டத்தை சேர்ந்த வினோத் மெஹ்தா என்கிற விவசாயிடமிருந்து தோனி வாங்கியுள்ள 2,000 கருங்கோழிகள் டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் ராஞ்சி பண்ணைக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கருங்கோழி பண்ணை அமைக்க உள்ளார். இவர் 2,000 கருங்கோழிகளுக்கு ஆர்டர் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் உள்ள இவரது பண்ணைக்கு விரைவில் இந்த கோழிகள் வந்து சேர உள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு விவசாயத்தின் மீது ஈடுபாடு அதிகம் என்பதால் இயற்கை விவசாயத்தில் களமிறங்கி உள்ளார்.


தோனி ராஞ்சியில் உள்ள 43 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது பால், கோழி, வாத்து பண்ணைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

1

இவர் சமீபத்தில் இயற்கை விவசாயம் பழகும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலானது.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் ஜபாவ் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் மெஹ்தா என்கிற விவசாயிடமிருந்து 2,000 கருங்கோழிகளை வாங்க உள்ளார். இந்தக் கோழிகள் டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் ராஞ்சி பண்ணைக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த கருங்கோழி மருத்துவ குணம் கொண்டது என்று கூறப்படுகிறது. அரிய வகையைச் சேர்ந்த இந்த கோழியின் ரத்தம், இறைச்சி போன்றவை கருப்பாகவே இருக்கும். இதில் புரதச் சத்து அதிகம். அதேசமயம் கொழுப்பு மிகவும் குறைவு. மற்ற கோழி வகைகளைக் காட்டிலும் கருங்கோழி அதிக ருசியுடன் இருக்கும். மத்தியப் பிரதேசத்தின் மலைவாழ் மக்களே இந்த வகை கோழிகளை அதிகம் வளர்க்கின்றனர்.


தகவல் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா