கோகோ கோலா வேண்டாம்: தண்ணி குடிங்க- ரொனால்டோவின் வைரல் வீடியோ!
ட்ரெண்ட் செய்த நெட்டிசன்ஸ்!
யூரோ 2020 கால்பந்து தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்தத் தொடரின் போர்சுக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டார்.
அப்போது, பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரொனால்டோ வந்தவுடன் மேஜையில் இருந்த இரண்டு கோகோ கோலா பாட்டில்களை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு அதற்குப் பதிலாக தண்ணீர் பாட்டிலை எடுத்து மேஜையில் வைக்க வந்தவர், பின்பு அதனை தூக்கிக்
அகுவா என்பது தண்ணீருக்கான போர்ச்சுக்கீசிய வார்த்தை. தண்ணீர் பாட்டிலை தூக்கி காண்பித்து அகுவா என அவர் கூறியது, மக்கள் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சமிக்ஞை செய்தது போல் இருந்தது.
இதையடுத்து இந்த வீடியோ வைரலானது. நெட்டிசன்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்தனர்.
இதே பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் மேனேஜர் பெர்னாண்டோ சாண்டோஸ் கலந்து கொண்டார். அவர் கோகோ கோலா பாட்டில்களை அகற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, யூரோ 2020 போட்டிக்கான முக்கிய ஸ்பான்சர்களில் கோகோ கோலா நிறுவனமும் ஒன்று. இதனால் ரொனால்டோவுக்கு எதிராக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இதனை ட்ரெண்ட் செய்து வரும் நெட்டிசன்கள், இதுதொடர்பாக கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். டுவிட்டர் பயனர் ஒருவர்,
“இறுதியாக கோகோ கோலாவுக்கு பதிலாக தண்ணீரை ஊக்குவிக்கும் ஒருவர் ரொனால்டோ..." என்று பதிவிட்டுள்ளார். அதேநேரம் முன்பு ரொனால்டோ கோகோ கோலா விளம்பரத்தில் நடித்த படங்களையும் பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.