பதிப்புகளில்
’வாவ்’ வாசல்

‘சின்ன தல, செர்ரி, கலக்கல் கர்ன், ஓடினேன்... ஓடினேன்’ தமிழில் எழுதி புத்தாண்டு வாழ்த்து கூறிய நம்ம சிஎஸ்கே டீம்!

Ipl 2019: தமிழ் புத்தாண்டு அன்று நம்ம CSK அணியினர் தமிழர்களை அசத்தினர்...

jaishree
15th Apr 2019
19+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

முத்து முத்தான கையெழுத்தில் செல்லப்பெயர்களை தமிழில் எழுதி, தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்.


பட உதவி: tamil.timesnownews.com

படுஜோராய் நடக்கும் ஐபிஎல் திருவிழாவில் மாஸ் காட்டி வரும் சிஎஸ்கே அணி, ஒவ்வொரு ஆட்டத்திலும் வெறித்தனமாய் விளையாடி சிஎஸ்கே வெறியர்களுக்கு விஷுவல் ட்ரீட் வழங்கிக் கொண்டிருக்க, மறுபுறம் பயிற்சியின் போதும், ஓய்வு  அறைகளிலும் அடிக்கும் லூட்டி வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திவருகின்றனர். அப்படி, சென்னை சூப்பர் சிங்சின் அபிஷியல் டுவிட்டர் பக்கத்தில், நேற்று 'Super wishes from the super kings!’ என்ற வரிகளுடன் வீடியோ ஒன்று அப்லோடு செய்யப்பட்டது.

1.45 நிமிடங்கள் ஓடும் வீடியோவில், சிஎஸ்கே ஆன்தமின் பிஜிம் பின்புறத்தில் தெறிக்க, சிஎஸ்அணியின் சிங்கங்கள் தத்தமது செல்லப்பெயர்களை தமிழில் தடுக்கித் தடுக்கி, குண்டு குண்டு கையெழுத்தில் எழுதி, மழலை உச்சரிப்பில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை வரிசையாய் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆட்டத்தில் அரைசதத்தை அடித்த சுரேஷ் ரெய்னா ‘சின்ன தல’ என்று எழுத, அதைக் கண்டு அருகிலிருக்கும் குரல் ‘சூப்பர் மச்சி’ என்கிறது. தொடர்ச்சியாய், வாட்சன் அவரது பெயரை ‘வாட்டோ’ என்றும், ஜடேஜா ‘ராஜ்புத்’ என்றும், தீபக் சாஹர் ‘செர்ரி’ என்றும், பிராவோ ‘சாம்பியன்’ என்றும், மைதானத்தில் எங்கும் ஓடிக் கொண்டேயிருக்கும் இம்ரான்கான் ‘ஓடினேன், ஓடினேன்’ என்று எழுதியதுடன், பராசக்தி படத்தில் ‘ஓடினேன்..ஓடினேன்’ என்று நடிகர் சிவாஜி கூறும் டோனில் கூறினார்.
‘ஷார்தூள், மோஹிட், கேதார், கலக்கல் கர்ன், ஷார்த்தூள், சான்டா’ என மற்ற வீரர்களும் அவர்களது பெயர்களை எழுதி, அதை அழகாய் படித்தும் காட்டினர். வீடியோவின் இறுதியில் ஒவ்வொரு வீரர்களும் ‘புத்தாண்டு வாழ்த்துகளை’ தமிழில் தெரிவித்து மகிழ்ந்தனர். டுவிட்டர்வாசி களால் எக்கச்ககமாய் ரீடுவிட் செய்யப்பட்ட வீடியோ, பிற சோஷியல் மீடியாக்களிலும் சுத்தி, சுத்தி வந்து, ஹார்டின்களை அள்ளியது.
19+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags