பதிப்புகளில்

இந்திய குடிசைப் பகுதிகளில் மறைந்திருக்கும் அளவில்லாத வளம்: ஒரு பார்வை!

குடிசைப் பகுதிகளை அங்கீகரித்து முறையான ஆவணம் அளிப்பதன் மூலம், இந்திய நகரங்களுக்கு அளவில்லாத வருவாய் அளிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, நகர்ப்புற சேவைகளையும் மேம்படுத்தும் என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 

6th Aug 2018
Add to
Shares
47
Comments
Share This
Add to
Shares
47
Comments
Share

இந்தியாவில் 105 மில்லியனுக்கு மேல் குடிசை பகுதியில் வாழும் மக்கள் இருக்கின்றனர். இவர்கள் தற்காலிக இடங்களில் வசிக்கின்றனர். தங்கள் நிலத்திற்கான உரிமம் மற்றும் பட்டா இல்லாமல் வசிப்பவர்களும் இதில் அடக்கம். குடிசைப்பகுதி தொடர்பான பொது கருத்து மற்றும் மனச்சித்திரம், அழுக்கான சூழலில் நெருக்கமான குடியிருப்புகள், பசித்த, மெலிந்த குழந்தைகள், ஒருங்கிணைக்கப்படாத துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் வறுமை ஆகியவையாக இருக்கிறது.

ஜுலை 23 ல் வெளியான அறிக்கை இந்த வழக்கமான சித்திரத்தை தகர்த்து, குடிசை பகுதிகள் அரசு அதிகாரிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் கண்களுக்கு மறைந்திருக்கும் பொருளாதார சொத்து என தெரிவிக்கின்றன. பெங்களூரு குடிசைப்பகுதிகள் ஆய்வு மற்றும் ஒழுங்கிலாத வசிப்பிடங்கள் செயற்கைகோள் படங்கள் மற்றும் இயந்திர கற்றல் மூலம் பகுப்பாய்வு செய்வது (Studying the Real Slums of Bengaluru and Characterising Irregular Settlements Using Machine Learning and Satellite Imagery) எனும் தலைப்பிலான ஆய்வறிக்கை, பெங்களூருவில் வெளியிடப்பட்டது.

image


ஓமிடியார் நெட்வொர்க், நார்த் கரோலினா மாநில பல்கலைக்கழகம் மற்றும் யூனிவர்சிட்டி ஆப் நார்த் கரோலினா ஆகியவற்றுடன் இணைந்து டியூக் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டான்போர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் பாலிசி, ஐஐஎம்பி நிகழ்வான, ’ஒரு டிக்கெட்- புதிய குடியேறிகள், உருவாகும் வசிப்பிடங்கள் மற்றும் பெங்களூரு குடிசைப்பகுதிகளின் தன்மை’ நிகழ்ச்சியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

“குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள் சவாலான சூழல்களில் காட்டும் மன உறுதி மற்றும் புதுமை தன்மை ஆகியவை இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறோம்’ என்கிறார் 2010 முதல் இந்த ஆய்வுக்குழுவை வழிநடத்திய டியூக் பல்கலைக்கழக பேராசிரியர் அனிருத் கிருஷ்ணா.

“வழக்கறிஞர்கள், புரோக்கர்கள் மற்றும் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்படாத துடிப்பான சந்தையை பெங்களூரு குடிசை பகுதிவாசிகள் கையாள கற்றுக்கொண்டுள்ளனர். இதில் பல்வேறு வகையான சட்டப்பூர்வ தன்மை மற்றும் செயல்பாட்டுத்தன்மை கொண்ட 18 வெவ்வேறு ஆவணங்கள் உள்ளன. தங்கள் நிலம் மற்றும் சொத்து உரிமையை நிலை நாட்ட இவர்களுக்கு இன்னும் மேம்பட்ட முறை தேவை. இந்த ஆய்வு அதற்கான சரியான திசையாக அமைகிறது.”

மறைந்திருக்கும் வளம்

முறையான ஆவணங்கள் இல்லாமல் அரசு மற்றும் வசிப்பவர்கள் இருவருக்குமே குடிசை பகுதி குடியிருப்புகள் முழுவதும் பயன்படுத்தப்படாத வளமாக இருக்கிறது. ஏனெனில் வசிப்பவர்கள் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முடிவதில்லை. அரசால் வரி வசலிக்க முடியவில்லை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படையான சேவைகளை வழங்க முடியவில்லை.

பெங்களூரு குடிசை பகுதியில் வீட்டிற்கான சசாசரி விலை ரூ. 15 லட்சம் என அறிக்கை தெரிவிக்கிறது. இதன் பொருள் தெளிவாக இருக்கிறது. முதல் பார்வைக்கு மறைந்திருக்கும் பொருளாதார சொத்தாக இவை அமைகின்றன. குடிசை பகுதிகளை அங்கீகரித்து ஆவணங்கள் அளிப்பது, இந்திய நகரங்களுக்கு இதுவரை இல்லாத வருவாயை அளித்து, சிவிக் வசதிகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

இந்த ஆய்வு ஏழு ஆண்டுகளில் 4,500 க்கும் மேற்பட்ட குடிசை பகுதி வாழ் மக்களிடம் திரட்டிய ஆழமான புரிதலுடன், சொத்து பரிவர்த்தனை விவரங்களை இணைப்பதன் மூலம், இங்குள்ள பொருளாதார வாய்ப்புகளை உணர்த்துகிறது.

image


“அரசுகளும் இதை உணரத்துவங்கியுள்ளன. ஒடிஷாவில் மாநில அரசுடன் இணைந்து, 2,50,000 குடிசை குடியிருப்புகளை ட்ரோன்கள் மூலம் வரைபடமாக்கி வருகிறோம். இதன் மூலம் ஒரு மில்லியன் பேருக்கு நில உரிமை ஆவணம் வழங்க முடியும். குடிசைப் பகுதி மக்களுக்கு சொத்து ஆவணம் வழங்குவது பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது,’ என்கிறார் இந்தியாவில் ஒமிடியார் நெட்வொர்க்கின் பாட்னர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரூபா குட்வா.

முக்கிய புரிதல்கள்

சமூக அடுக்குகள் முழுவதும் மேம்பட்ட வாழ்க்கைத்தரம், அடிப்படை வசதிகளை அளிக்கும் தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான இந்தியா என நகர்புற சமூகத்திற்கான பல்வேறு பலன்களை அளிக்க முடியும் என ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த பகுதியில் மற்றும் வெளியே உள்ள பலவகையான பங்குதாரர்கள், குடிசைப் பகுதி மக்களின் உண்மையான தேவை மற்றும் தொழில்நுட்பம் எப்படி உதவும் போன்றவற்றை ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

• குடிசை பகுதிகளுக்கு பொருத்தமில்லாமல் அரசு ஆவணங்கள் உள்ளன. எண்ணிக்கை குறைவாகவே பதிவாகியுள்ளன. பெங்களூருவில் 597 குடிசை பகுதி இருப்பதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இயந்திர கற்றல் அல்கோரிதம் 2,000 குடிசை பகுதிகள் இருப்பதாக தெரிவிக்கிறது.

• குடிசை பகுதிகள் தற்காலிக தன்மை கொண்டவை அல்ல. நகர்புறங்களுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குடிசை பகுதிகள் அதிகரிக்கக் காரணம் எனும் எண்ணத்தை இது தகர்க்கிறது. பெங்களூருவில் குடிசைப் பகுதி வாசி 20 ஆண்டுகளுக்கு மேல் சராசரியாக வசித்து வருகிறார்.

• பெங்களூருவில் சராசரி குடிசைப் பகுதி குடியிருப்பு ரூ.15 லட்சம் மதிப்பு கொண்டது. முறையான ஆவணம் இல்லாமல், அரசோ குடியிருப்பவர்களோ இதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

• குடிசைப் பகுதிகள் பல அடுக்கு வாழ்க்கை தரத்துடன் உள்ளன. ஒரு சில பகுதிகளில் குடிநீர் மற்று கழிவு வசதி இல்ல. மற்றவற்றில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தேவை. இதற்கேற்ற கொள்கை முடிவுகள் தேவை.

• தொழில்நுட்பம் ஒரு தீர்வாக அமையும். செயற்கைக்கோள் படங்கள் மற்றும் இயந்திர கற்றல் அல்கோரிதம், குடிசைப் பகுதிகளை வரைபடமாக்கி, வளர்ச்சியை கண்காணிக்க உதவும்.

ஆங்கிலத்தில்: ஸ்ருதி கேடியா | தமிழில்; சைபர்சிம்மன் 

Add to
Shares
47
Comments
Share This
Add to
Shares
47
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக