பதிப்புகளில்

மத்திய பட்ஜெட் 2018: முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும்!

1st Feb 2018
Add to
Shares
14
Comments
Share This
Add to
Shares
14
Comments
Share

2018 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் நிதி அமைச்சர் திரு.அருண் ஜேட்லி தாக்கல் செய்து உரையாற்றினார். நாட்டில் வளர்ச்சி விகிதம் அடுத்த நிதி ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்கும் என்றார் மேலும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுபதவி ஏற்றது முதல் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நிய முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என சபையில் தெரிவித்தார் ஜெட்லி.

”நடப்பு நிதிநிலை ஆண்டில் இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி விகிதம் 7.2- 7.5 சதவீதத்தை எட்டும்,” என்றார்.
image


இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யப்படும் என்றும் வேளாண்மை உற்பத்தி முன்பு எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக கூறினார். அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நிய நேரடி முதலீடு அதிகரித்தும், வரி ஏய்ப்பு குறைந்துள்ளது என்றார். மேலும்

இந்தியாவின் பொருளாதாரம் 2.5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

மத்திய பட்ஜெட் 2018-ல் முக்கிய அம்சங்கள்

வேளாண் மற்றும் விவசாயத்துறை அறிவிப்புகள்:

* பிரதமர் கிராம சாலை திட்டம் வேளாண் மையங்களை இணைக்கும்

* வேளாண் கட்டமைப்பு வசதிகளுக்கு 22000 கோடி ஒதுக்கீடு

* இயற்கை வேளாண்மையை பெருமளவில் ஊக்குவிக்க நடவடிக்கை

* விவசாயிகள் கடன் அட்டைத்திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறைக்கும் விரிவாக்கம்

* வேளாண் ஏற்றுமதிக் கொள்கை எளிதாக்கப் பட்டுள்ளது

* வேளாண் ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் அளவை எட்ட வாய்ப்பு

* 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும்

மற்ற துறை அறிவிப்புகள்: 

* மீன் மற்றும் இறால் வளத்துறைக்கு 10000 ரூபாய் ஒதுக்கீடு

* உணவு பதப்படுத்துதல் துறைக்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

* கிராமப்புறங்களைச் சேர்ந்த 8 கோடி மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

* தில்லியில் மாசுக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய நடவடிக்கை.

* அடுத்த நிதி ஆண்டிற்குள் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.

* 2022-க்குள் அனைவருக்கும் வீடு.

* ஊரக சாலைத்திட்டத்தின் கீழ் 3 கோடியே 21 லட்சம் ஊரக வேலை வாய்ப்பு.

* பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சித் தர புதிய திட்டம். ஒருங்கிணைந்த பி.எட். திட்டம் அறிமுகம்.

* கல்வித்துறைக்கு ரூ 1லட்சம் கோடி முதலீடு. நவோதையா பள்ளிகள் அடிப்படையில் புதிய ஏகலைவன் பள்ளிகள்.

* கல்வித்துறைக்கு கூடுதல் வரி 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்வு

நேர்மையான ஊழலற்ற அரசை வழஙகி, ஏழ்மையை ஒழித்து வலுவான புதிய இந்தியாவை வடிவமைக்க அரசு உறுதி. ஊரகப் பகுதிக்கு கூடுதல் நிதி வழங்க முடிவு. வளர்ச்சிப் பாதையில் உற்பத்தித் துறை, வேளாண், கல்வி, ஊரகத்துறை, சுகாதாரம் ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம். சுகாதார இந்தியாவை உருவாக்க ஆயுஷ்மான் இந்தியா திட்டம்.

* அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்து.

* 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி வீதம் ஏற்படுத்தப்படும்.

* 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.

* ஷெட்யூல்டு வகுப்பினர் நலனுக்காக ரூ 56919 கோடி ஒதுக்கீடு.

* சமூக நலத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கு 1.35 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு 

* கங்கையை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் 

* முத்ரா கடன் திட்டத்திற்கு ரூ 3லட்சம் கோடி. மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம்.

* காசநோயாளிகள் நலனுக்காக ரூ 600 கோடி ஒதுக்கீடு 

* வேலைவாய்ப்பை பெருக்குவதே அரசு கொள்கைத் திட்டங்களின் மையம் ஆகும் .

* ஸ்மார்ட் மற்றும் அம்ரூத் நகரங்களுக்கு ரூ 2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு 

* நாட்டின் 10 பிரபலமான சுற்றுலாத் தலங்கள் நாட்டின் அடையாளமாக உயர்த்தப்படும்

* கட்டமைப்புத் துறையில் ரூ 50 லட்சம் கோடி முதலீடு செய்ய பரிசீலனை 

* 9000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை நடப்பு நிதி ஆண்டிலேயே அமைத்து முடிக்கத் திட்டம்.

* 4000 கி.மீ. ரெயில்வே பாதைகள் மின் மயமாக்கப்படும்.

* ரெயில்வே துறையில் ரூ 1 லட்சத்து 48 ஆயிரம் கோடி செலவிட முடிவு.

ரெயில்வே பாதுகாப்பை உறுதி செய்ய முக்கியத்துவம். 2019 ஆம் ஆண்டிற்குள் 18000 கி.மீ. தூர ரெயில் பாதைகள் இருவழிப்பாதை ஆக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

* உடான் திட்டத்தின் கீழ் 56 புதிய விமான நிலையங்கள் இணைக்கப்படும்.

* ஆயுதப்படைகளை நவீனப்படுத்துவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதான நோக்கம்.

 2018-19ல் தொழில் துறைக்கு இணக்கமான பாதுகாப்பு உற்பத்திக் கொள்கை வடிவமைக்கப்படும். அனைத்து தொழில்நிறுவனங்களுக்கும் ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்கப்படும்.

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 கோடியாக உயர்வு. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை ’நேர்மையானவர்களின் விழா’வாக கொண்டாடப்பட்டது. தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை

* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை. 

* குறு, சிறு மற்றும் நடுரக நிறுவனங்களுக்கு வரிச்சலுகை 25 சதவீதமாக குறைப்பு. 

* மூத்த குடிமக்கள் ரூ 50000 வரை மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் பலன் பெறலாம்.

* இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன், தொலைக்காட்சி பெட்டிகள் மீதான சுங்க வரி உயர்வு

Add to
Shares
14
Comments
Share This
Add to
Shares
14
Comments
Share
Report an issue
Authors

Related Tags