பதிப்புகளில்

சென்னை நிறுவனம் 'நோஷன் ப்ரெஸ்' 1 மில்லியன் டாலர் நிதியை பெற்றுள்ளது!

29th Aug 2016
Add to
Shares
23
Comments
Share This
Add to
Shares
23
Comments
Share

சென்னையை சேர்ந்த 'நோஷன் பிரஸ்' (Notion Press) இன்று 1 மில்லியன் டாலர் நிதியை ப்ரி சிரீஸ் ஏ முதலீடாக பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 'ஹை நெட் வொர்த் இன்டிவிதுவல்ஸ்' (High-Net Worth Individual) இவர்களிடம் இருந்து இந்த முதலீட்டை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த டீல் மூலம் கிடைத்துள்ள நிதியை, நோஷன் பிரஸ், உலக சந்தையை பிடிக்க, தங்களது மேலாண்மை குழுவை விரிவடைய செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. 

image


நோஷன் ப்ரஸ்

நோஷன் ப்ரஸ், ஒரு சுய பதிப்பக சேவை தளம். இதில் இந்திய எழுத்தாளர்கள், தங்கள் புத்தகங்களை வெளியிடவும், விற்பதற்கும் வழி செய்யும் ஒரு இ-புக் தளம். 2012 நவீன் வல்சகுமார், பார்கவா அடேபலே மற்றும் ஜனா பிள்ளே ஆகிய பொறியாளர்களால் தொடங்கப்பட்ட இந்த தளம் இதுவரை 2000க்கும் அதிகமான எழுத்தாளர்களின் புத்தகங்களை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்றுள்ளது. இது இன்று அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு பதிப்பக சேவை நிறுவனமாகும். 

தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்த பதிப்பக நிறுவனம் செயல்படுவதால் புத்தக விற்பனை மற்றும் வெளியீட்டில் உள்ள சவால்களை களைந்து எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. 

முதலீடை பெற்றது பற்றி, நோஷன் ப்ரஸின் இணை நிறுவனர், நவீன் கூறுகையில்,

"நாங்கள் வேகமாக வளர்ந்து வருகிறோம். வெளிநாட்டு சந்தையில் காலடி வைக்க விரும்புகிறோம். இந்த நிதியை கொண்டு இந்தியா மற்றும் பல நாடுகளில் எங்கள் சேவையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இறங்குவோம். எங்கள் ப்ராண்டை உலகளவில் வெற்றி அடைய செய்வோம்", என்றார். 

கூடிய விரைவில் அமெரிக்காவில் இவர்களது சேவை தொடங்க உள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் மூன்று நாடுகளில் செப்டம்பர் மாதத்திற்குள் தொடங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். முதலீட்டாளர்களின் உதவியுடன் எங்கள் குறிக்கோளை நோக்கி பயணிப்போம்' என்று கூறியுள்ளனர். 

Add to
Shares
23
Comments
Share This
Add to
Shares
23
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக