பதிப்புகளில்

சுற்றுச்சூழலுக்கேற்ப வாழை நாரால் தயாரிக்கப்படும் சாத்தி பட்டைகள்!

வாழை நார் வைத்து செய்த சுகாதார பட்டைகள் - மாதவிடாய் கழிவு தீர்க்கும் சாத்தி பட்டைகள்

YS TEAM TAMIL
29th Nov 2015
Add to
Shares
18
Comments
Share This
Add to
Shares
18
Comments
Share

இந்தியாவின் கிராமப்புறங்களில், மாதவிடாய் ஏற்படும் பெண்கள் சமூகத்திடமிருந்து ஒதுக்கி நிற்கின்றனர், இதற்கு முக்கிய காரணம் மலிவாக அவர்களுக்கு சுகாதார பாதுகாப்பு கிடைக்காததே ஆகும். இந்த தாக்கங்கள் உண்மையே! இதனால் ஒவ்வொரு வருடமும், 50 நாட்கள் வரை கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகள் வேலைக்கோ, பள்ளிக்கோ மாதவிடாய் சமயத்தில் செல்வதில்லை. ஒரு அறிக்கையின் படி "போதுமான மாதவிடாய் பாதுகாப்பின்மையால், வளரிளம் பெண்கள் (12-18 அகவை) மாதத்திற்கு ஐந்து நாட்களுக்கு பள்ளிக்கு செல்லாமல் இருக்கிறார்கள் (வருடத்தில் 50 நாட்கள்). இதில் 23% பெண்கள், மாதவிடாய் தொடங்கும் போதே பள்ளியை விட்டுவிடுகிறார்கள்".

பொருளாதார சவால்களுடன் சேர்ந்து, கலாச்சார சூழ்நிலைகள் பல பெண்களை சுகாதார பாதுகாப்பிலிருந்து தடுக்கிறது. இந்த சவால்களால் நோய் தொற்று மற்றும் கருவுறாமை ஏற்படுகிறது.

இந்த சுகாதார பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், சாத்தியை க்ரிஸ்டின் ககெட்சு, அம்ரிதா சைகால், கிரேஸ் கேன், அசுதோஷ் குமார் மற்றும் சகாரி ரோஸ்,"சாத்தி" யை துவக்கினர். இதன் மூலம், வாழை நார் வைத்து மலிவு விலையில் சுகாதார பாதுகாப்பு பட்டைகளை உற்பத்தி செய்ய தொடங்கினார்.

சாத்தியின் கதை

கிரிஸ்டின் காகிட்சு

கிரிஸ்டின் காகிட்சு


"நான் எப்போதும் வளர்ச்சி மற்றும் பொறியியலில் ஆர்வமாக இருந்தேன் என்று கிரிஸ்டின் தன் கதையைக் கூறுகிறார். இந்த இரண்டையும் செய்ய எம்.ஐ.டி. உதவியது. சரியான பாதையில் என்னை வழிநடத்தி, சமூக முயற்சி பற்றி கற்றுத்தந்தது". இவர் களஆய்வுக்காக இந்தியா வந்த போது இயற்கையான க்ரையான் செய்யத் தொடங்கினார். "புது தயாரிப்பு மற்றும் நிலைப்புத் தன்மை ஆகியவைகளில் ஆர்வமாக இருந்தேன்". ஆய்வு முடித்த பின்னர், உத்தரகண்டில் உள்ள அரசு சாரா "அவந்தி" என்னும் அமைப்பில் வேலை செய்தார். "சமூக நிறுவனத்தில் வேலை செய்ய இந்த அமைப்பே தூண்டிவிட்டது. மறுபடியும், அமெரிக்காவிலுள்ள ஆரக்கிள் நிறுவனத்தில் சேர்ந்தேன், ஆனால் அது சரியான பொருத்தம் இல்லை என்று அறிந்தேன். மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன்".

அம்ரிதா சைகால் மற்றும் க்ரிஸ்டின் எம்.ஐ.டி. யில் பொறியியல் பயின்றார்கள். கிராமப்புற பெண்களுக்கு, மலிவான விலையில் சுகாதார பட்டைகள் உருவாக்கும் எண்ணத்தில் அம்ரிதா இருந்தார். இதற்கு ஒரு அணியைத் தேடினார். "பெண்கள் மேம்பாட்டில் எனக்கு ஆர்வம் இருந்தது, பெண் பொறியாளராக, நீங்களும் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்" என்று க்ரிஸ்டின் கூறுகிறார்,

2014 ஆம் ஆண்டில், ஹார்வர்டு பயின்ற முன்னாள் மாணவர்களுக்காக நடத்திய போட்டியில், சமூக நிறுவன பிரிவில் சாத்திக்காக அம்ரிதா மற்றும் க்ரிஸ்டின் $50,000 பரிசாக பெற்றார்.

திட்டங்களில் மாற்றம்

மலிவு விலையில் கிராமப்புற பெண்களுக்கு சுகாதார பட்டை வழங்குவதே சாத்தியின் நோக்கம். ஆனால், அது மாறிவிட்டது. அதை விளக்குகிறார் கிரிஸ்டின்,

"சிந்திக்காமல் ஒரு பொருளைத் தயாரிப்பதில் நோக்கம் முழுமை அடையும் என்று நான் நம்பவில்லை. ஒரு வெளியகற்றும் பொருளைத் தயாரிக்கும் போது, அது என்ன ஆகிறது என்றும் அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா என்பதை சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், எப்படி அது வித்தியாசமான பேடாக இருக்க முடியும்?".

க்ரிஸ்டின் நமக்கு எண்கள் வைத்து விவரிக்கிறார்...

இந்தியாவில் 12% பெண்கள் மட்டுமே சுகாதார பட்டைகளை உபயோகப்படுத்துகிறார்கள். இது மிகவும் குறைந்த எண்ணிக்கை. ஆனாலும், ஒவ்வொரு மாதமும் 9000 டன் அளவுக்கும் மேல் சுகாதார கழிவுகள் உற்பத்தியாகிறது. அனைத்து இடங்களில் கிடைக்கும் பட்டைகள், ஒரே அடிப்படை பொருளை உபயோகம் செய்கிறார்கள். இந்தவகை பேடுகளில் நன்றாக உறியும்' பொருட்கள் மற்றும் கலக்கப்படும் இரசாயனங்கள் சுற்றுச்சூழலை மிகவும் பாதிக்கும்.

இது போன்ற பட்டைகள் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானால் சுற்றுச்சூழல் என்ன ஆகும் என்று சிந்தியுங்கள்.

சுற்றுச்சூழலுக்கேற்ப வாழை நார் வைத்து செய்த சுகாதரா பட்டைகள் - மதவிடாய் கழிவு தீர்க்கும் சாத்தி பட்டைகள்

சுற்றுச்சூழலுக்கேற்ப வாழை நார் வைத்து செய்த சுகாதரா பட்டைகள் - மதவிடாய் கழிவு தீர்க்கும் சாத்தி பட்டைகள்


மலிவு விலையில் சுகாதார பட்டை கிடைப்பதால், பெண்கள் எளிதாக பெற முடிந்தது; சமூகத்திற்கு ஏற்படும் சுமை கேள்வி குறியாகவே இருந்தது. இதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பட்டைகள் உற்பத்தி செய்யும் போது, ஒரு புதிய பொருளை உபயோகப்படுத்துவதால் சுகாதாரம் நலமாக இருக்கும் என்று எண்ணினோம்.

நீண்ட பாதை ஆனால் நிலையானது

image


மூலப்பொருட்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். சாத்தி என்பதே 100% சுற்றுச்சூழலுக்கேற்ற வாழை நார் சுகாதார பட்டை; இது முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களுக்காக தயாரிக்கப்பட்டு வருகின்றது. விலையைப் பற்றி க்ரிஸ்டின் கூறுகையில், "நகர்ப்புற பெண்களுக்கு மற்ற பேடுகளின் அதே விலையில் தான் விற்கப்படுகிறது. இதனால், கிராமப்புற பெண்களுக்கு மலிவாகவும், எளிதாகவும் கிடைக்கும், மேலும் பாதுகாப்பாக மாதவிடாய் நேரத்தை கையாள உதவுகிறது.

அகமதாபாத் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திலிருந்து, வாழை நார் பெறப்படுகிறது. இந்த நார் என்பது விவசாயிகளுக்கு ஒரு கழிவுப்பொருள். சாத்தி விவசாயிகளிடம் இதைப்பெற்று, கூடுதல் வருமானம் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

திட்டத்தின் படி, அடிதட்டு மக்களுக்கு பயிற்சியும், வேலை வாய்ப்பும் கொடுக்க உள்ளார்கள் என்று க்ரிஸ்டின் கூறுகிறார், "இந்தியாவின் அனைத்து கிராமப் பெண்களுக்கும் மலிவான, எளிதான முறையில் சுகாதார பட்டையை அளிப்பதே நோக்கமாக உள்ளது. இதனால், அதிகமான இளம் பெண்கள் பள்ளிக்கு சென்று, தங்கள் கனவுகளை சாதிக்க முடியும்".

தற்போதையை சவால்களை சாமளிக்கும் வகையில், பெரிய உற்பத்தி அலகு அமைத்தும், விநியோக அங்கத்தை சீரமைப்பதில் தெளிவாக இருக்கிறது சாத்தி. "இது கடினமாக இருந்தாலும் நாங்கள் ஒரு காலக்கட்டத்தில் செய்து முடிப்போம். இறுதி இலக்கு (அனைத்து கிராமப்புற பெண்களை அடைவது) நிலைக்கும், அதற்கு முன் சில படிகள் மட்டுமே எடுத்து வைக்க வேண்டும்" என்று க்ரிஸ்டின் விடைப்பெறுவதற்கு முன் கூறுகிறார்.

ஆக்கம் : Snigdha Sinha | தமிழில்: Sowmya

Add to
Shares
18
Comments
Share This
Add to
Shares
18
Comments
Share
Report an issue
Authors

Related Tags

    Latest Stories

    எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக