பதிப்புகளில்

காசநோயில் தவித்த முன்னாள் நடிகைக்கு உதவிய சல்மான் கான்...

சல்மான் கானுடன் துணை நடிகையாக பணியாற்றிய பூஜா தத்வால் காசநோயால் உடல் மெலிந்து தனியே தவிப்பதை அறிந்த சல்மான் கான் அவருக்கு உதவ முன்வந்திருக்கிறார். 

YS TEAM TAMIL
14th Aug 2018
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

மறக்கப்படுதலை போன்றதொரு வேதனை வேறெதுவும் இல்லை. அதுவும், ஒரு காலத்தில் புகழோடும், மக்களோடும் இருந்துவிட்டு, கஷ்ட வேளையில் ஆட்கள் யாரும் இன்றி தவிப்பது கொடுமையான உணர்வு. ஆனாலும், புகழின் உச்சியில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நட்சத்திரங்களின் கதைகளை நாம் கடந்தபடியே தான் இருக்கிறோம். 

1995 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான ‘வீர்காடி’யில் சல்மான் கான் உடன் பணி புரிந்தவர் நடிகை பூஜா தத்வால். காசநோயால் தாக்கப்பட்ட பூஜா தத்வால், குடும்பத்தாலும், நண்பர்களாலும் தனித்துவிடப்பட்டார். காசநோய் பிறருக்கு பரவும் என்பதால் மருத்துவமனையில் ஒரு தனி அறையில் இருந்த பூஜாவின் உடல்நலம் தேறவில்லை என்பதை மருத்துவர்கள் அறிந்திருந்தார்கள். பூஜாவை கவனித்துக் கொள்ளவோ, நம்பிக்கையூட்டவோ யாரும் உடன் இல்லாதது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். 

Image courtesy : kenfolios.com

Image courtesy : kenfolios.com


பூஜாவின் நுரையீரல் செயல்பாடு குறைந்துகொண்டே இருந்ததால், அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டிருந்தது. பூஜாவின் எடை குறைந்து வெறும் 23 கிலோவாக இருந்தது. இந்நிலையில் தான் அவர் ஒரு வீடியோ மெசேஜ் மூலமாக சல்மான் கானை தொடர்பு கொண்டார். அந்த செய்தி சல்மான் கானை சென்று அடைந்தது. 

“இந்த செய்தி இப்போது தான் எனக்கு கிடைத்தது. எங்களால் செய்ய முடியும் உதவி எல்லாவற்றையும் செய்வோம். என்னுடைய குழு ஏற்கனவே உதவிகள் செய்ய தொடங்கிவிட்டது. பூஜா இப்படி ஒரு நிலையில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் குணமாகிவிடுவார் என்று நம்புகிறேன்,”

என்று சல்மான் கான் இது குறித்து பேசியிருக்கிறார். சல்மான் கானின் ‘பீயிங் ஹ்யூமன்’ (Being human) அமைப்பு பூஜாவிற்கு தேவையான உதவிகளை செய்ய முன் வந்திருக்கிறது. 

தற்போது பூஜா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை இரண்டு மாதம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உடல் நலன் தேறியிருக்கும் பூஜா செய்தியாளர்களிடம் பேசிய போது, 

Image courtesy : kenfolios.com

Image courtesy : kenfolios.com


“நான் எப்படி உணர்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது என நினைக்கிறேன். மார்ச் இரண்டாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நான் அங்கேயே சாகப் போகிறேன் என்று தான் நினைத்தேன் - மன அழுத்தத்தை உண்டாக்கும் அந்த வார்டின் மூலையில் கிடக்கும் ஒரு படுக்கையில் சாவேன் என்று நினைத்தேன். என்னுடைய நண்பர்களும், குடும்பமும் என்னை கைவிட்டுவிட்டார்கள். 

என்னுடைய நுரையீரல் நன்றாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னதும், எனக்கிருந்த கொஞ்சம் நம்பிக்கையும் போய்விட்டது. என்னைப் போலவே தனியே விடப்பட்டவர்கள் நிறைய பேர் தனியே சாவதை நான் பார்த்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் நான் அவர்களை போல தனியே சாகக் கூடாது என்று முடிவு செய்தேன்.

”காசநோய் வருவதனால் சமுகம் உங்களை புறக்கணிக்கும். இருந்தாலும் எனக்கு உதவிய சல்மான கானுக்கு நன்றிக்கடனோடு இருக்க நினைக்கிறேன். துணி, சோப், டயாபர், உணவு, மருந்து என அவருடைய அமைப்பு அத்தனை தேவைகளையும் கவனித்துக் கொண்டது. நான் உயிர் பிழைத்திருப்பதற்கு காரணம் அவர் மட்டுமே,” என்று சொல்லியிருக்கிறார். 

பல சர்ச்சைகளில் சிக்கும் சல்மான் கான், இன்னொரு உயிரின் மீது கொண்டிருக்கும் அக்கறையும், பரிவும் பாராட்டத்தக்கது தான். 

கட்டுரை உதவி: ஸ்னேஹா

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக