பதிப்புகளில்

’ஸ்மார்ட் நகரங்கள்’ பட்டியலில் மேலும் 9 நகரங்கள்...

25th Jan 2018
Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share

அடிப்படை சிவில் சேவைகளை வழங்க தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை (ஐசிடி) பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொரு நகருக்கும் ரூ.500 கோடி முதலீடு செய்ய அரசு உத்தேசித்துள்ளது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தை அறிவித்தார். 

அதன் பிறகு 90 நகரங்கள் ஸ்மார்ட் நகரங்களாக உருவாக்கப்பட அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இப்போது மத்திய அரசு மேலும் 9 நகரங்களை சேர்த்துள்ள நிலையில், மொத்த பட்டியல் 99 ஆக உயர்ந்துள்ளது.

image


வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கீழ் கண்ட நகரங்கள் ஸ்மார்ட் நகரங்களாக உருவாக்கப்பட பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்தார்:

 சில்வாசா (தத்ரா நகர் ஹவேலி)

 ஈரோடு (தமிழ்நாடு)

 டையூ (டாமன் டையூ)

 ஷரீப் (பிஹார்)

 பெரிலி (உத்திர பிரதேசம்)

 இடாநகர் (அருணாசால பிரதேசம்)

 மொராதாபாத் (உத்திர பிரதேசம்)

 ஷரன்பூர் (உத்திர பிரதேசம்)

 கவரட்டி (லட்சத்தீவுகள்)

100-வது நகரம் எதுவாக இருக்கும். ஒரு நகரம் பரீசலனையில் இருக்கிறது. மேகலயாவின் ஷில்லாங் நகரம் இது தொடர்பான திட்டத்தை சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் நகரங்கள், 2022-ம் ஆண்டில், மக்களுக்கு அரசு சேவைகளை வழங்கவும், அவற்றை நெறிப்படுத்தவும், தொடர்பு கொள்ளவும் நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும். முதல் கட்டமாக ஒவ்வொரு நகரத்திற்கும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும். குடிநீர் விநியோகம், சுகாதாரம், வீட்டுவசதி, கழிவுகள் அகற்றம் மற்றும் நகர்புற போக்குவரத்து ஆகியவற்றுக்கு ஐ.சி.டி பயன்படுத்தப்படும்.

ஸ்மார்ட் நகரங்களில் ஐசிடி பயணத்தில் சிஸ்கோ, ஐபிஎம் மற்றும் எஸ்.ஏ.பி உள்ளிட்ட தொழில்நுட்ப நகரங்கள் முக்கிய பங்காற்ற உள்ளன. ஸ்மார்ட் நகரங்களின் முக்கிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்படும் விதம் தொடர்பான தகவல்களை செயற்பாட்டாளர்கள் மற்றும் வல்லுனர்கள் கோரியுள்ளனர். 

உள்கட்டமைப்பின் ஒவ்வொரு அம்சங்களுடனும் ஐ.சிடி இணைக்கப்படும் சூழலில் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் தரவுகளின் தனியுரிமை ஆகிய கேள்விகள் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. இந்த சேவைகள் மக்களுக்கு எப்படி வழங்கப்படும், செல்போன் மூலமா அல்லது இணைய மையங்கள் மூலமா எனும் கேள்வியும் விவாதிக்கப்படுகிறது.

அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள 9 நகரங்களுக்கான உத்தேச முதலீடு ரூ.12,824 கோடியாகும். (409 திட்டங்களுக்கு). இதில் ரூ. 10,639 கோடி குறிப்பிட்ட பகுதிகளுக்கான திட்டங்களுக்கும், ரூ.2,185 கோடி நகரம் தழுவிய திட்டங்களுக்கும் ஒதுக்கப்படும். இந்த பகுதிகளில் வாழும் 35 லட்சம் மக்கள் இதன் தாக்கத்தை உணர்வார்கள்.

ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா

Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share
Report an issue
Authors

Related Tags