பதிப்புகளில்

இருளில் ஒரு புதுவித அனுபவம்: பார்வையற்றோர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ’Dialogue in the dark'

Mahmoodha Nowshin
6th Sep 2017
Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share

இருட்டு என்றால் ஒரு வித பயம் அல்லது பதட்டம் எல்லோரிடமும் இருக்கும். ஒரு சில நிமிடங்கள் இரவில் மின் தடை ஏற்பட்டால் கூட உடனே நமது கைபேசி, டார்ச் அல்லது மெழுகுவர்த்தியை தேடுகிறோம். காரணம் இருட்டில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. அந்த நேரத்தில் மட்டுமே பார்வை அற்ற பலரை நாம் எண்ணிப் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையும் இருட்டில் கழிக்கிறார்கள் என அவர்கள் மீது நாம் அனுதாபப் படுகிறோம். ஆனால் எங்களுக்கு அனுதாபம் தேவை இல்லை, உங்களுக்கு எங்கள் வாழ்க்கையை உணரவைக்கிறோம் என்று இருட்டில் வாழும் அனுபவத்தை நமக்கு அளிக்கிறார்கள் ’Dialogue in the dark' (DID) அணி.

’Dialogue in the dark' ஊழியர்கள்<br>

’Dialogue in the dark' ஊழியர்கள்


அது என்ன இருட்டில் ஒரு அனுபவம் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். நாம் அன்றாட செய்யக் கூடிய செயல்கள் அதாவது பூங்காவில் நடைப்பயிற்சி, ஷாப்பிங், தேநீர் அருந்துதல், படகு சவாரி போன்றவைகளை முழுமையான இருட்டில் நம்மை செய்ய வைப்பதே இக்குழுவினரின் பணி. 

DID-ன் தோற்றம்!

இது ஒரு உலகளாவிய பச்சாதப அனுபவம், அதாவது கற்பனையாக மற்றவர் உள்ளத்தை அறிதலுக்கான முயற்சி. 1988-ல் ஆன்ட்ரியாஸ் ஹெயின்கே என்பவரால் ஜெர்மனியில் முதல் முதலில் தொடங்கப்பட்டது 'டயலாக் இன் தி டார்க்’ (DID). இயலாமை, மாற்றுத்திறனாளி மற்றும் பன்முகத்தன்மை உடையோர் பற்றிய மக்கள் மனப்போக்கை மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 27 வருடங்களாக DID 41 நாடுகளில் இயங்கி வருகிறது. இதுவரை 9 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் தினசரி செய்யும் செயல்களை DID மூலம் இருட்டில் செய்து பார்த்துள்ளார்கள். மேலும் ஆயிரக்கணக்கான பார்வையற்றோருக்கு வேலை வாய்ப்பும் அளித்துள்ளது இந்த அமைப்பு.

எஸ்.வி.கிருஷ்ணன் மற்றும் சுதா கிருஷ்ணன் - இந்திய கிளை  நிறுவனர்க<br>

எஸ்.வி.கிருஷ்ணன் மற்றும் சுதா கிருஷ்ணன் - இந்திய கிளை  நிறுவனர்க


DID இந்தியாவிற்கு வந்தது எப்படி?

எஸ்.வி.கிருஷ்ணன் மற்றும் சுதா கிருஷ்ணன் ஆகிய இருவரும் நமக்கு இந்த அனுபவத்தை அளிக்க அட்லாண்டாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். 2009-ல் எஸ்.வி.கிருஷ்ணன் அட்லாண்டா விமான நிலையத்தில் காத்திருந்தபோது இந்த DID கண்காட்சியை கவனித்தார். இந்த புதிய முயற்சி அவரை ஈர்த்தது, அதாவது ஒரு பொழுதுப்போக்கு நிகழ்வில் ஒரு சமூக ரீதியான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நம்பினார். அதனால் அதை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.

DID-ன் தனித்துவம் என்ன?

இது தொழில் நோக்கோடு அரம்பிக்கப்பட்டது அல்ல. இவ்வாறு இருட்டில் நமக்கு ஏற்படும் அனுபவம், பார்வை அற்றவர்கள் மீது நமக்கிருக்கும் பார்வையை மாற்றும். மேலும் DID பல பார்வையற்றவர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்துள்ளது.

“இங்கு எங்களுடன் உள்ள பார்வையற்ற வழிகாட்டி பார்வையாளர்களை வழி நடத்திச் செல்வர். அனுபவத்தின் முடிவில், பார்வையாளர்கள் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து செல்லப்படுவர். ஒரு பார்வையற்றவர் இதை செய்யும்போது பார்வையாளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது, இதன் மூலம் அவர்கள் ஊனமுற்றோருக்கு வாய்ப்புகளை மேம்படுத்துவது, அனுதாபமல்ல என்பதை புரிந்துகொள்வார்கள்," என்கிறார் எஸ்.வி.கிருஷ்ணன்.
DID - சென்னை கிளை (எக்ஸ்பிரஸ் அவென்யூ)<br>

DID - சென்னை கிளை (எக்ஸ்பிரஸ் அவென்யூ)


சென்னையில் டயலாக் இன் தி டார்க்

முதலில் ஹைதிராபாத்தில் ஆரம்பிக்கப்பட்ட DID 2015 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்ப்ரெஸ் அவென்யூவில் நிறுவப்பட்டது. முதலில் இருட்டில் தினசரி செயலின் அனுபவத்தை அளிக்கக் கூடிய ஒரு கிளையாகவே தொடங்கப்பட்டது.

“நாம் செய்யும் வேலைகளை, அதாவது இருட்டில் கிரிக்கெட் விளையாடுவது, தேநீர் அறிந்துவிட்டு பணம் கொடுப்பது, மீதி சில்லறையை வாங்குதல் போன்ற செயல்களை நாம் செய்யும் பொது பார்வை இல்லாமை என்பது திறனற்றது என்பது அல்ல என்றும் பல திறன் கொண்டது என்பதை நம்மால் அறிய முடியும்,”

என்கிறார் சென்னை DID ஒருங்கிணைப்பாளர் அனந்த் நாராயணன். அவர்களது இந்த பயணம் 45 நிமிடம் தொடரும், இந்த பயணத்தில் உங்களை வழிநடத்தி சென்றது பார்வையற்றவர் என்று கடைசியில் தெரிந்த பின் வாடிக்கையாளர்களின் மனநிலை மாறுகிறது. இங்கு பார்வையற்றவர்களுக்கு தேவைப்படுவது அனுதாபங்கள் அல்ல என நம்மால் உணர முடியும் என்றார். 

image


பின்னர் அனுபவத்தை தாண்டி புதிய முயற்சியாக கடந்த மார்ச் மாதம், ’Taste of Darkness’ என்ற உணவகம் இத்துடன் இணைக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் இருட்டில் உணவை உண்பார்கள். கேட்கும் திறன், நுகர்வு மற்றும் உணர்வுத் திறனை மட்டுமே பயன் படுத்தி அவர்கள் உணவு உண்ண வேண்டும். இல்லை! உங்களால் உங்கள் கைபேசி வெளிச்சத்தை எல்லாம் பயன்படுத்த முடியாது, என்கிறார் அனந்த்.

“உணவகத்திலும் பார்வையற்றவர்களே வாடிகையாளர்களுடன் இருப்பார்கள். மற்ற உணவகம் போல சப்பாட்டு மெனுவை நாங்கள் கொடுப்பதில்லை. மற்ற உணவகத்திற்கு செல்லும் அனைவரும் தங்கள் ஸ்மார்ட்போனில் மூழ்கி எதிர் உள்ளவரோடு பேசுவதில்லை. ஆனால் இங்கே ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி உணவு உண்பது எவ்வளவு முக்கியம் என்பதை புரியவைக்கிறோம்.” என்கிறார் அனந்த்.

சென்னை மக்கள் இதற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளதாகவும் மேலும் இதை ஏற்றுக்கொண்டு நல்ல பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

image


’Dialogue in the dark’ வெற்றியை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்குவதற்காகவும் இந்தியாவின் பெருநிறுவனங்களின் மனப்போக்கை மாற்றும் ஒரு நோக்கத்துடன் ‘Dialogue in the Dark – ACE Take 1’ என அமைப்பு ஒன்றையும் தொடங்கியுள்ளனர். ‘அனுபவங்களும் சந்திப்புகளும் சக்திவாய்ந்த திறனாய்வு கருவிகள்' என்ற நம்பிக்கையுடனே இதை ஆரம்பித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும், அவர்களது திறமையை வளர்க்கவே இது கொண்டுவரப்பட்டது.

இதில் அளிக்கப்ப்டும் பயிற்சி மூலம் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது மேலும் 4100 மாற்றுதிறனாளிகுக்கு இதன் வழி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

"பெரும்பாலான மக்கள் எங்களை சந்திக்கும் போது அனுதாப உணர்வைக் கொண்டு வருகிறார்கள். ஆனால் எனக்கு / என்னை போன்றவர்களுக்கு அனுதாபம் தேவையில்லை. எல்லோரையும் போல, எல்லாவற்றையும் போலவே என்னால் அனைத்தையும் செய்ய முடியும். இருளில் வேலை செய்ய நான் பழகிக்கொண்டேன்,”

என DID-யில் பணிபுரியும் 25 வயது ஃபைசல் கூறுகிறார். இதற்கிடையில் டயலாக் இன் தி டார்க் 2018-ல் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற மற்ற இந்திய நகரங்களுக்கும் விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2020 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 5,000 மாற்றுதிறனாளிகளுக்கு தொழில் திறன் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக