பதிப்புகளில்

பெங்களூருவில் நீர் சுகாதார மையங்கள் அமைப்பு- 20 லிட்டர் குடிநீரின் விலை 5 ரூபாய் மட்டுமே

30th Mar 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

இந்தியா போன்ற ஒரு நாட்டில், நல்ல குடிநீரைவிட தொலைக்காட்சிப் பெட்டி கிடைப்பது சுலபம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் தண்ணீர் என்பது பொதுவான பிரச்சினை. பஞ்சாயத்து குடிநீர் கிடைப்பதற்கும் அதன் தரத்திற்குமான மாற்றங்களை நிறைய செய்துள்ளபோதும், பல கிராமப்புறங்கள் விடுபட்டு போய்விட்டன. 

குடிநீர்த் திட்டத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் 21 சதவீத நோய்கள் குடிநீர் தொடர்புடையவை. மேலும், நாட்டில் 33 சதவீதம் பாரம்பரிய முறையில் துப்புரவுப் பணிகள் நடைபெறுகின்றன. 100 மில்லியன் குடும்பங்களில் வாழ்கிற குழந்தைகள் நீரில்லாமல் இருக்கிறார்கள். ஒவ்வொரு இரு குழந்தைகளில் ஒரு குழந்தை தகுந்த ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறது.

இன்னும் நாட்டின் மிகப்பெரிய அக்கறையாக குடிநீர் இருந்துகொண்டிருக்கிறது. தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களால் வேதியியல், எலெக்ட்ரானிக் மற்றும் உயிரியல் குப்பைகளால் குடிநீரின் தரம் எதிர்பாராத அளவுக்கு கெட்டுக்கொண்டிருக்கிறது. நாம் உலக தண்ணீர் தினத்தை கொண்டாடினோம். நம் மக்களுக்கு சுற்றுச்சூழல் நீதியை தருவதில் மேலும் ஓராண்டுக்கான தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளோம்.

image


அரசின் நோக்கம் தண்ணீர் மற்றும் துப்புரவை நோக்கி இருந்தாலும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் பணி செய்துகொண்டிக்கும்போதிலும், இன்னும் நம்பிக்கை வரவில்லை. நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பங்குதாரர்கள், சிறிய அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்தியாவின் குடிநீர் பிரச்சினையத் தீர்க்க அர்ப்பணிப்புள்ள மக்கள் பணியாற்றுகிறார்கள்.

பெங்களூருவில், டாடா அறக்கட்டளை (இந்தியாவின் மிகப் பழமையான மிகப்பெரிய அறப்பணி நிறுவனம்), 'ஜால்தாரா அறக்கட்டளை' மற்றும் 'வாட்டர் ஹெல்த் இன்டர்நேஷனல்' அமைப்புகளும் சேர்ந்து தண்ணீர் தொடர்பாக வளர்ந்துவரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

இந்த கூட்டு முயற்சியால் 15 நீர் சுகாதார மையங்களை பெங்களுருவில் தொடங்கினார்கள். அடுத்து 50 நீர் சுகாதார மையங்களை வடக்கு கர்நாடகாவில் ஆரம்பித்தார்கள். தரம் குறைந்த பகுதியில் பாதுகாப்பான தரமான குடிநீர் கிடைப்பதற்கான வசதியை ஏற்படுத்தின. வெறும் 5 ரூபாய்க்கு நீர் சுகாதார மையங்கள் 20 லிட்டர் குடிநீரை வழங்கின. இந்த விலையால் அந்த மையங்கள் சுயசார்பை அடைந்தன. 2018 ஆம் ஆண்டில் இம்மையங்கள் மூலம் 96.5 கோடி லிட்டர் பாதுகாப்பான நீர் வழங்கப்படும். 2033 ஆம் ஆண்டில் வழங்கப்படும் குடிநீரின் அளவு 698 கோடி லிட்டராக இருக்கும்.

வடக்கு கர்நாடகாவில் நீர் சுகாதார மையங்கள் தொடங்கப்படும். கிராமப்புற வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் கூற்றுப்படி, வடக்கு கர்நாடகாவின் 400 கிராமங்கள் மற்றும் 38 நகரங்களில் குடிநீரில் நைட்ரேட் மற்றும் ப்ளோரைடு கலந்துள்ளது. இந்த வட்டாரத்தில் உள்ள சில கிராமங்களில் குடிநீர் விநியோகம் சரியாக நடந்தாலும்கூட, அதன் தரத்தைப் பற்றி எதுவும் கூறமுடியவில்லை. நல்ல தண்ணீருக்காக பெண்களும் குழந்தைகளும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.

இதேபோல, பெங்களூரு நகரத்தில் அதிக அளவிலான ப்ளோரைடு மாசு மற்றும் டிடிஎஸ் எனப்படும் மொத்த கலைக்கப்பட்ட திடப்பொருள்கள் நிலத்தடி நீரில் இருக்கின்றன. நகர்ப்புற சேரிகளில் நல்ல குடிநீர்த் திட்டங்களுக்கான சாத்தியமே இல்லை. பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீருக்கான தேவை என்பது கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் அதிகம் இருக்கிறது. இந்த வட்டாரத்தில் நீர் தொடர்பான நோய்களைத் தடுப்பதற்கு நல்ல குடிநீர் தேவை என டாடா அறக்கட்டளையும் ஜல்தாரா அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் சுகாதார மையங்களை வடிவமைத்து மேலாண்மை செய்பவர்கள் கலிபோர்னியாவின் இர்வின் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டபிள்யூஎச்ஐ எனப்படும் வாட்டர் ஹெல்த் இன்டர்நேஷனல். டபிள்யூஎச்ஐ, பரவலாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பில் புகழ்பெற்ற நிறுவனம். இது டாடா நீர் மையத்தின் முக்கியமான முயற்சி. அறக்கட்டளையின் இந்த தலைமைத் திட்டம் புதிய தொழில்நுட்பத்தின் வழியாக நல்ல தரமான குடிநீரை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. விளிம்பு நிலை மக்களுக்கான பாதுகாப்பான, தரமான குடிநீரை வழங்குவதும், துப்புரவு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதும் அதன் நோக்கங்கள். ஜல்தாரா அறக்கட்டளை லாப நோக்கம் இல்லாமல் செயல்படும் அமைப்பு. உலகம் முழுவதும் முகவரியற்று, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீருக்கான தீர்வுகளை (வாஷ்) ஜல்தாரா வழங்குகிறது.

டாடா அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் அருண் பந்தி, 

“நல்ல குடிநீர் கிடைப்பதற்கான வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் துப்புரவு இவையே பல ஆண்டுகளாக டாடா அறக்கட்டளையின் முக்கிய பணியாக இருக்கிறது. டாடா வாட்டர் மிஷன், ஒரு முக்கியத்துவமிக்க மாற்றத்தை உருவாக்க, மிகத் தீவிரமாக பங்காற்றுகிறது.

இதுவரையில் எங்களுடைய முயற்சி குஜராத், உத்தர்காண்ட், நாகலாந்து, ஆந்திரா, தெலங்கானா, ஜார்க்கண்ட், ஒடிஸா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் 1.5 மில்லியன் மக்களை சென்றடைந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். எங்களுடைய தலையீடுகளின் முடிவுகள் கணிசமான முன்னேற்றத்தை சமூகத்தில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் ஏற்படுத்தியிருக்கின்றன.

image


ஜல்தாரா அறக்கட்டளையுடன் இணைந்த எங்களுடைய கூட்டு முயற்சியின் நோக்கம், மக்களை மையப்படுத்திய அணுகுமுறை. புதுமையான தொழில்நுட்பத்தின் வழியாக பொருளாதாரரீதியான நிலையான தீர்வுகளைக் காண்பது” என்கிறார்.

வாட்டர் ஹெல்த் இன்டர்நேஷனல் நிறுவன சிஇஓவான விகாஸ் ஷா, 

“சர்வதேச அளவில் வரும் 2020ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்குவதை வாட்டர் ஹெல்த் இன்டர்நேஷனல் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. நீர் சுகாதாரத்தை நோக்கமாகக் கொண்ட டாடா அறக்கட்டளை மற்றும் ஜல்தாரா அறக்கட்டளையுடன் இணைந்து உயர்ந்த லட்சியத்தை அடைவதில் முனைப்பாக இருக்கிறோம். இந்த பங்குதாரர்களுடனான நட்பை வலுப்படுத்தி, இந்தியா முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்கும் உயர்ந்த லட்சியங்களை அடைவோம்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.

ஜல்தாரா அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் ஜாக்குலின் லண்ட்குவிஸ்ட், “வாட்டர் ஹெல்த் இன்டர்நேஷனல் அமைப்புடன் இணைந்து அர்த்தமுள்ள பணியை, அதாவது தொலைநோக்குப் பார்வை மற்றும் பெருதன்மைமிக்க டாடா அறக்கட்டளையுடன் சேர்ந்து செய்திருக்கிறோம். பாரம்பரியமாக, பெரும்பாலான சமூக நீர்த் திட்டங்களும் முயற்சிகளும் இந்தியாவின் கிராமப்புறங்களை நோக்கியே இருக்கின்றன. எனினும், நகர்ப்புற வசதியுள்ள பகுதிகளில் பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் தேவையாக இருக்கிறது. நகர்ப்புறத்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில், ஒரே எண்ணமுள்ள அமைப்புகள் இணைந்து தண்ணீர்ப்பிரச்சினையைத் தீர்க்கப் பாடுபடுகின்றன. இதுபோன்ற பங்குதாரர்களால் மட்டுமே நாங்கள் உலகின் மிகவும் சிக்கலான பிரச்சினைக்கு உறுதியான தீர்வைத் தருகிறோம்” என்று விரிவாக எடுத்துக்கூறுகிறார்.

இந்த முயற்சிகள், பங்குதாரர்கள் ஏற்கெனவே இருந்துகொண்டிருக்கிற நீர் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும் பிரச்சினைக்கு ஒரு மாற்றத்தைத் தருகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த சுற்றுச்சூழல் நீதியை வழங்குகிறார்கள்.

ஆக்கம்: SOURAV ROY | தமிழில்: தருண் கார்த்தி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

குடிநீர் மற்றும் கழிவறை வசதிக்கு நுண்கடன் வழங்கும் நிறுவனம் தொடங்கிய தமிழர்!

காசை போட்டால் குடிநீர் வழங்கும் இயந்திரம்: 'அம்ருத்தாரா' திட்டம்

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags