பதிப்புகளில்

தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்-அப்’களுக்கு இலவச பிசினஸ் கார்ட் சேவை அளிக்கும் ’Printo’

Induja Raghunathan
28th Aug 2017
Add to
Shares
27
Comments
Share This
Add to
Shares
27
Comments
Share

’ப்ரிண்டோ’ Printo இந்தியாவின் மிகப்பெரிய ப்ரிண்டிங் நிறுவனம், தற்போது சென்னையில் தங்களிடம் அச்சிடும் விசிட்டிங் கார்ட் அதாவது பிசினஸ் கார்டுகளை தொழில்முனைவர்களுக்கு இலவசமாக அளிக்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

“ப்ரிண்டோ ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு இலவசமாக பிசினஸ் கார்டுகளை அச்சிட்டு தர முடிவெடுத்துள்ளது. விசிட்டிங் கார்ட் என்பது ஒரு தொழிலில் முக்கிய ஆரம்பம் ஆகும். தொடக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க எங்கள் வழியில் கொண்டாட நினைத்து இந்த இலவச பிசினஸ் கார்ட் சேவையை சென்னையில் அறிமுகப்படுத்துகிறோம்,” என்றார் ப்ரிண்டோ சிஇஒ பாலு ஐயர். 
image


ப்ரிண்டோ நிறுவனம் கடந்த ஆண்டு சென்னையில் விரிவாக்கம் செய்து தனது கிளையை நுங்கம்பாக்கத்தில் திறந்தது. அதனையடுத்து வேகமாக வளர்ச்சி கண்டு தற்போது 6 கிளைகளோடு சென்னையில் இயங்குகிறது. சென்னையில் தங்களின் சேவை பற்றி விளக்கிய பாலு,

“சென்னை நிறுவனங்கள் இந்தியாவின் பிசினஸ் வளர்ச்சியின் முக்கிய வழிகாட்டியாக உள்ளது. இங்கு அற்புதமான சர்வதேச மற்றும் இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை லாபத்துடனும், நிலைத்தன்மையுடனும் நிலைநாட்டியுள்ளது. இத்தகைய தொழில் ஆர்வமுள்ள நகரமாக இருக்கும் சென்னை எங்கள் சேவைகளுக்கு உகந்த சந்தையாக உள்ளது,” என்றார். 

தென்னிந்தியாவை பொறுத்தவரையில் ப்ரிண்டிங் சந்தையில் சென்னை முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் மூன்றாவது சந்தையாகவும் உள்ளது. சுமார் 2400 புதிய நிறுவனங்கள் சென்னையில் ஒவ்வொரு மாதமும் பதிவுச்செய்யப்பட்டு தொடங்கப்படுகிறது. இத்தகைய காரணங்களே ப்ரிண்டோ சென்னையில் முதலீடு செய்து சேவைகளை துவக்க உந்துதலாக இருந்தது என்றார் ப்ரிண்டோ இணை நிறுவனர் மனீஷ் சர்மா. அவர் மேலும் கூறுகையில்,

“ப்ரிண்டோ தனிநபர்கள் வளர உதவிகள் புரியும், பெங்களுரு மற்றும் ஹைதராபாத்தில் வெற்றிகரமாக செயல்படும் எங்கள் நிறுவனம், தற்போது சென்னையில் உள்ளோரும் எங்கள் சேவையை அனுபவிக்க விரும்புகிறோம்,” என்றார்.

இதற்கு முன்பு இந்தியாவில் எங்கும் இலவச பிசினஸ் கார்டு சேவை அளிக்கப்பட்டதில்லை. ப்ரிண்டோ, நீண்டகால உறவை தொழில்முனைவர்கள் மற்றும் சிறு தொழில் புரிவோருடன் ஏற்படுத்தவே இந்த சிறப்புச்சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சென்னையில் தங்கள் சேவையை வளர்க்க விரும்புகின்றனர். 

Printo நிறுவன பின்னணி

2006-ம் ஆண்டு துவங்கப்பட்ட ப்ரிண்டோ 6 நகரங்களில் 30 கடைகளுடன், பெங்களுருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம். இந்நிறுவனம் அச்சிடல் சேவையை தொழில் புரிவோர், தனிநபர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரத்துடன் அளிக்கிறது. புகைப்படம் அச்சிடலுடனும் தயாரிப்புகளை பரிசுப்பொருட்கள் சேவையையும் அளிக்கிறது. ஆன்லைனிலும் சேவையை வழங்கும் இவர்களின் தளம் மூலம் பொருட்களை ப்ரிண்ட் செய்து நேரடியாக வீட்டிற்கும் பெறமுடியும். இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் இவர்களின் ஆன்லைன் சேவை உள்ளது. 

நிறுவனர்கள் லலனா ஜாவேரி மற்றும் மனீஷ் சர்மா ஆகியோரின் சுயமுதலீட்டில் ஸ்டார்ட்-அப் ஆக தொடங்கிய இந்நிறுவனம் வளர்ச்சி கண்டு, முதலீட்டாளர்களிடமிருந்து நிதி பெற்று 5 கடையில் இருந்து 30 கடைகளாக தற்போது உயர்ந்துள்ளது. பல சவால்களையும், நஷ்டங்களையும் இடையில் சந்தித்திருந்தாலும் ப்ரிண்டோ, லாபத்துடனான தொழில் யுக்தியை கற்று 11 ஆண்டுகளில் இந்தியாவில் பிரபல ப்ரிண்டிங் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 

வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இவர்கள் விரைவில் பல நகரங்களுக்கு தங்கள் சேவையை விரிவுப்படுத்தி, டிஜிட்டல் தளங்கள் வாயிலாகவும் தங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை பெருக்க உள்ளனர். 


Add to
Shares
27
Comments
Share This
Add to
Shares
27
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக