பதிப்புகளில்

நீங்கள் வெற்றியடைய உங்களுடன் கட்டாயம் இருக்கவேண்டிய 5 நபர்கள்...

29th Jun 2017
Add to
Shares
1.1k
Comments
Share This
Add to
Shares
1.1k
Comments
Share

ஒரு வணிகத்தை தான் மட்டுமே உயரத்திற்கு எடுத்துச்சென்றதாக வெற்றியடைந்த எந்த ஒரு தொழில்முனைவோரும் பெருமைப்பட மாட்டார்கள். அவர்களது நிறுவனம் விரிவடையும் போது வெற்றிக்கு உதவும் வகையில் பலரை பணியிலமர்த்துவார்கள். பலருடன் ஒருங்கிணைவார்கள். வணிகத்தில் வெற்றிகரமாக செயல்படும் ஒவ்வொருவரும் ஊக்கமளிப்பவர், ஆலோசகர் என அவர்களது இலக்கை அடைய உதவக்கூடிய ஒரு குறிப்பிட்ட வகையான நபரை நம்புவார்கள். 

நீங்கள் வணிகத்தின் நுணுக்கங்களை கற்றுவரும் வளரும் தொழில்முனைவோர் எனில் உங்களது கனவை நனவாக்க உங்களுடன் கட்டாயம் இருக்கவேண்டிய ஐந்து நம்பகமான நபர்களின் பட்டியல் கிழே கொடுத்துள்ளோம்.

image


வழிகாட்டி

உங்களது நோக்கத்தை அடைய வழிகாட்டுவதற்கும் தொழில்முனைவுப் பயணத்திற்கு உந்து சக்தியாகவும் இருக்க ஒரு வழிகாட்டி உங்களுக்கு அவசியம். இவர்கள் ஏற்கெனவே வெற்றியடைந்தவர்களாக இருக்கும் காரணத்தால் அனுபவம் நிறைந்த அவர்களது பார்வையும் கருத்துக்களும் உங்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும். அவர்களுடைய கருத்துக்களும் அதன் தாக்கமும் தொழில் ரீதியாக மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் உதவும். மேலும் உங்களது குறைபாடுகள் மற்றும் வலிமை குறித்தும் ஆராய்ந்து தெளிவுபடுத்துவார்கள். அனுபவம் நிறைந்தவர்களாக இருப்பதால் அவர்களது துறை சார்ந்த நட்பும் அனுபவமும் நீங்கள் தொழில் ரீதியாக ஒன்றிணைவதற்கும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வழிவகுத்து உங்களது வெற்றிக்கு உதவும்.

உந்துதலளிப்பவர்

நீங்கள் சற்று தாழ்வாக உணரும்போது உங்களுக்கு புத்துணர்ச்சியளிக்கும் விதத்தில் உங்களுக்கு உந்துதலளிப்பவர் உங்களுடன் இருக்கவேண்டும். பல்வேறு தருணங்களில், குறிப்பாக உங்களது பயணம் எதிர்பார்க்காத விதத்தில் திசைதிரும்பும்போது ஊக்கமளிக்கும் விதத்திலான வார்த்தைகள் உங்களுக்கு தேவைப்படும். உங்களது தனிப்பட்ட வாழ்வில் உங்களுக்கு நெருக்கமான நபர்கள் யார்வேண்டுமானாலும் உங்களுக்கு உந்துதலளிப்பவராக இருக்கலாம். உங்களது பெற்றோர், கணவன்/மனைவி என தொழிலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அறியாதவராகவும் இருக்கலாம். ஒரு கடினமான சூழல் ஏற்படும்போது உங்களுக்கு ஊக்கமளிக்கும் திறன் கொண்டவராக இவர் இருக்கவேண்டும்.

ஆலோசகர்

நிறுவனத்தின் முக்கிய முடிவுகள் எடுக்க நேரும்போது நீங்கள் அணுகும் நபர்தான் ஆலோசகர். இவர்மேல் உங்களுக்கு கண்மூடித்தனமாக நம்பிக்கை இருக்கும். நீங்கள் தீர்க்கமுடியாத ஒரு சிக்கலில் தவிக்கும்போது இவர் உங்களுக்கு உதவுவார். நீங்கள் தீர்விற்காக அவரை அணுகும்போது சில நேரங்களில் உங்களது மனதிலிருக்கும் தீர்விற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு தீர்வை வழங்குவார். இந்த மாற்று நிலைப்பாடு அந்த சூழலுக்கேற்ற மிகச்சிறந்த தீர்வாக அமையலாம். நீங்கள் கற்பனை செய்துகூட பார்க்காத முற்றிலும் ஒரு புதுமையான கண்ணோட்டத்தை இவர் அளிப்பார்.

பார்ட்னர்

ஒருவரது குணாதிசயத்தில் இருக்கும் குறைகளை மற்றவர் ஈடுகட்டும் விதத்தில் நீங்களும் உங்களது பார்ட்னரும் இருக்கவேண்டும். உங்களது பலவீனத்தை அவர்கள் வலிமை ஈடுகட்டும். அதேபோல அவரது பலவீனத்தை உங்களது வலிமையும் ஈடுகட்டும். உங்களைப் போன்ற அதே ஈடுபாட்டுடன் உங்களையும் உங்களது நிறுவனத்தையும் புரிந்துகொள்பவராக இருந்தால் பார்ட்னர்ஷிப் வெற்றிகரமாக இருக்கும்.

விமர்சகர்

ஆம். உங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளதல்லவா? மேலே குறிப்பிட்ட மற்ற நான்கு பேருக்கும் இணையாக ஒரு விமர்சகரும் உங்களுக்கு உந்துதலளிப்பார். இவர் உங்களது திட்டங்கள் குறித்து தொடர்ந்து கேள்வியெழுப்புவார். திட்டங்கள் முழுமையடைவது குறித்து சந்தேகங்கள் எழுப்புவார். அவர் நினைப்பது தவறு என்று நிரூபிக்க விரும்புவீர்கள். எனவே இவர்கள் உங்களது வளர்ச்சிக்கு உதவுவார்கள்.

நம்பிக்கையான இந்த ஐந்து நபர்களை கண்டறிந்து உங்களருகில் வைத்துக்கொள்ளுங்கள். இவர்களில் யாராவது தற்போது உங்களுடன் இல்லை என்பதை உணர்ந்தீர்களானால் இன்றே அவர்களை கண்டறிந்து உங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள்.

ஆங்கில் கட்டுரையாளர் : முனிரா ரங்வாலா

Add to
Shares
1.1k
Comments
Share This
Add to
Shares
1.1k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக