பதிப்புகளில்

720கிமீ பயணம் செய்து உத்தர்கந்த் கிராமத்தில் படிப்பு சொல்லி கொடுக்கும் குர்கான் பொறியாளர்!

19th Jul 2018
Add to
Shares
118
Comments
Share This
Add to
Shares
118
Comments
Share

இன்று நகரங்கள் நாகரீகத்தில் வளர்ந்து கல்வியில் பல முன்னேற்றங்களை கொண்டு வளர்ந்துள்ளது. ஆனால் இன்றைய 20 ஆம் நூற்றாண்டிலும் பல கிராமங்கள் அடிப்படை கல்வி வசதி கூட இல்லாமல் தவிக்கின்றனர். உதர்கந்தில் வறுமை, சுகாதாரம் அற்ற சூழல், வேலைவாய்ப்பு மற்றும் போதிய கல்வி வசதி இல்லாமல் மக்கள் இடம் பெயர்ந்தனர். அதனால் அல்மோரா மற்றும் பவுரி ஊர்களில் மட்டும் 748 பள்ளிகள் மாணவர்கள் இல்லாமல் முடங்கியுள்ளது. மாணவர்கள் குறைந்ததால் எந்தவித அடிப்படை வசதிகளும் இந்த பள்ளிகளில் இல்லை.

ஆஷிஷ் டபரால். பட உதவி: முகநூல் 

ஆஷிஷ் டபரால். பட உதவி: முகநூல் 


இது போன்ற சூழ்நிலை நாம் பிறந்த ஊருக்கு ஏற்பட்டால் நம்மில் பலர் தூரத்தில் இருந்து அனுதாபங்களை தெரிவிப்போமே தவிரே நம்மால் உதவி செய்ய இயலாது. ஆனால் இங்கே குர்கானில் வசிக்கும் 34 வயது தொழில்நுட்பர் ஆஷிஷ் டபரால் வார இறுதியில் 720கிமீ பயணித்து உத்தர்கந்த் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு படிப்பு சொல்லி தருகிறார். கல்வி படிப்பை மட்டும் சொல்லி கொடுக்காமல் திறன்கள், கலை மற்றும் கைவினை, நவீன கருவிகள் போன்று இன்றைய காலத்திற்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தருகிறார்.

ஆஷிஷ் டபரால் பயணம்

உத்தர்கந்த் பவுரி மாவட்டத்தில் உள்ள திமில் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ஆஷிஷ். ஆஷிஷின் தாத்தா உருவாக்கிய பிரிட்டிஷ் அரசால் அங்கரிக்கப்ட்ட ஹிமாலயா சமஸ்கிரத பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து கொண்டிருந்தனர். ஆனால் வாழ்க்கைக்கு தேவையான முறையான வாழ்வாதாரம் இந்த கிராமங்களில் கிடைக்காததால் பலர் இடம்பெயர்ந்தனர். இதனால் 2013ல் வெறும் 3 மாணவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

“போதிய கல்வி, வாழ்வாதாரம் மற்றும் வழிகாட்டுதல் கிடைக்காமல் மக்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறுவது வருத்தம் அளிக்கிறது. இதனால் எஞ்சி இருக்கும் குழந்தைகளுக்கும் தேவையான படிப்பு கிடைப்பதில்லை,” என்கிறார் ஆஷிஷ்

மக்கள் ஊரை விட்டு வெளியேற முக்கியக் காரணம் கல்வி மற்றும் வேலை; இதை புரிந்துக்கொண்ட ஆஷிஷ் தான் பிறந்த ஊர் நலனுக்காக உதவி செய்ய முன் வந்தார். தனக்கு கிடைத்த கல்வியை தாமே தன் ஊரில் உள்ள மாணவர்களுக்கு எடுத்துரைக்க முடிவு செய்தார்

“நான் என் கிராமத்தில் உள்ள எங்கள் பள்ளியில் தான் படித்தேன், அந்த பாரம்பரியத்தை நிலை நாட்ட 2014ல் இன்றய சூழலுக்கு ஏற்றவாறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் திமில் வித்யபீத்தை தொடங்கினேன்,” என்றார்

சிறியதாக இரண்டு அறை மற்றும் 31 மாணவர்கள் கொண்டு அவரது முதல் கல்வி ஆண்டு 2014ல் தொடங்கியது. இன்று 1000க்கும் மேலான குழந்தைகள் இவரது கல்வி திட்டத்தால் பயனடைந்துள்ளனர். 3 ஆசிரியர்கள் கொண்டு இயங்கும் இவரது பள்ளியால் வருடாவருடம் 50 மாணவர்கள் வரை பயனடைகிறார்கள்.

முதன்மை கல்வி மட்டுமல்லாமல் 70 மாணவர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சியை 12 மாதம் வழங்கி உதவியுள்ளார்கள். இதனால் மாணவர்கள் பாண் கார்ட், பாஸ்போர்ட் அல்லது ஆன்லைன் சேவை பலவற்றை தாங்களே செய்ய தொடங்கியுள்ளர்னர். குர்கான் பிரிட்டிஷ் தொலை தொடர்பில் வேலை புரியும் இவர் வார இறுதியில் தவறாமல் தனது கிராமத்திற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

2015 இவர் பணிபுரியும் பிரிட்டிஷ் தொலை தொடர்பு நிறுவனம் இவரது சேவைக்கு உதவும் நோக்கில் 50,000 பண உதவியும் அளித்துள்ளது. இதை வைத்து டிஜிட்டல் கிளாஸ்ரூம்களை உருவாக்கியுள்ளார் ஆஷிஷ்.

பிரிட்டிஷ் பள்ளிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு வெளிநாட்டு தரத்தில் பள்ளியை நடத்திக்கொண்டு வருகிறார். முதன்மை கல்வி, கணினி மட்டுமின்றி ரோபோடிக்சையும் அவரது பள்ளியில் அறிமுகம் படுத்தியுள்ளார்.

“மக்கள் சுயநலமாக இல்லாமல் சமூக சீரமமைப்பில் பங்கேற்றுக்கொள்ள வேண்டும். நமது அடுத்த தலைமுறைக்கு நல்ல வாழ்க்கை முறையை ஏற்படுத்தி தர வேண்டும்,” என்கிறார் சமூக அக்கரையுடன். 

தகவல் உதவி: தி பெட்டர் இந்தியா, தி லாஜிகல் இந்தியன் 

Add to
Shares
118
Comments
Share This
Add to
Shares
118
Comments
Share
Report an issue
Authors

Related Tags