பதிப்புகளில்

பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது 'Tiecon'

தொழில்முனைவர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னையில்  தொடங்கியது...

SANDHYA RAJU
11th Nov 2017
Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share

கனவு காணுங்கள், தைரியமாக முன்னெடுத்து செய்யுங்கள் என்ற கருவோடு இந்த வருட Tiecon டைகான் சென்னையில் தொடங்கியது. பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் டைகான் நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

வரவேற்புரை அளித்த டை சென்னையின் செயல் அதிகாரி அகிலா ராஜேஷ்வர் இந்த வருடத்திற்கான கரு மற்றும் பத்தாவது வருடத்தின் புதிய முயற்சியாக டை சந்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இதனையடுத்து, கருத்தரங்கின் துவக்கமாக வெல்லூரி டெக்னாலஜீயின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் வெல்லூரி ஸ்மார்ட் சிட்டி, நகர்ப்புற மறுசீரமைப்பு பற்றி பகிர்ந்தார்.

”இந்தியா ஒரு கூர்முனையில் உள்ளது. சமூகம் பொறுமையிழந்து வருகிறது. நமக்கிருக்கும் சக்தி மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு சரி செய்யாவிட்டால், மேம்பாட்டு சிக்கல்களை சந்திக்க நேரும்,” 
வெங்கடேஷ் வெல்லூரி மற்றும் அமைச்சர் மாஃபா பண்டியராஜன்

வெங்கடேஷ் வெல்லூரி மற்றும் அமைச்சர் மாஃபா பண்டியராஜன்


என்று தனது உரையை தொடங்கியவர், மாறி வரும் சந்தையின் தேவையறிந்து அதற்கான தீர்வுகளை வடிவமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.  

தற்போதைய சூழலில் சமூகத்தின் தேவையான சுகாதாரம், குடிநீர், நீர் மேளான்மை, மாசு கட்டுபாடு என தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏராளமான புதிய தொழில்முனை நிறுவனங்களுக்கான வாய்ப்பு பற்றியும் எடுத்துரைத்தார். 

நிகழ்சியின் நிறைவாக தமிழ் பண்பாட்டுத் துறை மற்றும் அகழ்வாய்ராய்ச்சி துறை அமைச்சர் மாஃபா பண்டியராஜன், தமிழகத்தின் தொழில்முனைவு பற்றி உரையாற்றினார். 

”ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தொன்மையான தொழில்துறை பாரம்பரியம் கொண்டது நம் தமிழ்நாடு. 58 தொழில்துறை கூட்டாக உடைய நமது மாநிலத்தில் தான் முக்கியமான தொழில்களும் உள்ளன. நமது கலாச்சாரத்தில் ஊரிப்போன உள்ளார்ந்த தொழில்முனைப்பே பல தரப்பட்ட தொழில்கள் நமது மாநிலத்தில் உள்ளாவதற்கான முக்கியக் காரணம்,”

என்று தமிழ்நாட்டின் பல காலங்கிளான தொழில் வளர்சி பற்றி பகிர்ந்தார். இதன் தொடர்சியாக இந்த ஆண்டிற்கான தொழில்முனைவர்கள் விருதுகள் அறிவிக்கப்பட்டன. 

டைகான் விருது பெற்றவர்களுடன் டைகான் நிர்வாகிகள்

டைகான் விருது பெற்றவர்களுடன் டைகான் நிர்வாகிகள்


பாடகர்கள் உன்னிகிருஷ்னன், உத்தரா உன்னிகிருஷ்னன் மற்றும் சைந்தவி ஆகியோரின் இசையுடன் தொடங்கிய விருது விழாவில் உணவு, கல்வி, ஆன்லைன் வர்தகம் மற்றும் ஆடை உற்பத்தி ஆகிய துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

வித்தியாசமாக கல்வியை குழந்தைகளுக்கு அளித்து வரும் ’ஃப்லின்டோபாக்ஸ்’, ஆன்லைன் வர்த்தக துறையில் ’இன்த்ரீ ஆக்ஸஸ்’ நிறுவனம், ஆடை துறையில் ’இந்தியன் டெர்ரைன்’ ஆகிய நிறுவனகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

வாழ்நாள் சாதனை விருது சுகுனா ஃபூட்ஸ் நிறுவனத்தின் சுந்தரராஜன் மற்றும் சௌந்தரராஜன் பங்காருசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டன.

Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக