பதிப்புகளில்

HCL நிறுவனர் ஷிவ் நாடாரின் தொழில் பயணமும் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மகள் ரோஷினியின் உத்வேகமும்!

Mahmoodha Nowshin
16th Apr 2018
Add to
Shares
655
Comments
Share This
Add to
Shares
655
Comments
Share

தமிழகத்தின் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஓர் பொறியியல் மாணவன், இன்று ஒரு பெரும் பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர். இன்று தொழிநுட்பம் மற்றும் கணிணி அறிவியல் துறையில் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கும் எச் சி எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடாரின் தொழில் வளர்ச்சியை பற்றி பார்ப்போம்.

1945-ல் திருச்செந்தூரில் பிறந்தவர் இவர், தன் பொறியியல் படிப்பை மதுரை கல்லூரியில் படித்துவிட்டு மற்ற இளைஞர்கள் போலவே ஒரு பொறியாளராய் பூனேவில் உள்ள ஓர் நிறுவனத்தில் 1967 பணிக்குச் சேர்ந்தார். பத்து வருடம் சில நிறுவனங்களில் பணிபுரிந்த ஷிவ் நாடார், சொந்தமாக ஒரு தொழில் துவங்க வேண்டும் என்று தன் அலுவுலக நண்பர்களுடன் முடிவு செய்து துவங்கப்பட்டதே இந்த HCL நிறுவனம்.

பட உதவி: Economic Times

பட உதவி: Economic Times


முதல் தொழில் பயணம்:

1976ல் ஷிவ் நாடார் தன் நண்பர்களான அஜய் சௌத்ரி, அர்ஜூன் மல்ஹோத்ரா, சுபாஷ் அரோரா, யோகேஷ் வைத்தியா மற்றும் டி.எஸ்.பூரி ஆகியோருடன் இணைந்து ’மைக்ரோகாம்ப்’ என்னும் ஓர் நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனத்தில் டெலிவிஸ்ட்டா என்னும் பெயரில் டெலி டிஜிட்டல் கால்க்குலேட்டர்ஸ் தயாரித்து விற்பனை செய்தனர். ஏற்கனவே தொழிநுட்பத்தில் அனுபவம் பெற்றதாலும் சிறந்த துணை நிறுவனர்கள் கிடைத்ததாலும் ஷிவ் நாடார் நினைத்தது போலவே நிறுவனத்தின் வளர்ச்சி நன்றாக அமைந்தது.

மைக்ரோகாம்ப் மூலம் கிடைத்த வருவாயை வைத்து இந்த ஆறு நண்பர்களும் இணைந்து ரூ.1,87,000 முதலீட்டுடன் தன் கனவு நிறுவனமான HCL நிறுவினார் ஷிவ் நாடார். அத்ரிஷ்டவசமாக அப்பொழுது நன்கு வளர்ச்சியில் இருந்த IBM சில காரணங்களால் இந்தியாவில் இருந்து வெளியேறியதால் எச்.சி.எல் நிறுவனம் தங்கள் மைக்ரோ கணினியை இந்திய சந்தையில் பிரபலப்படுத்த ஓர் வாய்ப்பாய் அமைந்தது. எச்சி. எல் தங்கள் மைக்ரோ கணினிகளை உள்நாட்டில் விற்கத் துவங்கியது.

HCL-ன் வளர்ச்சி:

தொழில் துவங்கி மூன்று வருடத்திற்குள் 1979ல் சர்வேதேச அளவில் கால் பத்தித்து விட்டது இந்நிறுவனம். பார் ஈஸ்ட் கணினி என்னும் சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்தது. 

அப்பொழுது மூன்று வயதான எச் சி எல் நிறுவனத்தின் மொத்த மதிப்பு மூன்று கோடியாகும்; முதல் வருடத்திலே பத்து லட்ச மதிப்பு விற்பனையை கண்டது இந்நிறுவனம்.

அதன் பின் 1983க்குள் தரவு அடிப்படையிலான மேலாண்மை அமைப்பு, நெட்வொர்க்கிங் செயல்பாட்டு அமைப்பு மற்றும் கிளைன்ட் சேவையை துவங்கி விட்டது HCL. அதிலிருந்து மற்ற பன்னாட்டு நிறுவனத்துடன் போட்டிபோடும் அளவிற்கு சரி சமமாய் வளர்ந்து பல நாடுகளில் கால் பதித்து.

image


இந்தியாவில் துவங்கி சிங்கப்பூர் வரை நல்ல வளர்ச்சியை கண்டாலும் கல்வித் துறையில் கால்பதிக்க முடிவு செய்தார் ஷிவ் நாடார். எண்பதுகளில் கணினி பயிற்சிக்கு அதிக தேவை இருப்பதை உணர்ந்த ஷிவ் நாடார் 1981ல் NIIT –ஐ நிறுவினார். இந்தியாவில் உயர்தர ஐ.டி கல்வியை வழங்கும் நோக்கில் துவங்கப்பட்டது இந்த நிலையம்.

கால்குலேட்டரில் துவங்கி ஐடி கல்வித் துறை வரை ஐந்து வருடம் வளர்ச்சி மற்றும் நிச்சயமற்ற போக்கு என இரண்டும் கலந்தவாறு அமைந்தது ஷுவ் நாடாரின் தொழில் பயணம்.

1984ல் கணினி துறையை மாற்றி அமைக்கும் சில திட்டங்களை அறிவித்தது இந்திய அரசு. அரசு கணினிக்கென தனி சந்தையை உருவாக்கி, தொழில்நுட்பங்களையும் இறக்குமதி செய்ய அனுமதித்து. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எச் சி எல் சொந்த பர்சனல் கணினியை தயாரித்து வெளியிட்டது.

அப்பொழுது இந்தியாவில் பர்சனல் கணினிக்கான தேவை அதிகரிக்கத் துவங்கியது. பல நாடுகளில் இருந்து கணினிக்கு தேவையானவற்றை படித்து அறிந்து பல ஆய்வுகளுக்கு பிறகு மூன்றே வாரத்திற்குள் தங்கள் முதல் கணினியை அறிமுகம் படுத்தினர். Busybee என்ற பெயரில் தங்கள் கணினியை வெளியிட்டனர்.

அங்கு இருந்து இரண்டே வருடத்தில் எச் சி எல் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக வளர்ந்தது. நிறுவனர்கள் உலகில் பல மூலைகளுக்கு சென்று தங்கள் நிறுவனத்தை துவங்கினர். 1987ல் இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 100 கோடியாக உயர்ந்தது.

உலக அளவில் கால் பத்தித ஷிவ் நாடார், 1989ல் எச் சி எல் நிறுவனத்தை அமெரிக்காவில் நிறுவினார், ஆனால் அது எதிர்ப்பார்த்த அளவு நிலைக்காமல் சற்று சறுக்கியது. தங்கள் முதல் தோல்வியில் துவண்டு போகாமல், அதில் இருந்து படிப்பினையை மட்டும் எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார் ஷிவ் நாடார். 1991ல் எச் பி நிறுவனத்துடன் இணைந்தார், அதில் இருந்து கணினியை தாண்டி மற்ற தொழில்நுட்பங்களுடன் ஈடுபட நோக்கியா மற்றும் எரிக்சன் சிவிட்சஸ் உடனும் கை கோர்த்தது எச் சி எல்.

1998, எச் சி எல் ஐந்து தனி நிறுவனமாக பிரிந்தது; HCL டெக்னாலஜிஸ், HCL இன்ஃபோசிஸ்டம்ஸ், HCL Comnet, HCL பெரோட் மற்றும் என்ஐஐடி. மேலும் நிறுவனத்தை கட்டமைத்தது பற்றி பேசும் ஷிவ் நாடார்,

”நாங்கள் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் மட்டும் இல்லை சிறந்த திறமைகள் உருவாக்கும் தொழிலிலும் ஈடுபட்டு இருக்கோம். எனவே நெடுங்காலம் தொழில்நுட்பம் எங்களுடன் இணைந்திருக்கும்,” என்பார்.

1996ல் தன் தந்தை பெயரில் SSN கல்லூரியை நிறுவினார் இவர். கல்லூரியை நிறுவியதோடு மட்டுமல்லாமல் அதில் அதிக நேரத்தை ஒதுக்கி பல நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு கல்வியின் வளர்ச்சியை பார்த்துக்கொண்டார். 

image


தற்பொழுது எச் சி எல் 32 நாடுகளில் தங்கள் நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இது விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் செயல்படுகிறது; வாகன; நுகர்வோர் மின்னணு; ஆற்றல் மற்றும் பயன்பாடுகள்; நிதி சேவைகள்; அரசாங்கம்; சுயாதீன மென்பொருள் விற்பனையாளர்கள்; தொழில்துறை உற்பத்தி; சுரங்க மற்றும் இயற்கை வளங்கள்; வாழ்க்கை அறிவியல் மற்றும் சுகாதார; ஊடக மற்றும் பொழுதுபோக்கு; சில்லறை மற்றும் நுகர்வோர்; எண்ணெய் மற்றும் எரிவாயு; தொலை தொடர்பு; பொது சேவைகள் போன்ற பல துறையில் தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறது இந்நிறுவனம். ஷிவ் நாடார் தன் தொழில் பயணம் பற்றி குறிப்பிடுகையில்,

”வயது வெறும் எண்ணிக்கை மட்டுமே. தொழிலை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் ஒவ்வொரு தொழில்முனைவரைப் போலவே, நானும் என் நிறுவனத்திற்கு வருவாய் ஈட்டுவதில் தான் கவனம் செலுத்தினேன். இளமையில் தான் அதீத தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கும். ஓர் இலக்கை முன்னிறுத்தி அதற்கேற்ப செயலில் ஈடுபடமுடியும்,” என்பார்.

கைவிட்டு எண்ண முடியாத அளவு ஓர் சாம்ராஜியத்தை உருவாக்கிய ஷிவ் நாடார் 2009ல் எச் சி எல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை தன் ஒரே மகளான ரோஷனி நாடார் மல்ஹோத்ரா இடம் ஒப்படைத்தார்.

தந்தையின் மரபை பின்பற்றும் மகள்:

ரோஷினி நாடார் வானொலி / தொலைக்காட்சி / திரைப்படம் தொடர்பாடல் பட்டபடிப்பை முடித்துவிட்டு கெல்லாக்ஸ் பல்கலைகழகத்தில் எம் பி எ படிப்பை முடித்துள்ளார். வெளிநாட்டில் தன் படிப்பை முடித்த ரோஷினி, 2008ல் HCL நிறுவனத்தின் குழு உறுப்பினர் ஆனார். உறுப்பினராகச் சேர்ந்து ஒரே ஆண்டில்  எச் சி எல்-ன் ஓர் நிறுவனத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார் இவர்.

"நான் என் பட்டபடிப்பை முடித்தவுடன் என் தந்தை நான் பிசினஸ் ஸ்கூளுக்கு சென்று வணிகத்தை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருந்தார். அப்பொழுது தான் ரூபர்ட் முர்டோக் போல் ஓர் தொழிலதிபர் ஆக முடியும் என்று கூறினார்,"

என்கிறார் ரோஷினி இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில்.

எச் சி எல் நிறுவனத்தில் தான் பொறுப்பை ஏற்கும் முன் ஷிவ் நாடார் அறக்கட்டளையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முழுமையாக பார்த்துக்கொண்டார். அங்கு கற்ற படிப்பினையே மொத்த நிர்வாகத்தை நிர்வகிக்க உதவுகிறது என்கிறார். 2013 ஷிவ் நாடார் மொத்த HCL கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியாக தனது மகளை நியமித்தார். 

தற்பொழுது ரோஷினி HCL டெக்னாலஜியில் 50% மற்றும் HCL தகவல் அமைப்புகளில் 44.4% ஷேர்களை வகிக்கிறார்.

ரோஷினி

ரோஷினி


ரோஷினி பொறுப்பேற்ற பின் தன் தந்தையை போலவே நிறுவனத்தை சிறப்பாக நிர்வாகம் செய்தார். 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் எச் சி எல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வருவாய் மட்டும் 6.4 டாலர் பில்லியனாக உயர்ந்துள்ளது. 

எச் சி எல்-ஐ விரிவாக்கும் நோக்கில் 2014 ஆம் ஆண்டு சுகாதார துறை வணிகத்தை எச் சி எல் உடன் இணைத்தார். அதில் இருந்து ஓர் ஆண்டில், 2015ல் எச் சி எல் டேலன்ட் கேர் திறன் பயிற்சி நிறுவனத்தையும் துவங்கினார்.

"நிறுவனத்தை விரிவாக்க வேண்டும், பணத்தை வங்கியில் வைத்து வட்டி பெறலாம் அல்லது புது துறையில் முதலீடு செய்து தொழில் செய்யலாம். என் வயதிற்கு எனக்கும் என் கணவருக்கும் வணிகம் செய்ய நிறைய நேரம் இருக்கிறது,"

என தங்கள் நிறுவனத்தை மேலும் பல துறையில் விரிவாக்கும் காரணத்தை விளக்குகிறார் ரோஷினி. அவரது கணவர் எச் சி எல் ஹெல்த்கேரின் துணை தலைவர். 

எடுத்தவுடன் வெற்றியை நோக்கி பயணிக்கவில்லை ரோஷினி. ஆரம்பத்தில் நிறுவனத்தின் போக்கை புரிந்துக்கொள்ள சற்று சிரமப்பட்டாலும் தன் தந்தையின் வழிகாட்டுதலில் ஓர் தொழில்முனைவராய் மேருகேறியே பின்னரே தன் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல் பட்டு வருகிறார். 

சி இ ஓ ஆக மட்டும் அல்லாமல் ஷிவ் நாடார் அறக்கட்டளையின் ட்ரஸ்டி ஆகவும் செயல்பட்டு வருகிறார். தொழில்முனைவர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ரோஷினி நாடார் ஓர் சான்று. தொழிலதிபர் மகளாக நிர்வாக பதவியை ஏற்காமல் படிப்படியாக முன்னேறி இந்த இடத்தை அடைந்துள்ளார் ரோஷினி. 

ஷிவ் நாடருக்கு தன் வேலையில் ஏற்பட்ட அதிருப்தியே இந்நிறுவனம் தொடங்கக் காரணம். அதன் பின் ஒவ்வொரு வெற்றியை அடைந்த பிறகும் மேலும் மேலும் சாதிக்க முயன்றதே தற்பொழுது இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்க ஓர் முக்கியக் காரணம்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, 22 வயது வரை ஆங்கிலம் கூட பேச முடியாமல் இருந்த ஓர் மாணவனின் இந்த வளர்ச்சி, முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் அனைவருக்கும் ஓர் உதாரணம்.

Add to
Shares
655
Comments
Share This
Add to
Shares
655
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக