பதிப்புகளில்

இஸ்ரேலின் 'Start TLV' போட்டிக்கு பெண் தொழில்முனைவோர் விண்ணப்பிக்க வேண்டிய 10 காரணங்கள்!

21st Jun 2017
Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share

ஸ்டார்ட் அப் உலகிற்கே அடையாளமாக விளங்கும் இஸ்ரேல் நாட்டிற்கு புதுமை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டும்தான் முக்கிய உந்துசக்தியாகும். மற்ற ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அதிகளவிலான ஸ்டார்ட் அப்களை உருவாக்கிய நாடு இஸ்ரேல். இந்த விஷயத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியான நிலையிலுள்ளது. இப்படிப்பட்ட ஒரு நாட்டில் எவ்வாறு தொழில் புரியப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு தற்போது இந்திய தொழில்முனைவோருக்கு கிடைத்துள்ளது.

image


உலகெங்கிலுமுள்ள இளம் தொழில்முனைவோரிடம் இருக்கும் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் Tel Aviv நகராட்சி வருடம்தோறும் ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வுதான் ’தி ஸ்டார்ட் டெல் Aviv’ (Start TLV). 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கலாம். ஒவ்வொரு நாட்டில் வெற்றி பெற்றவர்கள், பூஸ்ட் கேம்பில் பங்கேற்கவும், DLD திருவிழாவில் பங்கேற்கவும், Tel Aviv-க்கு ஐந்து நாட்கள் பயணம் மேற்கொள்வதற்கான அத்தனை செலவுகளும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.

’உலகை சிறந்த இடமாக மாற்றுதல்’ என்பதுதான் இந்த வருட போட்டிக்கான மையக்கருத்தாகும். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் புதுமையான தொழில்நுட்பத்துடன் பெண்கள் தலைமையேற்று நடத்தும் ஸ்டார்ட் அப்கள் இதில் பங்கேற்கலாம்.

இந்த அருமையான வாய்ப்பை நீங்கள் ஏன் தவறவிடக்கூடாது என்று பார்ப்போம்.

புதுமையின் மையம் : இஸ்ரேல் சிறிய நாடு. இருப்பினும் புதுமையை நோக்கி செல்லும் பயணத்திற்கு இது ஒரு தடையாக இருந்ததில்லை. கல்விக்கும் அறிவிற்கும் இங்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆகவே முன்னணியிலிருக்கும் புதுமையின் மையமாக உலகளவில் இஸ்ரேல் அங்கீகரிக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை. ‘ஸ்டார்ட் அப் நாடு’ என்று குறிப்பிட்டவுடன் இஸ்ரேல் என்று அனைவரும் அறிந்துகொள்ளும் அளவிற்கு பிரபலமாகி உள்ளது இஸ்ரேல்.

Tel Aviv – பரபரப்பான ஸ்டார்ட் அப் பகுதி : திறமையான நபர்களைக் கொண்ட தொழில்நுட்ப மையமான Tel Aviv உலகளவிலான முன்னணி ஸ்டார்ட் அப் இகோசிஸ்ட பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் ஐரோப்பாவின் முன்னனி தொழில்நுட்ப மையமாக Tel Aviv குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் முதல் மூன்று தொழில்நுட்ப நகரங்களில் சான் ஃப்ரான்சிஸ்கோ மற்றும் ஆஸ்டின் நகரத்திற்கு பிறகு மூன்றாவது நகரமாக Tel Aviv நகரம் Savills-ஆல் பட்டியலிடப்பட்டது.

DLD கருத்தரங்கம் : DLD Tel Aviv டிஜிட்டல் கருத்தரங்கம் இஸ்ரேலின் மிகப்பெரிய சர்வதேச தொழில்நுட்ப கூட்டமாகும். இதில் நூற்றுக்கணக்கான செல்வாக்குடையவர்கள், நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ஸ்டார்ட் அப்கள், முதலீட்டாளர்கள், மிகப்பெரிய நிறுவனங்கள் பங்கேற்பார்கள். துறையில் மிகச்சிறப்பாக செயல்படும் பலருடன் அறிமுகமாகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

பெண் தொழில்முனைவோரை இஸ்ரேல் ஊக்குவிக்கிறது : இஸ்ரேலின் ஸ்டார்ட் அப் இகோசிஸ்டமானது பாலின நடுநிலையுடன் செயல்படும் இடமாகும். அமெரிக்காவைத் தாண்டி பெண்களின் முன்னணி மையமாக பட்டியலிடப்படுகிறது. காம்பஸ் அறிக்கையின்படி பெண் நிறுவனர்கள் ஐரோப்பாவில் சராசரியாக 17 சதவீதமாக இருக்கையில் Tel Aviv 20 சதவீத பெண் நிறுவனர்களைக் கொண்டுள்ளது..

உலகெங்கிலுமுள்ள ஒத்த சிந்தனையைக் கொண்டவர்களுடன் ஒருங்கிணையலாம் 23 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் போட்டியிடுவார்கள். இதனால் உங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்றவாறான பிற தொழில்முனைவோரை சந்திக்க ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். உங்களுடைய முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவக்கூடிய நிலையான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள உதவும்.

வழிகாட்டிகள் : ’இன்குபேட்டர்ஸ்’ மற்றும் ’ஆக்சிலரேட்டர்ஸ் மூலமாக அரசாங்கம் ஆதரவளிக்கிறது. இத்துடன் தொழில்முனைவோர் வெளிப்படையாகவும் இணைந்தும் செயல்படும் கலாச்சாரம் இஸ்ரேலில் உள்ளது. இந்த கலாச்சாரம் வளர்ந்துவரும் தொழில்முனைவோரின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது. மேலும் பல்வேறு R&D மையங்கள், இன்குபேஷன் செண்டர்கள், VC, ஆக்சிலரேட்டர்ஸ், இன்குபேட்டர்ஸ், துறை ப்ரோக்ராம்கள் போன்றவை வலுவான இகோசிஸ்டத்தை உருவாக்குவதில் பங்களிக்கிறது.

அதிகப்படியான தனி நபர் வென்சர் கேப்பிடல் : இஸ்ரேலின் தனி நபர் முதலீடு அமெரிக்காவை விட இருமடங்காகவும் ஐரோப்பிய யூனியனின் மொத்த உறுப்பினர்களைக் காட்டிலும் 30 மடங்காகவும் உள்ளது. இஸ்ரேல் 14 சர்வதேச நிதி உட்பட கிட்டத்தட்ட 70 ஆக்டிவ் நிதிகளுடன் அந்நாட்டைச் சாராத 200 சர்வதேச நிதியின் பங்களிப்பையும் கொண்டுள்ளது. 

உலகளாவிய அனுபவம் : உள்ளூர் சந்தை சிறியதாக இருப்பதால் இஸ்ரேலிலுள்ள பெரும்பாலான ஸ்டார்ட் அப்கள் உலகளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கின்றனர். இதனால் பெரியளவிலான வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு அவர்களுக்கேற்றவாறு எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை கற்றறியலாம்.

உங்களது தீர்வுகளை மெருகேற்ற உதவும் வொர்க்ஷாப்கள் : ஒவ்வொரு நாட்டின் வெற்றியாளர்களும் பூஸ்ட்கேம்பில் பங்கேற்பார்கள். அவர்களது ப்ராடக்டை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துசெல்ல உதவும் விதத்தில் வொர்க்ஷாப்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

உலகை சிறப்பாக மாற்றவேண்டும் என்கிற உங்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான துவக்கம் : உலகை மாற்றவேண்டும் என்பது உங்களது கனவாக இருக்குமேயானால் அது நிறைவேற இந்த நிகழ்வு உங்களுக்கு நிச்சயம் உதவும்.

image


கடந்த வருட வெற்றியாளரான இந்தியாவின் Advenio நிறுவனத்தைச் சேர்ந்த மௌசுமி ஆச்சார்யா இந்த ப்ரோக்ராம் குறித்து கூறுகையில்,

“ஸ்டார்ட் Tel Aviv 2016-ல் பங்கேற்றது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. உலகெங்கிலுமுள்ள மிகச்சிறந்த தொழில்முனைவோரை சந்தித்ததும் அவர்களது ஸ்டார்ட் அப் குறித்து அறிந்துகொண்டதும் சிறப்பான கற்றல் அனுபவத்தை வழங்கியது. இஸ்ரேலைச் சேர்ந்த பல்வேறு வெற்றிகரமான தொழில்முனைவோரை சந்தித்து அவர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது. இஸ்ரேல் நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பும் சில முக்கிய முதலீட்டாளர்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒருங்கிணையும் வாய்ப்புகளை அளிப்பதால் நிச்சயம் பங்கேற்கவேண்டிய ஒரு நிகழ்வாகும்.”

யார் விண்ணப்பிக்கலாம்? எவ்வாறு விண்ணப்பிக்கவேண்டும்?

இந்தியாவின் தரப்பிலிருந்து கீழ்காணும் அடிப்படை தகுதிகளை பூர்த்திசெய்யும் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப்கள் விண்ணப்பிக்கலாம் :

• சிஇஓ/நிறுவனர்/இணை நிறுவனர் 37 வயதுக்குட்பட்ட பெண்ணாக இருக்கவேண்டும்

• ஸ்டார்ட் அப் தனியார் நிறுவனமாக இருக்கவேண்டும்

• ப்ரோட்டோடைப் ப்ராடக்ட் அல்லது தீர்வுடன் ஆரம்பகட்ட சீட் நிதியுடன் செயல்படும் ஸ்டார்ட் அப்பாக இருக்கவேண்டும்

• சமூக தொழில்முனைவு பிரிவு மற்றும்/அல்லது நகர்புற புதுமை பிரிவில் செயல்படும் ஸ்டார்ட் அப்பாக இருக்கவேண்டும்

• உலக சந்தையை இலக்காகக் கொண்டுள்ள ஐசிடி ப்ராடக்டுகளுடன் தொடர்புடைய ஸ்டார்ட் அப்பாக இருக்கவேண்டும்

மேலும் உங்களது புதுமையான சிந்தனை எவ்வாறு உலகை சிறப்பாக மாற்றும் என்பது குறித்த தகவலை 300 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி சிறு வீடியோவுடன் இமெயில் அனுப்பவேண்டும். விண்ணப்பிக்கவேண்டிய கடைசி நாள் ஜூலை 1, 2017.

Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக