விளையாட்டு ரசிகர்களை வாடிக்கையாளர்கள் ஆக்க உதவும் சென்னை 'ஃபான்டெயின்'

  22nd May 2016
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  விளையாட்டு என்றாலே அதன் வளர்ச்சிக்கு உறுதுணை அந்த விளையாட்டின் ரசிகர்கள் தான். அது எந்தவித விளையாட்டாக இருந்தாலும் சரி. குறிப்பாக நம் நாட்டில் கிரிக்கெட் இத்தனை பிரபலமாக இன்றும் வரவேற்புடன் இருப்பதற்கு முக்கியக் காரணம் அதற்கு இருக்கும் ரசிகர் படையே. அப்படி முக்கிய பங்கு வகிக்கும் ரசிகர்களைப்பற்றி அக்கறையோடு சிந்தித்து அவர்களை ஒரு வாடிக்கையாளர் போல நடத்த முடிவெடுத்து துவக்கப்பட்ட நிறுவனமே "ஃபான்டெயின்" (Fantain).

  விளையாட்டு நிறுவனங்கள் ரசிகர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், ரசிகர்களை வாடிக்கையாளர்களாக மாற்றி, அந்த விளையாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிலை பெறுக்கவும், வருமானத்தை ஈட்டவும் உதவுகிறது 'ஃபான்டெயின்' நிறுவனம். 

  image


  ஃபான்டெயின் தொடக்கம்

  ஃபான்டெயின் பெயர்க்காரணம்; ரசிகர் (Fan) + தலைவர் (Captain) ரசிகர்களே தலைவர்கள் என்ற எண்ணத்துடன், விளையாட்டுத்துறையை முதன்மையாகக் கொண்டு இந்நிறுவனம் 2013-ல் தொடங்கப்பட்டது. 15 வருடத்திற்கும் மேல் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த நிர்வாக அனுபவமுள்ள ஆனந்த் ராமச்சந்திரன், விவேக் வேனுகோபாலன் மற்றும் அரவிந்த் ராமச்சந்திரன் ஆகிய மூவரால் சென்னையில் தொடக்கப்பட்டது ஃபான்டெயின். இம்மூவரும் விளையாட்டு பிரியர்கள் என்பதாலேயே இத்துறையில் நுழைந்துள்ளனர். பேபால் நிறுவனம் சிறந்த தொடக்க நிறுவனமாக இவர்களை தேர்வு செய்து 18 மாதம் அடைகாத்து போதிய ஆலோசனை உதவிகளை அளித்தது.

  ஃபான்டெயினின் செயல்கள்

  இவர்களின் புதுமையான செயல்பாடுகளால் ஏராளனமான பிரபல விளையாட்டு நிறுவனங்கள் பயன்பெற்று இருக்கிறார்கள். அப்படி என்ன புதுமையாக செய்தனர் இவர்கள்? இவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை மூன்று பிரிவுகளாக வடிவமைத்திருக்கிறார்கள்.

  * ரசிகர்களைத் தக்க வைப்பதன் முக்கியத்துவம்: இது மிக கடினமான வேலை இருப்பினும் அத்தியாவசியமானது. 

  "பொதுவாக ஒரு விளையாட்டுப் போட்டி நடந்து முடிந்துவிட்டால், ரசிகர்ளோடு அதற்கு பின் நாம் தொடர்பு கொள்வதில்லை. அந்த நேரத்தில் தகுதியான ரசிகர்களைப் பெரிதாக இழக்கிறோம். இந்த இழப்பைத் தடுக்கவே ஃபான்டெயின் முயல்கிறது", என்று கூறினார் ஆனந்த் ராமச்சந்திரன்.

  * ரசிகர்களை தக்கவைக்கும் வழிகள் : தக்கவைக்க என்ன செய்தால் ரசிகர்களுக்குப் பிடிக்கும்? அதை எப்படிச் செய்தால் பிடிக்கும்? எப்போது செய்தால் ரசிகர்கள் பெருமிதம் அடைவார்கள்? இவை மூலம் அந்த விளையாட்டு நிறுவனம் எப்படி பணம் ஈட்டி முன்னேற முடியும்? அடுத்த முறை நடக்கும் போட்டியின் போது என்னவெல்லாம் செய்யலாம், என்ன தேவை? இவை அனைத்தையும் விவரமாக விளையாட்டு நிறுவனத்திற்கு வழிகாட்டி வருகிறது ஃபான்டெயின்.

  எது போன்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்? : ரசிகர்களை வாடிக்கையாளராக மாற்ற என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தமுடியும். தொடர்ந்து அவர்களை உற்சாகப்படுத்தி எப்படி நிறுவனங்கள் செயல்படலாம், அதற்கான தேவைகளும், பயன்பாடுகளும் என்னவென்று ஃபாண்டெயின் பல்வேறு நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கி வருகிறது.

  "விளையாட்டாக பார்ப்பதைத் தாண்டி, அதையே சிறந்த தொழிலாகவும், முன்னனி நிறுவனமாக ஆக்க வழிகாட்டுவதே எங்கள் நிறுவனத்தின் இலக்கு" , என்று மூன்று நிறுவனர்களும் ஒருசேரக் கூறினர்.
  image


  ஃபான்டெயினின் வாடிக்கையாளர்கள்

  இந்த நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் ஏராளம். நம் கண்களைப் பறிக்கும் முக்கியமான வாடிக்கையாளர்கள்- 'சன்ரைசர்ஸ் ஐதராபாத்' (Sunrisers Hyderabad), 'கொல்கத்தா நைட்ரைடர்ஸ்' (Kolkata Knightriders), 'சோனி ம்யூசிக் இந்தியா' (Sony Music India), ஷாருக்கானின் 'ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட்' (Red Chillies Entertainment) போன்ற பிரபல நிறுவனங்கள்.

  "கோடிக்கணக்கான ரசிகர்களை ஒரே தளத்தில் இணைத்து எங்களது செயல்பாடுகள் உதவியுடன் விளையாட்டு நிறுவனங்களை லாபம் ஈட்டி வெற்றி பெறச் செய்தோம்", என்று ஆனந்தமாகக் கூறினார் ஆனந்த்.

  எதிர்காலத் திட்டங்கள்

  "எந்த செயலையும் கவனமாகவும், சரியான தொழில் அனுகுமுறையுடனும் செய்தால் வெற்றி நிச்சயம்", என்று கூறும் இந்த மூவர், அண்மையில் "புக் மை ஷோ" (Book My Show) என்னும் நிறுவனத்தை இவர்களுடைய பங்குதாரர் ஆக்கிக்கொண்டனர். பேபால் நிறுவனத்துடன் பணியாற்றிய தொடக்கக் காலங்களின் சரியான பயிற்சிகளும், வழிகாட்டுதலும் இவர்களுக்கு "உறுதியான தொடக்க நிறுவனம் 2014" க்கான CII விருதைப் பெற்று தந்தது. 

  எதிர்காலத் திட்டங்கள் பற்றிக்கூறும் போது, "பொருள், மக்கள் மற்றும் அறிவின் விரிவாக்கத்தின் மூலம், எங்கள் நிறுவனம் நம்பிக்கையான வெற்றியை பெறும்", என்று மூவரும் நம்பிக்கையுடன் கூறினார்கள்.

  இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close
  Report an issue
  Authors

  Related Tags

  Our Partner Events

  Hustle across India