பதிப்புகளில்

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் பகுதி - 2

சென்னையில் தொடங்கப்பட்ட ’Zoho’ தமிழக ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களுக்கான முன்னோடி! 

1st Feb 2017
Add to
Shares
262
Comments
Share This
Add to
Shares
262
Comments
Share

ஸ்டார்ட்-அப் உருவாக்கத்தின் பாலபாடம் சந்தையின் தேவையை சரியாக கணித்து, அதில் உள்ள இடைவெளிகளை பூர்த்தி செய்ய வேண்டிய தொழில்நுட்பத்தை கண்டறிவது. அந்த தொழில்நுட்பத்தை எந்த முன் அனுபவமும் இன்றி எவரும் புரிந்து கொள்ளக்கூடிய மிக எளிமையான வடிவத்தில் தயாரித்து வழங்குவது மிக அவசியம். இதை மிகச் சரியாக செய்து வெற்றி மேல் வெற்றி பெற்ற ஒரு சென்னை ஸ்டார்ட்-அப் தான் ’Zoho’. இன்று அவர்கள் ஸ்டார்ட்-அப் இல்லை பெரும் நிறுவனம்.

1996 இல் இணையம் கொடிவிட்டு பரவ ஆரம்பித்த புதிது. நெட்வொர்க் மென்பொருட்களின் தேவை மிக அதிகம். அதில் பரவலாக பெரிய கம்பெனிகளே முயற்சித்து பார்த்துக் கொண்டிருந்த போது Ph.D பண்ணிக் கொண்டிருந்த ஸ்ரீதர் வேம்பு என்ற அந்த இளைஞர் இந்தியா திரும்பி சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு அபார்ட்மென்ட்டில் Adventnet (பின்னர் ZOHO பெயர் மாற்றம் செய்யப்பட்டது) என்ற அந்த ஸ்டார்ட்-அப்பின் கிளையை துவங்குகிறார். அப்போது நெட்வொர்க் உலகில் நிறைய இடைவெளிகள்.

Protocol Adapter, Software Agent, Stimulation Toolkits போன்ற நுண் இணைய தொழில்நுட்பத்தின் தேவை அதிகம் இருந்தது. இவற்றை அலுவலக நெட்வொர்க்கில் உள்ள அனைத்து கணினிகளிலும் புகுத்திவிட்டால் ஒரு அட்மின் கணினியில் இருந்து எல்லாவற்றையும் கண்காணிக்க, வேண்டிய செயல்களையும் செய்ய முடியும். Original Equipement Manufacture என்று குறிப்பிடப்படும் பெரிய வகை தொழிற்சாலைகளுக்கு இது இருந்த இடத்தில் இருந்தே வேலை செய்ய உதவி செய்தது. பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த மனிதசக்தியை இது வெகுவாக குறைத்தது.

 

 


இதை செய்துகாட்டிய இவர்களின் முதல் தயாரிப்பு WebNMS ஒரு வருடத்திலேயே ஹிட் அடிக்க ஆரம்பித்தது. இந்த காலகட்டத்தில் பெரிய பெரிய நெட்வொர்க் சாதன தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் இவர்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாங்கினார்கள். அது தான் இவர்களின் முதல் வெற்றி. அந்த தொழில்நுட்பத்தை இன்னும் எளிமையாக்கி சிறிய, நடுத்தர கம்பெனிகள் முதல் பெரிய கம்பெனிகள் வரை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கினார்கள்.

அதற்கு முன்பு இந்த வகை தொழில்நுட்பங்கள் மிக கடினமாக இணைய கட்டளைகள் ஒவ்வொன்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டிய, தேடுவதற்கு அரிதான வகையில் இருந்ததை இணையதள வடிவமைப்பில் (Web Interface) கொண்டுவந்து எளிமைப் படுத்தினார்கள்.

வெகுவிரைவில் இவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத நெட்வொர்க் கம்பெனிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாவற்றிலும் வியாபித்தார்கள். பிறகு அந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பிற நெட்வொர்க் தயாரிப்புகளை கொண்டுவந்தார்கள். விஷயம் அதுமட்டும் அல்ல.

இவர்களை போலவே சில பல நெட்வொர்க் கம்பெனிகளும் உருவாகின. ஆனால் அவர்கள் தயாரிப்புகள் சந்தையில் பெரிதாக கவரவில்லை. காரணம் Usability எனப்படும் பயனாளிகள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய பயன்திறன் வடிவமைப்பில் கவனம் செலுத்தத் தவறினார்கள். ஒரு பொருள் தொழில்நுட்பத்தில் எவ்வளவு மேம்பட்டு இருந்தாலும் பயனாளிகளுக்கு ஏற்றவிதத்தில், எளிதில் புரியும் விதத்தில் இல்லாவிட்டால் அது தோல்வி தான் காணும். இதை ZOHO சிறப்பாக புரிந்துவைத்து செயல்பட்டார்கள்.

Microsoft நிறுவனத்தின் Office Suiteஇல் உள்ள MS-Word, Powerpoint, Excel உள்ளிட்ட அனைத்து மென்பொருட்களையும் இணையத்தில் கொண்டுவந்தார்கள். அப்போது தான் Google Doc உம் வந்தது என்றாலும் Zoho Online Office Suite மிகத் துல்லியமாக Original Word போலவே இருந்தது. இன்னும் சில நுண்ணிய வசதிகள் ஒரிஜினலில் கூட இல்லை. ஆக நீங்கள் ஒரு Word file ஐ type பண்ணி அனுப்ப ஒட்டுமொத்த MS-Suite ஐயும் உங்கள் கணினியில் Install பண்ண வேண்டியதில்லை. Zoho கணக்கை தொடங்கி டைப் பண்ணிவிடலாம். இதெல்லாம் நடந்தது Cloud Computing என சொல்லப்படும் இந்த மேகக்கணினி தொழில்நுட்பம் பிறந்த ஆரம்பகாலம் 2005-06. இதை கவனித்த Microsoft மிக மிக கடுப்பானது. ஏனென்றால் அவர்களின் டீமும் இதே முயற்சியில் பல மாதங்கள் செலவிட்டும் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தபோது Zoho சாதித்து காட்டியிருந்தது. அடுத்த கடுப்பிற்கு காரணம் Zoho அவர்களிடம் விலை போக மறுத்தது. எவ்வளவு பேரம் பேசினாலும் இந்த சென்னை கம்பெனி மசியவில்லை. Zoho வின் வெற்றிப் பயணம் ராக்கெட் வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது.

இந்த காலத்தில் சில தொடக்க நிறுவனங்கள் ஒட்டுமொத்த Operating Systemத்தையும் ஆன்லைனில் கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் அது தேவையா என்றால் நிச்சயம் இல்லை. இது ஒரு பாடம். தொழில்நுட்பம் இருக்கிறது என்பதற்காக காலத்திற்கும், தேவைக்கும் பொருந்தாத முயற்சிகளை மேற்கொண்டால் அது தோல்வி அடையவே செய்யும். 

Zoho வெற்றி அடைய நிறுவனத்திற்குள் நிலவிய கார்பரேட் கலாச்சாரத்தை மிக மிக எளிமையாக்கியதும் ஒரு முக்கியக் காரணம். மேனேஜர்களுக்கு இயக்குனர்களுக்கு எவருக்கும் தனி அறை கிடையாது. யாரையும் எளிதில் அணுகலாம். ஏன் அதன் நிறுவனர் ஸ்ரீ வேம்பு’விற்கே கூட தனி அலுவலக அறை, பெரிய வீல்சேர், உதவியாளர் என்றெல்லாம் கிடையாது. தனி நபர் ஆடம்பரம் தான் கிடையாது என்றாலும் கொண்டாட்டங்களுக்கு குறை இருக்காது. மேலும் என்னென்ன வசதிகள் கொடுக்கலாம் என்று சிந்தித்து கொண்டே இருப்பார்கள்.

வேலை கொடுப்பதற்கு பதில் பொறுப்புக்களை கொடுப்பார்கள். பொதுவான, தொழில்நுட்பம் சார்ந்த என எல்லாவிதமான கருத்துக்களை பகிர Internal Blog, Forum இருந்தது. நிறுவனர் ஸ்ரீதர் இதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உரையாடிக் கொண்டே இருந்தார். இன்று முகநூல், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் எல்லாம் நாம் கருத்துவிவாதம் செய்வது போலவே Zohoவில் வெளிப்படையாக ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடமளித்தது. பொது நூலகங்கள், தொழில்நுட்ப நூலகங்கள், வீடியோ நூலகம், விளையாட்டுதளங்கள், உடற்பயிற்சிக் கூடம், ஓய்வு அறைகள் எல்லாம் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே இவர்கள் கொண்டுவந்து விட்டார்கள்.

இந்த கலாச்சாரம் என்ன செய்தது. வேலை செய்யும் ஐடி பணியாளர்களை ஒரு பயமில்லாத, பதட்டமில்லாத, இணக்கமான, தெளிவான மனநிலையுடன் நிறைய வேலைகளை செய்ய தூண்டியது. புது புது ஐடியாக்களை ஊக்குவித்தார்கள். அது ஒன்றை பத்தாகி பல தயாரிப்புகளாக கிளை பரப்பியது.

மேற்சொன்ன எல்லா விஷயங்களும் ஒரு ஸ்டார்ட்அப் மேலும் மேலும் வளரத் தேவையான அடிப்படை பாடங்கள். இதில் தெளிவு இருக்கும் எந்த நிறுவனமும் வெற்றி பெற தவறியதில்லை. இன்று WebNMS, ManageEngine, Zoho Clouds என்று மூன்று குடைகளில் நூற்றிற்கும் மேற்பட்ட மென்பொருள் தயாரிப்புகளுடன் உலகமெங்கும் கிளைப் பரப்பி 5000க்கும் அதிகமான ஊழியர்களுடன் வளர்ந்திருக்கிறது ZOHO.

ஒரு நல்ல நிறுவனம் என்றால் அதிலிருந்து புதிய விதைகள் தோன்றி விருட்சமாக வளர வேண்டும். ZOHOவில் பணியாற்றி இந்த பாலபாடங்களை கற்ற சிலர் சொந்தமாக நிறுவனம் தொடங்கி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அந்த சிலரில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். எங்கள் ஸ்டார்ட்-அப்பின் முழு வெற்றிக்காக முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். கற்றது ZOHO’விடம் ஆச்சே விடுவோமா :) 

கதை தொடரும்...

(பொறுப்பு துறப்பு: இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

Add to
Shares
262
Comments
Share This
Add to
Shares
262
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக