பதிப்புகளில்

ஆன்லைன் ஆடை விற்பனையில் சென்னை சேர்ந்த 'சிபஜார்' சாதனை!

cyber simman
3rd Sep 2015
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

"சிபஜார்" (CBazaar) நிறுவனத்தின் பயணம் 1998 ல் தொடங்கியது. அப்போது சென்னைபஜார்.காம் (ChennaiBazaar.com) எனும் பெயரில் செயல்பட்ட நிறுவனம் சென்னையில் மளிகை மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து வந்தது. ஆனால், அந்த கால கட்டத்தில் தொழில்நுட்பம் மற்றும் செல்போன் பயன்பாடு அந்த அளவுக்கு பிரபலமாகாததால் குறைந்த லாபம் கொண்டு விற்பனை முறையில் எண்ணற்ற சவால்களை சந்தித்தது. எனவே 1999ல் சென்னை பஜார், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான பரிசுப்பொருள் விற்பனை தளமாக மாறியது. சிபஜார்.காம் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ராஜேஷ் நஹார் இது பற்றி கூறும்போது,

"சிபஜார் தான் 2000-வது ஆண்டில் ஆன்லைனில் சேவைகளை விற்பனை செய்யத்துவங்கிய முதல் இ-காமர்ஸ் நிறுவனமாகும். அப்போது தான் உலக நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பாரம்பரிய ஆடைகளுக்கான தேவை இருப்பது புரிந்தது”. 

2004 முதல் ராஜேஷ், இந்திய பாரம்பரிய ஆடைகளுக்கான உலகலாவிய தேவையை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த தீர்மானித்தார். சென்னைபஜார்.காம், சிபஜார்.காம் என பெயர் மாற்றப்பட்டது. 2005ல் பரிசளிப்பதற்கு பதில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான ஆடைகளில் கவனம் செலுத்த துவங்கியது.

ராஜேஷ் நஹார் மற்றும் இணை நிறுவனரான ரித்தேஷ் கத்தாரியா சென்னையில் எம்.பி.ஏ வகுப்பில் சந்தித்து பேசிய போது, இருவருக்கும் பரஸ்பரம் இணையத்தில் ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்டனர், இதற்கான விதை மனதில் விழுந்தது. தங்கள் தாயகத்தை விட்டு வெகு தொலைவில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்தவர்கள் பலர், பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்க விரும்புவார்கள் எனும் எதிர்பார்ப்பில், மேற்கத்திய சந்தையை மனதில் வைத்து வர்த்தகத்தை துவக்கினர். 2001 ன் இறுதியில் ராஜேஷ், யூ.கே. சென்று, அங்கு வசிக்கும் இந்தியர்களின் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் பழக்கத்தை கவனித்தார். அதன் பிறகு அங்குள்ள தெற்காசிய கடைகளில் தங்கள் பொருட்களின் பட்டியலை காட்சிக்கு வைக்கும் வகையில் கூட்டு ஏற்படுத்திக்கொண்டனர்.

image


பிசினஸ் உருவாகிய கதை

தன் சொந்த முயற்சியின் மூலம், ரூ.12 லட்சம் ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் இந்நிறுவனம் துவக்கப்பட்டது. பத்தாண்டு செயல்பாட்டில் சிபஜார் இன்று 25,000 க்கும் மேற்பட்ட வடிவமைப்பு வாய்ப்புகளை உலகம் முழுவதும் அனுப்பி வைக்கும் வசதியை கொண்டுள்ளது.

10 பேர் கொண்டு குழுவுடன் துவங்கிய இந்நிறுவனம் 350 க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள், ஆடை தயாரிப்பாளர்கள், புரோகிராமர்கள், வாடிக்கையாளர் உறவு அதிகாரிகள் என திறமை வாய்ந்த பெரிய குழுவாக வளர்ந்திருக்கிறது. 

"எங்கள் நிறுவனம், அடிப்படையில் சர்வதேச சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகமாக அறியப்படுகிறது. 188 நாடுகளில் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மேல் பெற்றுள்ள சிபஜார், பாரம்பரிய ஃபேஷன் தேவைகளை நிறைவேற்றி வரும் பிராண்டாக உருவாகி, உலகளவில் இந்திய ஃபேஷனுக்கான வெற்றிக்கதையாக மிளிர வேண்டும் என்று விரும்புகிறது”.

கடந்த 5 ஆண்டுகளில், சிபஜார் 60 சதவீதம் வளர்ந்திருக்கிறது. அதன் சராசரி ஆர்டர் அளவு ரூ.13,000 ஆக இருக்கிறது. இந்நிறுவனம் நாடு முழுவதும் வலுவான 450 சப்ளையர்களை பெற்றிருக்கிறது. முன்னணி வடிவமைப்பாளர்கள், பிராண்டுகள், ரிடைல் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற கைவினை கலைஞர்கள் ஆகியோரும் இதில் அடக்கம்.

“வெளிப்புற முதலீட்டை பெற வாய்ப்பில்லாததால் எப்போதுமே வர்த்தகத்தை பெருக்குவதிலும், லாபமீட்டுவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். 2005 ல் 3 -5 % வரிக்கு பிந்தைய லாபத்தை பெற்றிருக்கிறோம்” என்கிறார் ராஜேஷ்.

மாற்றத்தை நோக்கி

சிபஜார் சொந்த வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பிரத்யேகமான வடிவமைப்புகளை வழங்குகிறது. இவற்றை கொல்கத்தாவில் உள்ள கலைஞர்கள் கொண்டு பூவேலைப்பாடு செய்கிறது. இந்நிறுவனம், ஆடை வடிவமைப்பின் பிரத்யேக தன்மைக்காக அறியப்படுகிறது. தினந்தோறும் 3,000 க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை இடம்பெறச்செய்து வருகிறது. உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்று நேரடியாக விற்பதால், 10-30 % மதிப்பு பண சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

2007 ல் சிபஜார், பாரம்பரிய இந்திய ஆடைகளை பலரகங்களில் அளிக்கும் ஷாப்பிங் தளமான, ஹோம்இந்தியா.காம் நிறுவனத்தை கையகப்படுத்திக்கொண்டது. இந்த நடவடிக்கை, சிபஜார் தனது சேவையை விரிவாக்கம் செய்யவும், பிரத்யேகமான உயர்தர திருமண ஆடைகள் உள்ளிட்ட ஃபேஷன் ஆடைகளை வழங்கவும் வழிவகை செய்தது. இதன் பயனாக இந்நிறுவனம் ஃபேஷன் ஆலை ஒன்றை அமைத்தது.

இந்திய சந்தையில் கவனம்

அடுத்த சில ஆண்டுகளுக்கு சிபஜார் மேற்கத்திய சந்தையில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் செழுமையான ஜவுளி பாரம்பரியத்தை முன்னிறுத்தி, இந்திய ஆடைகளுக்கான சர்வதேச பிராண்ட் மதிப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. அதிகம் அறியப்படாத துணி ரகங்களை பிரபலமாக்குவதற்காக கலைஞர்களுடன் இணைந்து செயல்படும் ரித்து குமார் போன்ற, வடிவமைப்பாளர்களுடன் இணைந்து செயல்படவும் விரும்புகிறது. மேலும் அரசின் "மேக் இந்தியா" திட்டம் மூலமும் வெளிநாடுகளில் இந்திய துணிகளுக்கான எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

நவீனமயமாக்கலால் இந்தியர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்வதற்காக மேற்கத்திய ஆடை ரகங்கள் நம் நாட்டில் ஊடுருவி வரும் நிலை அதிகம் உள்ளது. ஆனால் அதே சமயம், வெளிநாடு வாழ் இந்திய வாடிக்கையாளர்களுக்காக, இந்திய பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் தனிப்பட்ட ரிடைல் மையங்கள் அங்கு மிக குறைவு.

“இந்திய பாரம்பரிய ஆடை ரகங்களை உருவாக்குவது மேற்கத்திய நாடுகளில் பொருளாதார நோக்கில் ஏற்றதாக இருக்கிறது. இதில் மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கிறது. இது இந்திய ஜவுளிகளுக்கான சர்வதேச பிராண்ட் மதிப்பாகவும் அமையும்” என்கிறார் ராஜேஷ்.

2014 நவம்பரில், இந்நிறுவனம் ஃபாரம் சினர்ஜீஸிடம் இருந்து ரூ.50 கோடி தனியார் சமபங்கு மூலதனம் பெற்றது. இன்வெண்டஸ் கேபிடல் மற்றும் ஓஜஸ் வென்ச்சர் ஆகியவையும் நிது அளித்துள்ளன. இதன் மூலம் சிபஜார் ரூ.150 கோடி மதிப்பு கொண்டதாக கருதப்படுகிறது.

வர்த்தக அடிப்படை

மேற்கத்திய நாடுகளில், இந்திய அரசின் மேக்-இன்-இந்தியா திட்டத்தின் தீவிர பிரச்சாரம் காரணமாக 90% வருவாய் வெளிநாடுகளில் இருந்து தங்களுக்கு வருவதாக ராஜேஷ் கூறுகிறார். இந்திய சந்தையை பொருத்தவரை குறிப்பிடத்தக்க விற்பனை பாலிவுட் ஃபேஷன் அடிப்படையிலான ஆடைகள் மூலம் வருகிறது. பாலிவுட் படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடிகர்கள் அணியும் பாரம்பரிய ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

”லெஹங்கா, அனார்கலி மற்றும் திருமண ஆடைகள் எங்களிடம் அதிகம் விற்பனையாகும் ரகங்களாக உள்ளன. நவீன ரசனைக்கேற்ப இரண்டும் கலந்த ரகங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. தீபாவளி மற்றும் ஈத் திருநாள் போன்ற பண்டிகைகளின் போது வரவேற்பு அதிகமாகிறது” என்கிறார் ராஜேஷ்.

வாய்வழி விளம்பரம்,பெரிய அளவிலான டிஜிட்டல் விளம்பரம், மேற்கத்திய நாடுகளில் பாலிவுட் படங்களின்ஃபேஷன் தாக்கம் ஆகியவை மூலம் தளத்திற்கு மாதாந்திர வருகை அதிகரிக்கிறது.

எதிர்கால திட்டம்

பாரம்பரிய ஆடைகளுக்கான சர்வதேச சந்தை ரூ.15,000 கோடி மதிப்பு கொண்டதாக கருதப்படுகிறது. இதை மனதில் கொண்டு சிபஜார் உற்சாகத்துடன் செயல்படுகிறது. 

”25 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து ஆண்டுக்கு 40,000 முதல் 50,000 டாலர் சம்பாதிக்கும் நிலையில் மொரிஷியஸ்,தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய புதிய சந்தைகளில் கால் பதிக்க விரும்புகிறோம்” என்கிறார் ராஜேஷ்.

இந்த நிதி ஆண்டில் வருவாய் ரு.100 கோடியை தொடும் என்று சிபஜார் எதிர்பார்க்கிறது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் 100 % வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் 200%-300% வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. தொழில்முனைவு உலகில் அடியெடுத்து வைக்க விரும்பும் இளைஞர்களுக்கு தனது செய்தியாக, “நீங்கள் தொழில்முனைவராக ஆக விரும்புவதற்கான காரணக்களை தெரிந்து கொள்ளுங்கள். ரிஸ்க்கை தவிர்த்து, இணைய நிறுவனர்களை கவனமாக தேர்வு செய்யுங்கள். தடைகளில் அல்லாமல் குறிக்கோளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் 90% நேரத்தை நேற்றைய பிரச்சனைகளில் செலவிடுவதைவிட இன்றைய மற்றும் நாளைய வாய்ப்புகளில் கவனம் செலுத்துங்கள்” என்கிறார்.

இணையதள முகவரி: http://www.cbazaar.com/

யுவர்ஸ்டோரி பார்வை

இந்தியா ரிடைலிங் இணையதள தகவலின்படி பாரம்பரிய பேஷனுக்கான வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியிலான சந்தை 2013ல் $13,100 மில்லியனாகும். இது தொடர்ந்து 8% வளர்ச்சியுடன் 2018 ல் $19,600 மில்லியனாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரிவில் உள்ள நிறுவனங்களின் அலெக்சா ரேங்க் ஒப்பீடு இதோ;

image


இதன் படி உத்ஸவ் ஃபேஷனின் வீச்சு அதிகமாக இருந்தாலும் சிபஜார் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியன்ரூட்ஸ் சீராக உள்ளது. உத்ஸவ் ஃபேஷன், 2013ல் ரூ.100 கோடி விற்றுமுதல் இடத்தை எட்டியது. சிபஜார் மற்றும் இந்தியன்ரூட்ஸ் இந்த நிதியாண்டில் 100 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய உள்ளூர் இ-காமர்ஸ் நிறுவனங்கள் போல் அல்லாமல் வெளிநாட்டி வாழ் மக்களை மையமாக கொண்ட நிறுவனங்கள் சராசரியாக அதிக விலை பொருட்களை விற்கின்றன. ( ரூ.5,000).

அரசு புள்ளி விவரபடி 23 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களின் வாங்கும் சக்தி உள்ளூர் இந்தியர்களை விட அதிகமாக உள்ளது. சமீக காலமாக உத்ஸவ் ஃபேஷன், சிபஜார் மற்றும் இந்தியன்ரூட்ஸ், கனடா, யு.கே மற்றும் அமெரிக்க சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது. இருந்தாலும் ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கிலும் கணிசமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்த நாடுகளில் பாரம்பரிய ஃபேஷனுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதால் இந்த நிறுவனங்கள் புதிய சந்தையில் எப்படி செயல்படுகின்றன என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

குறிப்பு: அலெக்சா ரேங்க் ஒப்பீடு நிறுவனங்களின் வீச்சை குறிப்பிட மட்டுமே.

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags