பதிப்புகளில்

விவசாயிகளுக்கு குறுகியகால பயிர்க்கடன் வழங்க வங்கிகளுக்கு வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

15th Jun 2017
Add to
Shares
73
Comments
Share This
Add to
Shares
73
Comments
Share

2017-18-ம் ஆண்டில் விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில், ரூ.3 லட்சம் வரை குறுகிய காலக் கடன் பெறும் விவசாயிகள், ஆண்டுக்கு 4% வீதம் மட்டுமே வட்டி செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்துக்காக ரூ.20,339 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்.

தங்களது சொந்த நிதியைப் பயன்படுத்தும் பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் ஆகியவற்றுக்கு வட்டி மானியம் வழங்கப்படும். மண்டல ஊரக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மறு நிதியளிப்பதற்காக நபார்டு-க்கும் வட்டி மானியம் வழங்கப்படும்.

image


வட்டி மானியத் திட்டம், ஓராண்டு காலத்துக்கு நடைமுறையில் இருக்கும். இதனை நபார்டு மற்றும் ரிசர்வ் வங்கி செயல்படுத்தும்.

நாட்டில் வேளாண் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஏற்றுக் கொள்ளக் கூடிய வட்டியில், விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர்க்கடனை வழங்குவதற்கான நிதி கீழ்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களைக் கீழே காணலாம்:

அ. 2017-18-ம் ஆண்டில் ஓராண்டு காலத்துக்கு ரூ.3 லட்சம் வரை, குறுகிய கால விவசாயக் கடனைப் பெற்று உரிய முறையில் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு 5 சதவீதம் வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்கும். இதன்மூலம், விவசாயிகள் 4% மட்டும் வட்டி செலுத்தினால் போதும். றுகியகாலப் பயிர்க்கடனை உரிய நேரத்தில் செலுத்தாத விவசாயிகள், மேற்குறிப்பிட்ட 5% வட்டி மானியத்துக்குப் பதிலாக, 2% மட்டுமே வட்டி மானியம் பெறத் தகுதியுடையவர்கள்.

ஆ. 2017-18-ம் ஆண்டில் வட்டி மானியத்துக்காக தோராயமாக ரூ.20,339 கோடியை மத்திய அரசு வழங்கும்.

இ. அறுவடைக்குப் பிறகு, தங்களது விளைபொருட்களை சேமித்துவைப்பதற்காக 9% வட்டியில் கடன் பெறும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு 2% வட்டி மானியத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, 6 மாதங்கள் வரை, 7% வட்டியில் கடன் பெற முடியும்.

ஈ. இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, கடன் தொகையை மறுகட்டமைப்பு செய்வதற்காக வங்கிகளுக்கு முதல் ஆண்டில், 2% வட்டி மானியம் வழங்கப்படும்.

உ. குறுகியகால பயிர்க்கடனை விவசாயிகள் உரிய நேரத்தில் செலுத்தாவிட்டால், அவர்கள் மேற்கூறிய தொகைக்கு மாறாக, 2% வட்டி மானியம் பெறுவதற்கு மட்டுமே தகுதியுடையவர்கள்.

இந்தத் திட்டத்தால் ஏற்படும் மிகப்பெரும் மாற்றங்கள்:

வேளாண் துறையில் ஒட்டுமொத்த உற்பத்தியையும், அதிக உற்பத்தித் திறனையும் எட்டுவதற்கு கடன் மிகவும் முக்கியமானதாகும். நாட்டில் உள்ள விவசாயிகளின் முக்கியத் தேவையான, குறுகியகாலக் கடன்கள், அறுவடைக்குப் பின்பு, விவசாய விளைபொருட்களை சேமித்து வைப்பதற்காக வழங்கப்படும் கடன்கள் ஆகியவற்றுக்கு வட்டி மானியம் வழங்குவதால், ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க ரூ.20,339 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், அமைப்புசாராத நிறுவனங்களிடம் அதிக தொகைக்கு கடன் பெற வேண்டிய கட்டாயத்திலிருந்து விவசாயிகளை மீட்பதற்கு இந்த அமைப்புசார்ந்த கடன் உதவும்.

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறப்படும், பயிர்க் காப்பீடு, கிடைக்கும் பயிர்க்கடனுடன் இணைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள், பயிர்க்கடனைப் பெற்று, விவசாயிகளின் நலனுக்காக அரசு மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளின் பலன்களையும் பெற வேண்டும்.

மத்திய அரசின் மிகவும் முக்கிய நடவடிக்கை என்பது, விவசாயிகளுக்கு, தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், கொண்டுவந்த சந்தை சீர்திருத்தம் தான். மின்னணு தேசிய வேளாண் சந்தையை (electronic National Agriculture Market - e-NAM) ஏப்ரல் 2016-ல் மத்திய அரசு தொடங்கிவைத்தது. வேளாண் உற்பத்திப் பொருட்களின் சந்தைக் குழுக்களை மின்னணு முறையில், ஒருங்கிணைத்து, போட்டி முறையில் விளைபொருட்களுக்கு விலை கிடைக்கச் செய்து, விவசாயிகள் பயனடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 

ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இதன்மூலம், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அங்கீகரிக்கப்பட்ட சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைப்பதற்காக கடன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்று 6 மாதங்கள் வரை, பொருட்களை சேமித்து வைப்பதற்கு, விவசாயிகள் கடன் அட்டை (Kisan Credit Card – KCC) வைத்துள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு 2% வட்டி மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம், சந்தையில் பொருட்களை விற்பதற்கு சரியான நேரம் என்று கருதும் நேரத்தில், பொருட்களை விவசாயிகள் விற்க முடியும். கட்டாயப்படுத்தி விற்க வேண்டிய நிலை இருக்காது. எனவே சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், தங்களது விவசாயிகள் கடன் அட்டையை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில், விவசாயிகளுக்கு விதை வாங்குவது முதல் விளைபொருட்களை சந்தைப்படுத்துவது வரை பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கியுள்ளது. அரசின் மண் வள அட்டை, உள்ளீடு மேலாண்மை (Input Management), பிரதமரின் விவசாயிகள் நீர்ப்பாசனத் திட்டத்தின் ஒவ்வொரு சொட்டு நீருக்கும் கூடுதல் விளைச்சல் (Per Drop More Crop in Pradhan Mantri Krishi Sichai Yojana), பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM) போன்ற அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் அமைப்புசார்ந்த கடன் ஆதாரங்கள் பயனளிக்கின்றன.

பின்னணி:

இந்தத் திட்டம் 2006-07-ம் ஆண்டு முதலே செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், விவசாயிகள் ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடனை 7% வட்டியில் பெற முடியும். இதில் கூடுதலாக 3% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இதன்மூலம், கடனைப் பெறும் நாளிலிருந்து ஓராண்டுக்குள் கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்த முடிகிறது. நெருக்கடியான காலத்தில் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, விவசாயக் கடன் அட்டை வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு மாற்றுமுறை சேமிப்புக் கிடங்கு ரசீது மூலம், விளைபொருட்களை அறுவடைக்குப் பிறகு, அங்கீகரிக்கப்பட்ட சேமிப்புக் கிடங்குகளில் 6 மாதங்கள் வரை சேமித்துவைப்பதற்காக கடன் வழங்கப்படுகிறது. 2016-17-ம் ஆண்டில், வழங்கப்பட்ட குறுகிய கால பயிர்க்கடன் அளவு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.6,15,000 கோடியைத் தாண்டி, ரூ.6,22,685 கோடியாக இருந்தது.

Add to
Shares
73
Comments
Share This
Add to
Shares
73
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக