பதிப்புகளில்

ஓசூர் பெண்களுக்கு தொழில் வாய்ப்பளித்து வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய சமூக நிறுவனம் ‘லேபர்நெட்’

பெங்களுரு சமூக நிறுவனம் 'லேபர்நெட்’, தமிழகம் உட்பட இந்தியா முழுவதுமுள்ள ஊரக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது! 

19th Dec 2017
Add to
Shares
186
Comments
Share This
Add to
Shares
186
Comments
Share
லேபர்நெட் நிறுவிய டெய்லரிங் மையம், ஓசூர்

லேபர்நெட் நிறுவிய டெய்லரிங் மையம், ஓசூர்ஷில்பா - மேற்பார்வையாளர்

ஓசூரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பழ வியாபாரியின் மகளான ஷில்பா, பியூசி முடித்ததும் மேற்கொண்டு படிப்பை தொடரமுடியவில்லை. பஸ் ஓட்டுநருக்கு அவரது பெற்றோர் மணமுடித்தனர். இரண்டு குழந்தைகள் பிறந்தது. கணவரின் மாதச்சம்பளமான 16 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த சிரமப்பட்டார். குடும்பத்தை ஆதரிக்க தானும் சில திறன்களை வளர்த்துக்கொள்ள நினைத்தார். ஷில்பா சிறுவயதிலே தன் அத்தையிடமிருந்து ஓரளவிற்கு தையல் கற்றிருந்தார். சாம்பவ்-லேபர்நெட் செண்டர் என்ற பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி மையத்தில் தையலுக்கான இலவச பயிற்சி எடுத்துக்கொண்டார். 

“நவீன கட்டிங் முறை, தையல், வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவற்றை கற்க விரும்பி, பயிற்சியை வெற்றிகரமாக முடித்தேன். ஆனால் இந்த பயிற்சி என் வாழ்க்கையே மாற்றி தொழில்முனைவு நோக்கி நகர்த்தும் என எதிர்பார்க்கவில்லை,” என்கிறார் ஷில்பா.

பயிற்சிக்கு பின் ஷில்பா மையத்திற்கு தொடர்ந்து சென்று வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணிகளில் உதவி புரிந்தார். ஷில்பாவின் பயிற்சியாளர் அவரது அர்ப்பணிப்பைக் கண்டு, மையத்தில் பயிற்சி பெற்ற டெய்லர்களை தொழில்முனைவோராக மாற்றுவதற்காக மைக்ரோ நிறுவனம் அமைத்தபோது மேற்பார்வையாளர் பதவிக்கு ஷில்பாவின் பெயரை பரிந்துரைத்தார். ஷில்பாவின் கணவரும் உறுதுணையாக இருந்தார். இன்று 12 நிரந்தர டெய்லர்களையும் சில தற்காலிக டெய்லர்களையும் மேற்பார்வை செய்து வருகிறார். தனது திறன்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் ஷில்பா, 

”கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவையே வளர்ச்சிக்கு முக்கியம்,” என்கிறார்.

பி.ராதா – டெய்லர்

10-ம் வகுப்பு வரை மட்டும் பயின்ற ராதா, குடும்பச் சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் ஓசூரைச் சேர்ந்த செக்யூரிட்டி பணியில் இருந்த ரவீந்திராவை மணந்தார். ரவீந்திரா தற்சமயம் பெங்களூருவின் இன்ஃபோசிஸ் வளாகத்தில் பணிபுரிந்து மாதத்திற்கு 15,000 சம்பாதிக்கிறார்.

குழந்தைகள் பிறந்ததும் பணத் தேவை அதிகரிக்கவே அருகிலிருப்பவரிடம் டெய்லரிங் பயின்றார். எனினும் அடிப்படை திறன் மட்டுமே இருந்ததால் முறையான பயிற்சி பெற விரும்பினார் 36 வயதான ராதா. அருகாமையிலுள்ள லேபர்நெட் மையத்தில் சேர்ந்து டெய்லரிங் பயிற்சி சான்றிதழ் பெற்றார். அவரது பயிற்சியாளரின் பரிந்துரையின் பேரில் ஓசூரில் அமைக்கப்பட்ட ஒரு மைக்ரோ நிறுவனத்தில் டெய்லராக சேர்ந்தார். 

“இது வெறும் துவக்கம்தான், என் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க மேலும் வளர்ச்சியடைவேன்,” என நம்பிக்கையாக பேசினார் ராதா.
ஷில்பா, ராதா மற்றும் ஜெனிலா (இடது முதல் வலது)

ஷில்பா, ராதா மற்றும் ஜெனிலா (இடது முதல் வலது)


ஜெனிலா – டெய்லர்

ஜெனிலா பள்ளிப்படிப்பை முடித்ததும் நாகர்கோவிலில் அவரது கிராமத்தில் நர்சிங் படிப்பை முடித்து நான்காண்டுகள் நர்சாக பணியாற்றினார். மாதம் ரூபாய் 5000 சம்பாதித்தார். அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் பெயிண்டராக பணியாற்றிய கனகராஜ் என்பருக்கு அவரது பெற்றோர் மணமுடித்தனர். அதன் பிறகு ஓசூரில் ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிக்கு சேர்ந்தார். ஆனால் இரவு நேரப் பணி இருந்ததால் கணவன் மனிவியிடையே அடிக்கடி சண்டை மூண்டது. எனவே பணியைத் துறந்து 13 ஆண்டுகள் குழந்தைகளை பராமரித்து முழு நேர இல்லத்தரசியாகவே மாறினார். வீடு வாங்குவதற்காக லோன் தொகைக்கு விண்ணப்பித்தபோது கணவரின் சுமையை பகிர்ந்துகொள்ள வருமானம் ஈட்ட விரும்பினார்.

டெய்லரிங் பணியில் ஈடுபடுவதற்கு பயிற்சி தேவைப்படும் என்பதை உணர்ந்தார். லேபர்நெட் பயிற்சி வகுப்புகள் குறித்து கேள்விப்பட்டு இரண்டு மாத வகுப்பில் சேர்ந்தார். அதை முடித்து சான்றிதழ் பெற்றார். லேபர்நெட்டால் ஓசூரில் அமைக்கப்பட்ட மைக்ரோ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். தற்போது மைக்ரோ நிறுவனத்திற்கு சந்தையிலிருந்து கிடைக்கப்படும் ஆர்டர்களை ஏற்றுக்கொண்டு மாதத்திற்கு 3,000 முதல் 6,000 வரை வருமானம் ஈட்டுகிறார். 

”நான் என் மீது நம்பிக்கை வைத்து துறையை மாற்றியதில் இப்போது மகிழ்ச்சியடைகிறேன். ஒரு டெய்லராக மேலும் அனுபவத்தை பெருக்கிக்கொண்டு அதிகம் சம்பாதிப்பேன் என்று நம்புகிறேன். டெய்லரிங்கில் புதிய திறன்களை வளர்த்துக்கொண்டு, சந்தைக்கு தேவையானதை அளித்து எங்கள் நுண் நிறுவனம் வளர்ச்சியடைய பாடுபடுவேன்,” என்கிறார்.

மேலே குறிப்பிட்ட மூன்று இல்லத்தரிசிகளின் வெற்றிக்கு பின் இருப்பவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சமூக நிறுவனமான ‘லேபர்நெட்’. இவர்கள் ஊரக பகுதிகளில் வேலை வாய்ப்பு குறைவாக உள்ள பின் தங்கிய கிராமங்களில் வசிக்கும் பெண்கள், இளைஞர்களுக்கு தங்களின் பயிற்சி மையங்கள் மூலம் தொழில் தொடங்க உதவுவது, தொழில்முனைவோர் ஆக்குவது போன்ற பல வளர்ச்சிப் பணிகளை செய்து வருகின்றனர். 

லேபர்நெட் (LabourNet) பணிகள்

தமிழ்நாட்டின் ஒரு சிறிய டவுனான ஓசூர், ஹெச்யூஎல், அசோக் லேலாண்ட், டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் அடங்கிய தொழில்துறை மையமாக உள்ளது. இது தவிர சர்வதேச சந்தைகளுக்கு விநியோகிக்கக்கூடிய பல்வேறு ஆடை உற்பத்தி யூனிட்களும் ஓசூரில் உள்ளது. இதன் காரணமாக ஓசூர் வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது.

இந்தப் பகுதியைச் சுற்றிலும் பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாகி வருகிறது. இருந்தும் தொழில் சார்ந்த திறன்கள் இல்லாதது முக்கிய தடையாகவே உள்ளது. இந்த இடைவெளி நிரப்பப்பட்டால் அந்த பகுதியில் முளைத்து வரும் வாய்ப்புகளை பலர் பயன்படுத்திக் கொள்ளலாம். 

“திருமணமான நலிந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த திறன்கள் கிடைக்கப்பட்டால் அவர்கள் தங்களது குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் விதத்தில் வாழ்வாதாரம் அதிகரிக்கும். அப்பகுதியில் பெரியளவிலான ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் இருப்பதால் பெண்கள் டெய்லரிங் மற்றும் எம்பிராய்டரி கற்றுக்கொள்ள விரும்புகின்றனர்.

லேபர்நெட் (LabourNet) முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப்பில் இணைந்து அளவெடுத்தல், கட்டிங், தையல் பணி, நவீன இயந்திரங்களைக் கையாளுதல் உள்ளிட்டவற்றில் கிராமப்புற பெண்கள் பயிற்சி பெற ஓசூரில் ஒரு டைலரிங் மையத்தை அமைத்தது. அதன் மூலமே ஷில்பா, ராதா, போன்ற பெண்கள் தங்களுக்கான வருமான வழியை தேடிக்கொண்டு இன்று மகிழ்ச்சியாக உள்ளனர். 

image


மைக்ரோ நிறுவங்களை உருவாக்குதல்

பயிற்சி முடிந்ததும் பெண்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால் பெரும்பாலானோர் ஆடை பிரிவில் முழு நேரப்பணியில் சேர முடியவில்லை. ஆட்டர்களை எடுத்துக்கொண்டு அவரவர் வீட்டிலிருந்தே டெலிவர் செய்தால் தர மேலாண்மை பெரிய பிரச்சனையாக இருக்கும். புதிதாக பயிற்சிபெற்ற டெய்லர்களின் திறன்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும், அவர்கள் பணியிடத்தையும் வீட்டையும் சமன்படுத்தவேண்டும், பண்டிகை காலத்திலும் பள்ளி திறக்கும் நேரத்திலும் ஒரு மாற்று வருமானம் கிடைத்து சுய தொழிலில் ஈடுபடவேண்டும். இந்த காரணங்களுக்காக உருவானதுதான் மைக்ரோ நிறுவனங்கள். 

இந்தப் பகுதியில் பல தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் உள்ளன. அத்துடன் ஏற்றுமதி நிறுவனங்களும் உள்ளன. எனவே மொத்த ஆர்டர்கள் இருக்கும் என்பதால் டெய்லரிங் பிரிவை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததாக லேபர்நெட் தெரிவிக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டெய்லரிங் யூனிட்களை கையாள்வதற்கான பயிற்சி பெற்றுள்ளனர். இதனால் டெலிவரியின் தரம் மேம்படுத்தப்படுகிறது. யூனிட்டில் பணியிலமர்த்தப்பட்ட டெய்லர்களில் சிலர் தற்போது மைக்ரோ நிறுவனங்களுக்கு பொறுப்பேற்று நிர்வகிக்கும் தொழில்முனைவோராக உள்ளனர்.

எண்ணற்ற பிரிவுகளில் பயிற்சி

இதேப்போல் தமிழ்நாட்டின் தெலியா என்கிற கிராமம் பல காலமாகவே வேலையின்மை பிரச்சனையை சந்தித்து வருகிறது. இதனால் அங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்து விரக்தியில் உள்ளனர். அங்கும் லேபர்நெட் ஒரு வாழ்வாதார மையத்தை அமைத்தபோது தெலியா மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது. 

“92 % தொழிலாளர்கள் ஒழுங்குப்படுத்தப்படாத துறையில் இருக்கும் ஒரு நாட்டில் கார்பெண்டரி, கட்டுமானப்பணி, ப்ளம்பிங், பெயிண்டிங் போன்றவற்றில் பயிற்சியளிக்கும் ஒரு வாழ்வாதார மையம் தெலியா மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியாமானதாக இருந்தது.”

ராஜா நாயக் என்கிற டெலியா இளைஞர் கட்டுமானம் மற்றும் கார்பெண்டரியில் பயிற்சி பெற்றார். ஒரு மாத பயிற்சிக்குப் பிறகு ப்ராஜெக்டுகளை தனியாகவே கையாளும் அளவிற்கு திறன் பெற்றுள்ளார். இன்று உதவிக்கு இரண்டு நபர்களை பணியிலமர்த்தி தொழில்முனைவராக வருமானம் ஈட்டுகிறார் அவர்.

வாழ்வாதார மையங்கள்

வாழ்வாதார மையங்கள் லேபர்நெட்டின் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாகும். லேபர்நெட் திறன் வழங்குவதில் மட்டுமல்லாமல் கல்வி (Education), தொழில்முனைவு (Entrepreneurship), வேலை வாய்ப்பு (Employment) என்கிற மூன்று விஷயங்கள் வாயிலாக வாழ்வாதாரத்தை உருவாக்க விரும்புகிறது. நாட்டில் இப்படிப்பட்ட முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் முதல் சமூக நிறுவனம் லேபர்நெட். 28-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் செயல்பட்டு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் 21 மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்தியா முழுவதும் செயல்படும் வணிகங்களுக்கு மதிப்பை கூட்டுகிறது.

கல்வி வாயிலாக நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குதல்

லேபர்நெட்டின் வாழ்வாதார மையங்கள் முழுமையான நெகிழ்வான கற்றல் தீர்வுகளை குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வழங்குகிறது. அதிகமான கூலி வாயிலாக வாழ்க்கை தரத்தை உயர்த்தி நிலையான வாழ்வாதாரத்தை வழங்குகிறது. குறுகிய கால திட்டங்களானது கூடுதல் வருவாய், புதிதாக வருவாயை உருவாக்குதல், வருமானம் ஈடுவதற்கான புதிய வழிகளை உருவாக்குதல் போன்றவற்றிக்கு உதவுகிறது. லேபர்நெட் சுய வேலைவாய்ப்புகள், குழு வேலை வாய்ப்புகள் மற்றும் ஊதிய வேலைவாய்ப்புகளை சாத்தியப்படுத்தி வேலைவாய்ப்புகளும் தொழில்முனைவும் உருவாக உதவுகிறது. இதனால் மக்கள் பணி தேடி கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்வது குறைகிறது.

தொழில்முனைவு வாயிலாக பணி வாய்ப்புகள்

தற்போது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தொழில்முனைவு பெரிதும் உதவுகிறது. அதிக வேலை வாய்ப்பை உருவாக்க தொழில்முனைவு உதவும். 2020-ம் ஆண்டில் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை 900 மில்லியனாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. வாழ்வாதார மையங்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் விரிவடைந்து அங்குள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சியளிப்பதன் மூலம் சமூக பொறுப்பு நடவடிக்கைகள் வாயிலாக சமூகத்தில் தாக்கதை ஏற்படுத்துகிறது. தொழில் பயிற்சி, ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டல், ஸ்டார்ட் அப்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் போன்றவற்றை வழங்குகிறது இந்த மையம். அத்துடன் நிதி மற்றும் டிஜிட்டல் அறிவு, வணிக திட்டமிடல், நிதி உதவி ஆகியவற்றை அணுக உதவுகிறது.

பணிபுரிய தயார்நிலையில் இருக்கும் தொழிலாளர்களை உருவாக்குதல்

லேபர்நெட் பல அமைப்புகளுடன் பார்ட்னர்ஷிப்பில் இணைந்து பல்வேறு திறன் வளர்ச்சி முயற்சிகள் மூலம் தரமான பயிற்சியளித்து முறைசாரா துறைக்கு அதிகாரமளிக்க விரும்புகிறது. ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு முழு நேர அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பிற்கு உதவி வழங்கப்படும். தொழில் சான்றிதழ்கள் வழங்கி கூடுதல் திறன் அளிக்கப்படும். பல்வேறு திறன்களை வழங்கக்கூடிய ஐடிஐ-க்களை அமைக்கவும், தற்போதையை ஐடிஐக்களை பிபிபி மாதிரி மூலம் நவீனப்படுத்தவும் உதவுகிறது. 

உற்பத்தி, நடத்தையில் மாற்றம், சந்தையை ஊடுருவுதல், ஒதுக்குப்புறமான சில பகுதிகளுக்கு திறன்பெற்ற ஊழியர்களை வழங்குதல், செலவுகளை குறைத்தல் போன்ற பகுதிகளில் கார்ப்பரேட் ஊழியர்கள் பயிற்சிபெற உதவுகிறது. முறைசாரா பிரிவைச் சேர்ந்த ஊழியர் பயிற்சி மற்றும் சான்றிதழ் பெறுவதை இந்த பயிற்சி வகுப்புகள் உறுதிசெய்கிறது. இதனால் உற்பத்தி அதிகரித்து, கார்ப்பரேட்களின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருக்கும் அலுவலகத்திற்கு திறன்பெற்ற ஊழியர்களையும் வழங்குகிறது லேபர்நெட்.

இணையதள முகவரி: LabourNet

Add to
Shares
186
Comments
Share This
Add to
Shares
186
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக