மதுரையில் 'ஸ்டார்ட் அப் பயணம்'- இளம் தொழில் முனைவோருக்கு ஓர் புதிய அனுபவம்!
மதுரையைச் சேர்ந்த பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியின் 'இன்குபேஷன் செல்' (Incubation cell), தொடக்க நிறுவனங்களை பார்வையிடுவதற்கான “ஸ்டார்டப் பயணம்” (Startup Payanam) எனும் பேருந்து பயண திட்டத்தை வருகிற ஜூலை 9 ஆம் தேதி நடத்த திட்டமிஎட்டுள்ளது. இப்பயணத்தில் தொழில்முனைவோர் ஆக விருப்பமுள்ள மாணவர்களும், இளம் தொழில்முனைவர்களும், மதுரை மாநகரில் அமைந்துள்ள ஸ்டார்ட் அப் அலுவலகங்களுக்குச் சென்று பயன் பெற உள்ளனர். இது முழுக்க முழுக்க மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காகவே தொடங்கப்பட்ட விழிப்புணர்வு முயற்சியாகும்.
இன்றைய காலகட்டங்களில் ஆர்வமுள்ள பல தொழில்முனைவர்கள், சமூக வளைதளங்கள் மற்றும் ஆன்லைன் வெளியீடுகளில்தான் அதிக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றி கேட்டும், படித்தும் தெரிந்து கொள்கிறார்கள்.

உண்மையான ஸ்டார்ட் அப் பற்றிய முழு விவரங்களை அவர்களுக்கு அனுபவம் மூலமாக பெற்றுத்தருவதே ஸ்டார்ட் அப் பயணத்தின் லட்சியம் ஆகும். இதில் தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள், உத்திகள், சிக்கல்களிலிருந்து மீண்டு வரும் அனுபவங்கள் பற்றிய விவரங்களும் விளக்கப்படும். இது ஆர்வமுள்ள தொழில்முனைவர்களை ஊக்குவித்து, தொழில்முனைவுச் சூழலின் நன்மைகளைப் பற்றி நேர்மையாக வெளிப்படுத்தும் ஸ்டார்ட் அப் சமுதாயத்தின் ஒரு முயற்சியாகும்.
"ஸ்டார்ட் அப் பயணம்" என்றால் என்ன?
6 சக்கரங்கள் | 7 தொடக்கங்கள் | 42 பயணிகள்
ஒரு மனிதன் தன் இலக்கை அடைய, சில கரடு முரடான சாலைகள், குறுகிய பாதைகள், வேகத்தடைகள், போக்குவரத்து குறிகளை கடக்க வேண்டியது இருக்கும். இலக்கை விட இலக்கை அடைவதற்கான பயணமே முக்கியமாகும். ஸ்டார்ட் அப் பயணத்தின் இலக்கும் அதுவே. அனுபவசாலிகளிடம் நேரடியாகச் சென்று அவர்களின் தொழில்முனைவுப் பயணத்தை பற்றிய முழு விவரங்களை அவரை நேரடியாக பார்த்தும் கேட்டும் கற்றுக்கொள்ளலாம்.
இந்திய இளைஞர்களுக்கு மத்தியில் தொழில் முனைவுக் குறித்தான எண்ணங்களை ஊக்குவிக்கும் முயற்சியே இந்தப் பயணம். இப்பயணத்தின் பங்கேற்பாளர்களை, புதிதாக மலரக்கூடிய பல நிறுவனங்கள் மற்றும் நிறுவப்பட்டு வெற்றிகரமாக இயங்கும் பல நிறுவனங்களுக்கு, ஒரு நாள் சுற்றுப்பயணமாக கொண்டு செல்வதே ஸ்டார்ட் அப் பயணத்தின் திட்டம் ஆகும்.
பயண அட்டவணை:
1. காலை 9 மணி: பெரியார் பஸ் நிலையத்தில் நிற்கக்கூடிய ஸ்டார்ட் அப் பயணப் பேருந்தில் பங்கேற்பாளர்கள் ஏறிய பிறகு, பயணம் இனிதே தொடங்கும்!
2. 10 மணி: பேருந்து 'ரெயின் ஸ்டாக்' ஸ்டார்ட் அப் நிறுவனத்தை அடையும். அதன் நிறுவனர் சக்திவேல் தனது தொழில்முனைவு பயணத்தைப் பற்றி பங்கேற்பாளர்களிடம் அவரது அலுவலகத்தில் இருந்து பகிர்ந்து கொள்வார்.
3. 10.30 மணி: அடுத்த நிறுத்தத்திற்கு செல்ல பேருந்து புறப்படும். மதுரை ஸ்டார்ட் அப் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் மற்றும் பிரதீப் தங்களது ஸ்டார்ட் அப் பயணத்தை பங்கேற்பாளர்கள் TCE இல் பகிர்ந்து கொள்வர்.
4. Buddies Cafe நிறுவனர் நிர்மல் மற்றும் VEclean ராஜேஷுடன் பேருந்தில் பயணம்.
5. மதியம் 1.00: மதிய உணவுக்கு பேருந்து 'ஷால் பார்ம்' வந்தடையும்.
6. மதியம் 1.30: தொழில்முனைவர் ஜெயபால முருகன் தனது அனுபவத்தை அங்கிருந்தே பகிர்ந்து கொள்வார்.
7. Foodly விஜய்ராஜ் மற்றும் போதி ட்ரீ ஸ்கில்ஸ் அஸ்வீதா உடன் பயணம் தொடரும்.
8. மதியம் 3.00: பேருந்து அடுத்து கிட்ஸ் கராஜ்- அய்யர் பங்களா செல்லும். அங்கு மென்ட்டருடன் தனித்தனி அமர்வு தொழில்முனைவோருக்கு நடைபெறும்.
9. மாலை 4.30: தொடங்கிய இடத்தில் அன்றைய ஸ்டார்ட் அப் பயணம் நிறைவு பெறும், ஆனால பலரது தொழில்முனைவு பயணம் அன்றே தொடங்கும்...
விருப்பமுள்ள மாணவர்களும் தொழில்முனைவர்களும் இந்த பயணத்தில் கலந்து கொள்ள தொடர்பு கொள்ள: P.KARUPPANAN -AP /IT, Incubation Centre , Pandian Saraswathi Yadav Engineering College , Madurai - SIvagangai Highway , Arasanoor. Ph: 09994080430 WHATSAPP : 9994080430