பதிப்புகளில்

பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் திரட்டப்படும் கறுப்பு பணம், வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்!

28th Dec 2016
Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share

பிரதம மந்திரி ஏழைகள் நலத்திட்டம் 2016 (Pradhan Mantri Garib Kalyan Yojana 2016) க்கான வரிவிதிப்பு மற்றும் முதலீட்டு ஆட்சிமுறை குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின் படி, இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக திரட்டப்பட்ட கறுப்பு பணத்தை வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்துவதாகும்.

image


பிரதம மந்திரி ஏழைகள் நலத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்

* இத்திட்டத்தின் கீழ் எந்த ஒரு நபரும் ரொக்க வடிவிலோ அல்லது முதலீடாகவோ, ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949ன் விதிமுறைகளுக்குப் பொருந்தும் கூட்டுறவு வங்கிகள், தலைமை அஞ்சல் அலுவலகம் அல்லது துணை-அஞ்சல் அலுவலகம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்திலும் உள்ள தனது கணக்கில் காட்டப்படாத வருமானத்தை அறிவிக்கலாம்.

* கணக்கில் காட்டப்படாத ரொக்கம் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30, 2016 க்குள் அத்தொகையினை வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம், 1949 பொருந்தும் வங்கிகளிலோ, தலைமை அஞ்சல் அலுவலகம் அல்லது துணை-அஞ்சல் அலுவலகத்திலோ முதலீடு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.

* இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கும் அறிவிப்பாளர் தனது கணக்கில் காட்டப்படாத வருமானத்தில் 30 சதவீதம் வரி, வரியில் 33 சதவீதம் கூடுதல் வரி, மற்றும் மறைக்கப்பட்ட வருமானத்தில் 10 சதவீதம் அபராதம் உட்பட மொத்தம் 49.9 சதவீதம் செலுத்த வேண்டும்.

* மேலும் இத்திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டாத வருமானத்தின் 25 சதவீத தொகையை பிரதம மந்திரி ஏழைகள் நல முதலீட்டுத் திட்டத்தின் (Pradhan Mantri Garib Kalyan Deposit Scheme 2016) கீழ் கட்டாய வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். அத்தொகையானது நான்கு ஆண்டுகள் காலத்திற்கு முதலீடு செய்யப்பட வேண்டும். அவ்விதமான வைப்பீட்டிற்கு வட்டி எதுவும் வழங்கப்பட மாட்டாது.

* 31 மார்ச் 2017 இன் படியான கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத ரொக்கம் அல்லது வைப்புகள் பற்றி அங்கீகரிக்கப்பட்ட படிவத்தில் அறிவிப்பு செய்ய வேண்டும். பிரதம மந்திரி ஏழைகள் நல முதலீட்டுத் திட்டத்தில் செய்யப்படும் 25% வைப்புத் தொகைக்கான அத்தாட்சி, வரி, கூடுதல் வரி, மற்றும் அபராதம் (மொத்தம் 49.9%) செலுத்தியதற்கான அத்தாட்சியுடன் இணைக்கப்பட வேண்டும்.

* இத்திட்டத்தின் கீழ் தெரிவிக்கப்படும் வருமானம் எந்த ஒரு மதிப்பீட்டு ஆண்டுக்கும் வருமானவரிச் சட்டத்தின் கீழ் அறிவிப்பாளரின் மொத்த வருமானத்தில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.

இத்திட்டத்தின் வரம்பிற்குள் வர இயலாதவர்கள்:

* COFEPOSA 1974 சட்டத்தின் கீழ் கைது ஆணை பிறப்பிக்கப் பட்டவர்கள்.

* 1991-92 பங்கு பத்திர ஊழல் தொடர்பாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள்.

* IPC சட்டம் 1860 இன் அத்தியாயம் IX அல்லது அத்தியாயம் XVII, NDPS சட்டம் 1974, சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967, ஊழல் தடுப்புச் சட்டம், 1988, பினாமி சொத்து பரிவர்த்தனைகள் தடுப்பு சட்டம், 1988, பண மோசடி தடுப்புச் சட்டம் 2002 (PMLA 2002) இன் கீழ் தண்டனைக்கு உள்ளாக நேரிடுவோர்.

* வெளிக்காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள்.

திட்டத்தின் கீழ் அறிவிப்பு செய்ய தவற விடுவதின் பின்விளைவுகள்:

* இத்திட்டத்தின் கீழ் வர விரும்பாத நபர், மதிப்பீட்டு ஆண்டு 2017-18 முதல் வரிப்படிவத்தில் அத்தகைய கணக்கில் காட்டப்படாத ரொக்கம் அல்லது வைப்புநிதியை தெரிவிக்கலாம். ஆனால், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் அல்லது வைப்புநிதியின் 60%, வரி மற்றும் கூடுதல் வரி சேர்த்து 77.25% செலுத்த நேரிடும்.

* அவ்வாறு 2017-18 கணக்கீட்டு ஆண்டு முதல் ஒருவர் தானாக கணக்கில் காட்டப்படாத வருமானத்தை தெரிவிக்காத நிலையில், பின்னர் வருமான வரித்துறை ஆய்வின்போது அதனை கண்டு பிடித்தால் 60% வரி மற்றும் கூடுதல் வரி மற்றும் செஸ் தவிர்த்து 10% அபராதம் என்று மொத்தமாக 83.25% வரி செலுத்துவதோடு பொருளாதார குற்றங்களுக்கான சட்ட நடவடிக்கையையும் எதிர் கொள்ள நேரிடும்.

* மேற்கண்ட எந்த முறையிலும் ஒருவரின் கணக்கில் காட்டப்படாத வருமானம் வெளிப்படாமல் பின்னர் வருமான வரித்துறை சோதனையின்போது, அதனை கண்டு பிடித்தால் 77.25% வரியைத் தவிர்த்து 30% அல்லது 60% வரை அபராதம் (ஒருவர் வரித்துறைக்கு தரும் ஒத்துழைப்பை பொறுத்து) விதிக்கப்படும். இந்நிலையில், அவர் செலுத்தும் வரி மற்றும் அபராதமானது அவரது வருமானத்தில் 107.25 அல்லது 137.25 சதவீதமாக இருக்கும்.

Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக