பதிப்புகளில்

முதியோர்களுக்கு பயன்படும் 5 முக்கிய செயலிகள்!

3rd Nov 2016
Add to
Shares
54
Comments
Share This
Add to
Shares
54
Comments
Share

என் தாத்தா பெருமைக்குரிய மனிதர். அவர் இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது வாழ்ந்தவர். பலமுறை நாட்டிற்காக குரல் எழுப்பியும் உள்ளார். அவர் தன் நினைவலைகளை அவ்வப்போது என்னிடம் பகிர்ந்து கொள்வார். அந்த கால ஓட்டக்காலனாவை பற்றி பெருமையோடு பேசி மகிழ்வார். அவர் மெத்த படித்தவரும் கூட. தான் சேகரித்து வைத்துள்ள பழைய புகைப்படங்களையும், கடிதங்களையும் தன் பேரன், பேத்திகளிடம் காட்டி பழைய கதையை பேசுவதை வழக்கமாக கொண்டவர். 

ஆனால் தற்போது அவரது பேரன், பேத்திகள் பல கண்டங்களில் தங்களின் கல்விக்காகவும், வாழ்வில் செட்டில் ஆகவும் சென்றுவிட்டனர். அவரால் முன்பை போல் அவர்களோடு தினமும் தன் கதைகளை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. போன் மூலம், கடிதம் மூலம் தொடர்பு கொள்வதெல்லாம் இப்போது நடைமுறையில் பழைய பேஷன் ஆகிவிட்டது. எல்லாம் டிஜிட்டல் மயமாகியுள்ள இக்காலக்கட்டத்தில் அவரை போன்ற வயதான முதியோர்களின் பாடு திண்டாட்டமாகி விட்டது. ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் மட்டுமே ஒருவரால் மற்றவரை தொடர்பு கொள்ளமுடியும் என்ற நிலையே உள்ளது. அதனால் என் தாத்தாவுக்கு ஸ்மார்ட் போன் ஒன்றை பரிசாக வழங்கினோம். அதை எப்படி எல்லாம் உபயோகிக்க முடியும் என்று அவர் என்னிடம் கேட்டு நோட்ஸ் குறித்து வைத்துள்ளார். 

அதன் பலன், இதோ இன்று என்னோடு ஒரு மணி நேரம் வாட்ஸ் அப்’ காலில் பேசி தன் டிஜிட்டல் பிரவேசத்தை செய்தார் என் தாத்தா. இது அவருக்கானது மட்டுமல்ல, தற்போதைய காலத்தில் வாழும் முதியோர்கள் அனைவரும் ஸ்மார்ட் போனின் பயன்கள், அவர்களுக்கேற்ற ஆப்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மூலம் தங்கள் அன்பானவர்களோடு தொடர்பில் இருக்க முடியும். நாமும் நம் வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் செயலிகளின் பயன்பாட்டை கற்றுத்தந்து அவர்களது வாழ்வை இனிமையாக்குவோம். 

image


முதியோர்களுக்கு பயன் தரக்கூடிய சில ஆப்’ களை நாங்கள் பட்டியிலிட்டுள்ளோம்: 

ஸ்கைப் (Skype) : ஆண்ட்ராய்ட்- 4.1/5, ஐஓஎஸ் -4/5

’ஸ்கைப்’ முதியோர்களுக்கு மிக அவசியமான ஒரு ஆப் என்று சொல்லமுடியும். பிள்ளைகள், பேரன், பேத்திகள் உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்தாலும் சுலபமாக அவர்களுடன் தொடர்பு கொண்டு முகத்தை கண்டு பேச முடிந்த ஆப் இது. வெளிநாடுகளின் வாழும் குடும்பத்தினர் வருடத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை மட்டும் சொந்த நாட்டை எட்டிப் பார்க்கமுடிந்த சூழலில், ஸ்கைப் மூலம் இலவசமாக தினமும் கூட பேசி தொடர்பு கொள்ளமுடியும் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். இதில் உள்ள இலவச வீடியோ கால் பற்றி விளக்கிவிட்டால், முதியோர்கள் தங்களின் அன்பானவர்களுக்கு டயல் செய்து வேண்டியபோது, அவர்களின் முகத்தை பார்த்து, பேசி நேரத்தை கழிக்கமுடியும். அதற்கு அவர்களுக்கு ஒரு அகவுண்டை தொடங்க உதவுங்கள், கால் செய்ய, வீடியோ, ஆடியோ செயல்பட என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று ஒரு முறை கற்றுக்கொடுங்கள் போதும், அடுத்த முறை அவர்களே உங்களை அசத்திவிடுவார்கள். 

’மெடிசேப்’ (MediSafe): ஆண்ட்ராய்ட்- 4.5/5, ஐஓஎஸ்- 4.5/5

பொதுவாகவே வயது கூட கூட மறதியும் கூடும் என்பது இயற்கை. சிறிய விஷயங்களைக் கூட மறந்து போகவைத்துவிடும் வயோதிகம். கண்ணாடி எங்கு வைத்தோம், போனை எங்கே காணும், எந்த மருந்தை சாப்பிடவேண்டும்? என்று தினம் தினம் குழப்பம் ஏற்படும். இதற்கு உதவுவதே MediSafe App. இது முதியோரின் உதவியாளன் போல் இயங்கும். இந்த செயலியில் மருந்து பற்றிய தகவல், எந்த நேரத்தில் உட்கொள்ளவேண்டும், என்ன உணவை எப்போது சாப்பிடவேண்டும் என்றெல்லாம் பதிந்துவிட்டால்போதும், அது அவ்வப்போது அலாரம் அடித்து வயதானோருக்கு உதவி செய்யும். குறிப்பாக மருத்துவ உதவிகள் அனைத்தையும் MediSafe செய்துவிடும். 

’லுமினோசிட்டி’ (Lumosity): ஆண்ட்ராய்ட்- 4.1/5, ஐஓஎஸ்- 4/5

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் முதியோர்களின் செல்ல ஆப் இது என்றே சொல்லவேண்டும். இதற்கு அவர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. முதியோர்களுக்கு வரும் அல்சீமர், டிமென்ஷியா போன்ற மறதி வியாதிகள் வராமல் தடுக்க உதவும் ஆப் இது. கேள்விகள், விளையாட்டுகள், புதிர்கள் என்று பல விதங்களின் ஒருவரது மூளையை வேகமாக இயங்கவைக்க உதவும் ஆப். பொழுதுபோக்கவும், அதே சமயம் வயதான காலத்தில் தங்களின் மூளைக்கு வேலை தரவும் இது உதவுவதால் முதியோர்கள் இந்த ஆப்பை விரும்பி பதிவிறக்கம் செய்கின்றனர். 

ஆடிபில் (Audible): ஆண்ட்ராய்ட்- 4.3/5, ஐஓஎஸ்- 5/5

வயதானவர்களுக்கு அடுத்து ஏற்படும் பிரச்சனை கண் பார்வை கோளாறு. காடராக்ட் அறுவை சிகிச்சை தேவை வந்துவிடுகிறது. சிறிய எழுத்துக்களை படிக்கமுடியாமல் தவிக்கும் முதியோர்களுக்கு கணினி மற்றும் போன்களில் உள்ள சிறு எழுத்துக்களை படிக்க முடியாமல் போய்விடுகிறது. புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ள வயதானோருக்கு இது ஒரு பெரிய பிரச்சனை. இதற்கு தீர்வு அளிப்பதே Audible ஆப். இதில் 1,80000 புத்தகங்கள் ஆடியோ வடிவில் உள்ளது. மூக்குக்கண்ணாடியை தேடுவதை விட்டு, இதில் உள்ள ஆடியோ கதைகளை போட்டு கேட்டு மகிழலாம் முதியோர்கள். 

கலோரி கெளண்டர் (Calorie Counter): அண்ட்ராய்ட்- 4.6/5, ஐஓஎஸ்- 4.5/5

வயதானாலே ஸ்வீட் தின்ன ஆசையும் வந்துவிடும். சாக்லேட், கேக் என்று குழந்தைகளை போல அடிக்கடி சாப்பிட தோன்றும். ஆனால் சர்க்கரை வியாதி, இதய பிரச்சனை, உடல் பருமன் போன்ற ஆபத்துகள் உள்ள நிலையில் முதியோர்கள் இனிப்பு சாப்பிடுவது நல்லதல்ல. அதனால் சீனியர் சிட்டிசன்கள் தாங்கள் தினமும் உட்கொள்ளும் உணவில் கலோரிகளை தெரிந்து கொண்டு அதற்கேற்ப டயட்டை வைத்து கொள்வது சிறந்தது. கலோரி கெளண்டர், ஒருவரது கலோரி கணக்கு, உடல் எடை என்ன என்பதை கண்காணித்து அவ்வப்போது எச்சரிக்கும் ஒரு ஆப். ஒரு நாளைக்கு உட்கொண்டுள்ள கலோரி கணக்கை பார்த்து அடுத்த நாள் அதை சரிசெய்து கொள்ள முடிவதால் முதியோர்களின் உடல்நலத்தை ஓரளவு பாதுகாப்பாக வைக்க முடியும். 

வயதான வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், மனதை உற்சாகத்துடனும் வைக்க உதவும் இந்த ஆப்களை முதியோர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை உற்சாகமாக்கிடுங்கள். 

ஆங்கில கட்டுரையாளர்: சஞ்சனா ரே


Add to
Shares
54
Comments
Share This
Add to
Shares
54
Comments
Share
Report an issue
Authors

Related Tags