பதிப்புகளில்

’சுயசக்தி விருதுகள் 2018’: விண்ணப்பங்கள் வரவேற்பு!

5th Jun 2018
Add to
Shares
144
Comments
Share This
Add to
Shares
144
Comments
Share

வீட்டிலிருந்தே தொழில் செய்யும் / பகுதி நேரமாக தொழில் செய்யும் பெண் தொழில் முனைவோர்களை கெளரவிக்கும் ‘சுயசக்தி விருதுகள்’ இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட இவ்விருதின் இரண்டாம் பதிப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது. 

www.homepreneurawards.com / www.suyasakthi.com என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 6, 2018க்குள் வீட்டில் இருந்து தொழில் செய்யும் ‘ஹோம்ப்ரூனர்’ என அழைக்கப்படும் பெண் தொழில்முனைவோர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விருது வழங்கும் விழா, சென்னையில் ஆகஸ்ட் 5, 2018 அன்று இசை, மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைபெறும் என்று ‘சுயசக்தி விருதுகளை நடத்தும் ’பிராண்ட் அவதார்’ எனும் நிறுவனம் அறிவித்துள்ளது.

image


10 பல்வேறு தொழில் பிரிவுகளின் கீழ் மகளிர் தொழில் முனைவோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு அவர்களின் தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைகளும் நிதி உதவியும் வழங்கப்படும்.

நேற்று சென்னையில் ‘சுயசக்தி விருதுகள்’18’ அறிமுக விழாவில், தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சி, பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளுக்கான விண்ணப்ப அறிவிப்பை அறிமுகம் செய்தார். கர்நாடக இசை பாடகர் சுதா ரகுநாதன் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.

அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பாண்டியராஜன்,

“நம் நாட்டில் வாழும் குடும்பங்களில் உள்ள பல பெண்கள் வீட்டில் இருந்து தொழில் புரிந்து வருவாய் ஈட்டுகின்றனர். இதனை எல்லாம் இந்திய பொருளாதார ஜிடிபி-ல் சேர்த்து கணக்கிட்டால் நம் ஜிடிபி இரண்டு மடங்காக உயர்ந்து காட்சியளிக்கும்,” என்றார்.

மேலும் வெளிச்சத்துக்கு வராத தமிழ்நாட்டு கடைக்கோடியில் வசிக்கும் பெண் தொழில் முனைவர்கள் அங்கீகரிக்கப்பட்டால் அதுவே இவ்விருதுகளின் வெற்றி என்றார். நிகச்சியில் சிறப்புரை ஆற்றிய பாடகி சுதா ரகுனாதன், பெண்மையை போற்றும் பாரதியாரின் பாடல் ஒன்றை பாடினார்.

கடந்த ஆண்டில் முதன்முதலாக இவ்விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவ்விழாவின் மிகப்பெரும் வெற்றியினை தொடர்ந்து தற்போது 2018ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

நேச்சுரல்ஸ் சலூன் முன்னெடுத்து நடத்தும் ‘சுயசக்தி விருதுகள்’ விழா, அதன் இணை நிறுவனர் சி.கே.குமாரவேலின் கனவு பிராஜக்ட் என விழாவில் தெரிவித்தனர். பெண்கள் சுயமாக முன்னேறி சாதிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் அவர்களை தொழில் முனைவில் ஊக்கப்படுத்தும் சி.கே.குமாரவேல் இவ்விருதுகள் மூலம் பல பெண்களின் வெற்றி வெளியுலகிற்கு தெரிய வரும் என்றார். 

“பெண்களின் தனித்திறன்களை ஊக்குவித்து அவர்களை நிதி சுதந்திரம் பெற்றவர்களாக ஆக்கி அவர்களுக்கு மேலும் வலுவூட்டும் நோக்கத்துடன் சுயசக்தி விருதுகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பெண்ணின் கனவும் முக்கியமானது. அதை அடுத்தக்கட்டத்திற்கு நாங்கள் எடுத்துச் செல்வோம். அதற்கு சுயசக்தி விருது மேடையாக அமையும்,” என்றார்.
இடது: ஹேமசந்திரன், வலது: சி.கே.குமாரவேல்

இடது: ஹேமசந்திரன், வலது: சி.கே.குமாரவேல்


அவரை தொடர்ந்து பேசிய இவ்விருது விழாவை நடத்திக் கொடுக்கும் பிராண்ட் அவதார் நிறுவனத்தின் நிறுவனர், எல்.ஹேமசந்திரன், "பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கும்போது பல்வேறு காரணங்களை முன்னிட்டு நிறைய சவால்களுக்கும் போராட்டங்களுக்கும் உள்ளாகின்றனர். அவற்றை எதிர்கொண்டு தங்களின் மன உறுதியால் வெற்றி பெறும் இத்தகைய பெண்கள் ஒருபோதும் அங்கீகரிக்கபடுவதில்லை. அந்த நிலையை மாற்றும் நோக்கத்துடன் சுயசக்தி விருதுகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன, என்றார். மேலும்,

”கடந்த ஆண்டு விருதுக்கு சுமார் 4328 விண்ணப்பங்கள் தமிழகமெங்கிலும் இருந்து வந்தது. அதில் 68% பெண்கள் திருமணத்துக்கு பின் வீட்டில் இருந்து தொழில் புரிந்து வருவாய் ஈட்டும் ஹோம்ப்ரூனர்களாக இருந்தனர். தேர்வு செய்யப்பட்ட 9 பெண் தொழில்முனைவர்களுக்கு நிதி உதவியும், வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது,” என்றார்.

தெரிவு முறை:

தகுதியுள்ள பெண் தொழில் முனைவோர் www.homepreneurawards.com / www.suyasakthi.com என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 6, 2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருது வழங்கும் அமைப்பாளர்கள் மற்றும் தகுதி சான்ற தெரிவு குழு உறுப்பினர்கள், இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதி பெறுவோரை தெரிவு செய்வர். பல்வேறு மதிப்பீட்டு கூறுகளின் அடிப்படையில் சுயசக்தி விருதுகளை பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பெருமைமிகு நடுவர் குழு:

பல்வேறு தொழில் துறைகளில் புகழ்பெற்ற மகளிர் வல்லுநர்கள் ஒவ்வொரு துறைக்கான விருதுக்கு தகுதி பெறுவோரை நேர்காணல் நடத்தி தேர்ந்தெடுப்பர். வீனா குமாரவேல் - நேச்சுரல்ஸ் நிறுவனர், ரோகிணி மணியன் - முதன்மை நிர்வாக அலுவலர், குளோபல் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் சர்வீசஸ், அருணா சுப்ரமணியம் - பூமிகா அறக்கட்டளையின் அறங்காவலர், டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் - நிறுவனர்-தலைவர், அவதார் கேரியர் கிரியேட்டர்ஸ், ரிங்கு மேச்சேரி - சமூக தொழில் முனைவர், லதா ராஜன் – நிறுவனர், மாஃபாய் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டன்ட்ஸ், கீதா நாகு – மேலாண் இயக்குநர், வீ.என்.சி.டி வென்ச்சர்ஸ், நினா ரெட்டி - மேலாண் இயக்குநர், சவேரா ஓட்டல், புஷ்கர் காயத்ரி - தமிழ் திரைப்பட இயக்குநர், பூர்ணிமா ராமசாமி - ஆடை வடிவமைப்பு வல்லுநர் மற்றும் தொழில் முனைவர், சுசிலா ரவீந்தரநாத் - மூத்த பத்திரிக்கையாளர் ஆகியோர் நடுவர் குழு உறுப்பினர்கள் ஆவர்.

பெண்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் தனித்துவமிக்க தளம்:

இந்தியாவிலேயே முதன்முறையாக வீட்டிலிருந்து தொழில் செய்யும் பெண்களின் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை ஊக்குவித்து பாராட்டும் நோக்கத்துடன், வணிக நிறுவனங்களுக்கான நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான பிராண்ட் அவதார் ’சுயசக்தி விருதுகளை’ நடத்துகிறது.

10 தொழில் தலைப்புகளில் அதாவது, வேளாண்மை, நலவாழ்வு, வீட்டு தேவை பொருட்களுக்கான சில்லறை விற்பனை, கலைப் பண்பாடு, விளையாட்டு மற்றும் உடற்கட்டு, உணவு மற்றும் பானங்கள், அழகுக்கலை மற்றும் ஆரோக்கியம், கல்வி - இலக்கியம், ஊடகம் - பொழுதுபோக்கு, சமூக செயல்பாடு / மகளிர் தொண்டு நிறுவனம் / சுய உதவி குழுக்கள் / மாற்று திறனாளிகள் ஆகிய பிரிவுகளில் தகுதி பெறுவோர் தெரிவு செய்யப்படுவர்.

விருதுக்கு தகுதி பெறுவோரின் புதுமைக் கருத்துகள் மற்றும் அவர்களின் வணிகத்தின் மூலம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்பட்ட பயன்கள் போன்ற பல்வேறு கூறுகளை அடிப்படையாக வைத்து, நடுவர் குழு, சிறப்பாக செயலாற்றும் தகுதியுடையோரை இவ்விருதுகளுக்கு தேர்வு செய்யும்.

தொழில் முனைவுக்கான அறிவுரை, வழிக்காட்டல் மற்றும் முன்னேற்றத்திற்கான ஆதரவு:

தகுதி உள்ளவரை தேர்வு செய்து விருதுகள் வழங்குவது மட்டுமின்றி, ஒரு சில விண்ணப்பதாரர்களுக்கு தொழில் முனைவு வழிகாட்டல் மற்றும் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதற்கான நிதி உதவி ஆகியவை டை-சென்னை (Tie-Chennai) போன்ற ஏஞ்சல் இன்வெஸ்டார்ஸ் (Angel Investors) மற்றும் பிற தொழில் நிபுணர்களிடமிருந்து பெற வாய்ப்புகள் அளிக்கப்படும்.

பிராண்ட் அவதார் நிறுவனம் விருது பெற்றவர்களுக்கு உரிய தொழில் மேம்பாட்டுக்கான முதலீடுகளை பெறுவதற்கான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். எனினும், முதலீடு அளிக்கும் நிறுவனங்களின் விருப்பத்தின் படியே அவர்களுக்கான நிதியுதவி / வழிகாட்டல் நெறிமுறை வழங்கப்படும்.

image


சுயசக்தி விருதுகள் 2017 - சிறப்புக் குறிப்புகள் மற்றும் ஆய்வு முடிவுகள்:

2017ஆம் ஆண்டுக்கான சுயசக்தி விருதுகளுக்காக மாநிலம் முழுவதிலிருந்தும் 4328 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மகளிர் தொழில்முனைவோரிடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விருதுகள் பெரும் வரவேற்பு பெற்றன. இவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்து முதல் சுற்றில் 162 விண்ணப்பத்தாரர்கள் நடுவர் குழுவின் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இறுதிச்சுற்றில் 14 வகைப்பாடுகளில், 50 பெண் தொழில் முனைவோர் சுயசக்தி விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில், தொழில் தன்மை, சந்தித்த சவால்கள், வெற்றி மனபாங்கு, தலைமை பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் விருதாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

விருதுகளுக்கு விண்ணப்பித்தோரின் கருத்துகளை அறிவதற்கான கள ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சுயசக்தி விருது நிகழ்ச்சியானது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், தனித்துவமிக்க ஒரு நிகழ்ச்சியென அவர்கள் தங்கள் கருத்தாய்வில் தெரிவித்தனர்.

இக்கள ஆய்வின் கருத்துகளில் பங்கேற்ற 75% பேர் வீட்டிலிருந்து தொழில் செய்வோர்க்கு ஒத்திசைவான சூழலும் அதற்கேற்ற வழிகாட்டுதலும் இல்லை எனத் தெரிவித்திருந்தனர். 82% பங்கேற்பாளர்கள் அவர்களுடைய வணிகத்தை வளர்த்தெடுப்பதற்கு நிதியுதவி, வழிக்காட்டல், முதலீடு ஆகியவை பெரிதும் உதவும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

சுயசக்தி விருதுகளுக்கு விண்ணப்பிக்க: Suyasakthi 

Add to
Shares
144
Comments
Share This
Add to
Shares
144
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக