பதிப்புகளில்

சச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்!

YS TEAM TAMIL
26th Apr 2018
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share

இந்தியா போன்ற நாட்டில் சாதி, சமயம், பாலினம், இனம் என பல பிரிவினைகள் இருப்பினும் ஒரு சில சிறப்பான விஷயங்கள் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துவிடும். அந்தப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் விஷயங்களில் ஒன்றுதான் கிரிக்கெட். இந்த விளையாட்டில் மிகவும் பிரபலமானவர் சச்சின் டெண்டுல்கர். இவர் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாகவே பார்க்கப்படுகிறார். 

அவரது 25 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் கிரிக்கெட் ஆர்வலர்களை பெரிதும் கவர்ந்துள்ளார். கிரிக்கெட் களத்தில் அவரது அசாதாரண பணியைப் போன்றே சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற அவரது தீவிர ஆர்வமும் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

image


இந்த பிரபலம் களத்தில் ஆடியதைத் தாண்டி சமூக நலனில் பங்களித்தது குறித்து இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது திறனை மட்டுமல்லாது அவரது குணாதிசயத்தையும் கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியாது.

நன்கொடைக்காக பேட்டிங் செய்தார்

சச்சின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். அவர் அடித்த சதங்களில் மிர்பூரில் உள்ள ஷெரே பங்களா ஸ்டேடியத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடி அடித்த சதம் பெரிதும் கொண்டாடப்பட்டது. எந்த கிரிக்கெட் வீரரும் நூறு முறை சதம் அடித்தில்லை என்பதால் இந்த ஸ்கோர் சர்வதேச கிரிக்கெட்டில் மைல்கல்லாக அமைந்தது. அவரது வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் அந்த விளையாட்டில் பயன்படுத்திய அவரது பேட்டை ஏலத்தில் விட்டு அதிலிருந்து பெறப்பட்ட தொகையை நன்கொடையாக வழங்கினார்.

மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

சச்சின் ஒவ்வொரு ஆண்டும் தனது மகள் சாராவின் பிறந்தநாளை மும்பையில் உள்ள குடிசைப்பகுதியில் கொண்டாடுகிறார். இந்த செயலும் அவர் சமூகத்தின் மேல் கொண்டுள்ள அக்கறையையே காட்டுகிறது. டிஎன்ஏ-வின் செய்தி ஒன்றில் சச்சின் குறிப்பிடுகையில்,

”என் மகள் என்னை சிந்திக்கவைத்தார். பலர் பணத்தை நன்கொடையாக வழங்குகையில் உங்களது நேரத்தை செலவிடுவது மிகப்பெரிய பரிசு என நினைத்தேன். ஆகவே குழந்தைகளுக்கான அரை நாள் பயிற்சி முகாமை ஒரு அரசு சாரா நிறுவனம் சார்பில் eBay-வில் ஏலமிட தீர்மானித்தேன். என் மகள் சாராதான் நான் தொண்டு செய்யவேண்டும் என உந்துதலளித்தார்.

விழிப்புணர்வு விளம்பரங்களை இலவசமாக செய்கிறார்

2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு விழிப்புணர்வு சார்ந்த விளம்பரம் ஒன்றிற்காக சச்சினை சிலர் அணுகினார்கள். இந்த கிரிக்கெட் வீரர் தொடர்ந்து 9 மணி நேரம் செலவிட்டு அந்த விளம்பரத்தை சரியாக முடித்துக் கொடுத்த்தாக ஸ்போர்ட்ஸ்கீடா அறிக்கை தெரிவிக்கிறது. அது மட்டுமல்லாது இந்த ப்ராஜெக்டிற்கு அவர் பணம் வாங்க மறுத்துவிட்டார். 

சமூக விளம்பரங்கள் மற்றும் போலியோ ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களில் இலவசமாக பங்களித்துள்ளார்.

மது மற்றும் புகைப்பிடித்தலுக்கு ஆதரவளிப்பதில்லை

திரைப்படம் துவங்குவதற்கு முன்பு வரும் விளம்பரங்கள் வாயிலாகவும் அறிவியல் ஆய்வுகள் வாயிலாகவும் புகைப்பிடித்தல் நம் ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்பதல் நாம் அனைவரும் நன்கறிவோம். இருப்பினும் ஒரு பிரபலம் இந்த பழக்கத்திற்கு ஆதரவளித்தால் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 

ஒரு பிரபல சிகரெட் ப்ராண்டின் நாலு மில்லியன் டாலர் விளம்பர வாய்ப்பை சச்சின் ஏற்றுக்கொள்ளாதது பாராட்டத்தக்கதாகும். மது சம்பந்தப்பட்ட பொருட்களை ஆதரிப்பதற்காக வழங்க இருந்த 26 கோடி ரூபாயையும் ஏற்க மறுத்துவிட்டார்.

இலவச கல்வி

சச்சினின் உதவியுடன் 200க்கும் மேற்பட்ட நலிந்த குழந்தைகள் இலவச கல்வி பெறுகின்றனர். மும்பையைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான ’அப்னாலயா’ இந்த சேவையை பெற்றுக்கொள்கின்றனர். சச்சின் இலவச கல்வியுடன் மாணவர்களுக்கு ஸ்டேஷனரி பொருட்கள், சீருடைகள் போன்றவற்றையும் வழங்குகிறார்.

புற்றுநோய்க்கு எதிரான பிரச்சாரம்

சச்சின் மேற்கொண்ட அனைத்து பிரச்சாரங்களிலும் தனித்துவமானது புற்றுநோய் குறித்த பிரச்சாரம்தான். இதன் மூலம் 1.025 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. ’புற்றுநோய்க்கு எதிரான சச்சினின் பிரச்சாரம்’ என்று ட்விட்டரில் பதிவிடப்பட்ட இந்த முயற்சி Crusade Against Cancer Foundation-னின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டதாகும். இந்த பிரச்சாரம் வாயிலாக சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் கவனத்தை பெரிதும் ஈர்த்த சச்சின் கொடை வழங்கியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரசிகர்களுக்கு தனது கையொப்பமிடப்பட்ட பேட்டை பரிசாக வழங்கினார்.

கண் தானம்

கண் தான முகாம்களுக்கு சச்சின் ஆதரவளித்து அதிகம் பேரை பங்களிக்கவைத்துள்ளார். சென்னையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை நலிந்த மக்களுக்காக மேற்கொள்ளும் கண்புரை மற்றும் கண் க்ராஃப்டிங் அறுவை சிகிச்சைகளுக்காக அக்டோபர் 2004-ம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனை சச்சினின் ஆதரவைப் பெற்று வருகிறது.

வெள்ள நிவாரணம்

2013-ம் ஆண்டு உத்தர்கண்ட் மாநிலத்தில் கடுமையான வெள்ளம் தாக்கியபோது அந்த மாநிலத்தின் நிவாரணப் பணிகளுக்காக சச்சின் 51 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார்.

சக விளையாட்டு வீரர்களுக்கு உதவுகிறார்

சக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் சிகிச்சைகளுக்காக உதவுவதிலும் சச்சின் பங்களித்து வருகிறார். சச்சினுடன் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் தல்பீர் சிங் கில் அவர்களின் இடுப்பு மாற்று சிகிச்சை செலவுகளையும் சச்சின் ஏற்றுக்கொண்டார்.

இலக்கை எட்ட உதவினார்

பள்ளிகளுக்கு நிதி உயர்த்தும் டெலிதான் முயற்சியில் பன்னிரண்டு மணி நேர கோகோ கோலா – என்டிடிவி சப்போர்ட் மை ஸ்கூல் டெலிதான் நிகழ்விற்காக ஒன்பது மணி நேரத்திற்கும் மேல் செலவிட்டார். இந்த ஒளிபரப்பின்போது பள்ளிக் குழந்தைகள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விகளுக்கும் அன்புடன் பதிலளித்தார். இதில் 7 கோடி ரூபாய் நிதி உயர்த்தப்பட்டது. இது இலக்கைக்காட்டிலும் 2 கோடி ரூபாய் அதிகமாகும்.

சச்சின் டெண்டுல்கர் விளையாட்டு மைதானத்திலும் வெளியிலும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது நாம் அனைவரும் பின்பற்றத்தக்க முன்னுதாரண முயற்சிகளாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி மோகன் | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக